2022
பெப்ரவரி 24-ம் திகதி இரசியா செய்ய ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உக்ரேனின்
அடுத்த உத்தி பெரிய தாக்குதல்களை நடத்துவதாக இருக்காது. அதிக ஆளணி இழப்புக்களையோ பெருமளவு
சுடுகலன் பாவிப்புக்களையோ செய்யும் நிலையில் உக்ரேன் இல்லை. இரசியாவின் நகர்வுகளைப்
பார்க்கும் போது அது மேலும் நிலப்பரப்புக்களைக் கைப்பற்றுவதிலும் பார்க்க தான் ஏற்கனவே
கைப்பற்றிய பிரதேசத்தை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்துகின்றது. அத்துடன் கிறிமியாவில்
உள்ள துறைமுகங்கள், கடற்கலன்கள், இரசியாவில் இருந்து கிறிமியாவிற்கு கட்டப்பட்டுள்ள
பாலம் ஆகியவற்றைப் பாதுகாப்பதிலும் இரசியா அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
கைப்பற்றிய பகுதிகளை இழந்த இரசியா
2022
பெப்ரவரி தொடங்கிய போரின் பின்னர் 2022 செப்டம்பரில்
உக்ரேனின் நிலப்பரப்பில் 27%ஐக் கைப்பற்றியிருந்த இரசியா அதன் பின் பல இடங்களில் பின்வாங்கி
தற்போது 18% நிலப்பரப்பை மட்டும் வைத்திருக்கின்றது. உக்ரேனின் வடகிழக்கில் உள்ள கார்க்கீவ்
மற்றும் தெற்குப் பதியில் உள்ள கேர்சன் ஆகிய இடங்களில் இரசியப் படையினரை உக்ரேன் பின்வாங்கச்
செய்துள்ளது. சிறிய பாக்மூட் நகரை கைப்பற்ற இரசியாவின் கூலிப்படையினர் ஆறுமாதமாக முயற்ச்சி
செய்தனர். 2023 மே 9-ம் திகதிக்கு முன்னர் அதை முழுமையாக கைப்பற்றி இரண்டாம் உலகப்
போர் வெற்றி விழாவில் மார்தட்டும் புட்டீனின் திட்டம் நிறைவேறமல் போய்விட்டது. மாறாக
இரசியக் கூலிப்படையைன் தளபது தனது படை மக்மூட் நகரை இரசியப் படையினரிடும் கையளித்து
விட்டு வெளியேறுவதாக அறிவித்தார். 2023 மே 10-ம் திகதி உக்ரேனியர்கள் மக்மூட் நகரின்
மூன்று சதுர கிமீ நிலப்பரப்பில் இருந்து இரசியர்களைப் பின்வாங்கச் செய்துள்ளனர்.
சிறு தாக்குதல்கள் பெரும் நன்மை
இரசிய
– உக்ரேன் போர் முனை அறுநூறு மைல் நீளமானதாக உள்ளது. அந்தளவு நீளமான போர் முனை உக்ரேனுக்கு
ஒரு வாய்ப்பான நிலையாகும். அதில் எங்காவது சிறிய அளவில் உக்ரேனால் இரசியாவிற்கு அவமானம்
ஏற்படக்கூடிய வகையில் தாக்குதல் செய்வது உக்ரேனுக்கு பயனுள்ளதாக அமையும். அத்தாக்குதல்களால்
இரசிய அதிபர் புட்டீனின் நெருக்கமானவர்களிடையே உக்ரேன் மீதான சிறப்பு படை நடவடிக்கை
மிகவும் விரயமானது, பயனற்றது, தொடர்ந்து நடத்த முடியாதது என்ற எண்ணத்தை ஆழமாக விதைக்கலாம்.
புட்டீனின் படைகள் மீது மிகப் பெரிய தாக்குதல்களை நடத்தினால் அவரின் எதிர்வினை எப்படி
இருக்கும் எனச் சொல்ல முடியாது என்பதை அமெரிக்கா உணர்ந்துள்ளது. அதனால் புட்டீனை இரசியர்களிடமிருந்து
தனிமைப் படுத்துவது அமெரிக்காவின் முக்கிய நோக்கமாக இருக்கும்.
சிறிதான வெற்றி விழா அணிவகுப்பு
2023
மே மாதம் இரசியா தனது 2-ம் உலகப் போர் வெற்றி
அணிவகுப்பைச் செய்தது. வழமையாக பத்தாயிரம் முதல் பதினான்காயிரம் படையினருடன்
செய்யப்படும் இந்த அணிவகுப்பு இம்முறை ஏழாயிரம் படையினருடன் செய்யப்பட்டது. அதைப் பார்வையிடப்
பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. வீட்டிலிருந்து ஒளிபரப்பை பார்க்க மக்கள் பணிக்கப்பட்டனர்.
தலைநகரைத் தவிர மற்ற பல இடங்களில் அணிவகுப்பு இரத்துச் செய்யப்பட்டது. உக்ரேனிய ஆழ ஊடுருவிகளுக்கு அஞ்சி இரத்துச் செய்யப்பட்டிருக்கலாம்.
அணிவகுப்பில் ஒரே ஒரு போர்த்தாங்கி மட்டும் பாவிக்கப்பட்டது. இரசியாவின் ஐந்தாம் தலைமுறைப்
போர்விமானம் SU-57 பங்கு பற்றியதாக காட்டப்பட்டவை கணினியால் உருவாக்கப்பட்ட அசைவுப்படங்கள்
என சில நேட்டோ நாடுகளின் ஊடகங்கள் தெரிவித்தன.
உக்ரேனின் இளவேனிற்கால தாக்குதல்
(Spring Offensive)
உக்ரேனியர்
தமது நிலப்பரப்பை ஆக்கிரமித்திருக்கும் படையினருக்கு எதிரான தாக்குதலை எப்போது செய்வார்கள்
எப்படிச் செய்வார்கள் என்பவை பெரிய கேள்விகளாக இருக்கின்றன. உக்ரேன் செய்யவிருக்கும்
தாக்குதலிற்கு “இளவேனிற்காலத் தாக்குதல்” (Spring
Offensive) எனப் பெயரும் இட்டுள்ளனர். குளிர்காலம்
முடிந்து இளவேனிற் காலத்தில் தாக்குதல் செய்யலாம் எனப் பரவலாகப் பேசப்பட்டது. குளிர்காலம்
2023 மார்ச் 20-ம் திகதியுடன் முடிவடைந்து விட்டது. ஜூன் 21-ம் திகதிவரை இளவேனிற் காலம்
தொடரும். சிலர் உக்ரேன் ஏற்கனவே தாக்குதல்களைத் தொடங்கி விட்டது என்பதற்கு:
1. மார்ச் – 23-ம் திகதி Zaorizhzhia குண்டுவெடிப்பு
2. மே 2-ம் திகதி கிறிமியாவில் எரிபொருள் களஞ்சியத்தின் மீது தாக்குதல்.
3. மே 3-ம் திகதி தென் கிழக்கு இரசியாவில் Bryansk பிரதேசத்தின் தொடருந்து
நிலைகள்மீது எறிகணைத் தாக்குதலும் அங்குள்ள விமானத் தளத்தின் மீது ஆளிலித்தாக்குதலும்.
ஆகிய தாக்குதல்களைச் சுட்டிக் காட்டுகின்றனர். வேறு சிலர் இவை முன்னேற்பாட்டுத் தாக்குதல்கள் மட்டுமே இரசியப் படைகளுக்கு பாரிய இழப்புக்களை ஏற்படுத்தக் கூடிய தாக்குதல் இனித்தான் ஆரம்பமாகப் போகின்றது என்கின்றனர்.
இரசியாவிற்கு அதிச்சிக்கு மேல் அதிர்ச்சி
உக்ரேனின்
இளவேனிற்கால தாக்குதல் (Spring Offensive) ஐ தடுப்பதற்காக 2023 மே மாதம் 6-ம் திகதி
உக்ரேனின் பல்வேறு நகரங்கள் மீது இரசியா பல ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. அவற்றில்
ஒரு மீயுயர்வேக (ஹைப்பர்சோனிக்) ஏவுகணை ஒன்றை உக்ரேன் அமெரிக்காவின் patriotic என்னும்
வான்பாதுகாப்பு முறைமை மூலம் சுட்டு வீழ்த்தியதாக உக்ரேன் அறிவித்து உலகப் படைத்துறையை
அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மீயுயர்வேக (ஹைப்பர்சோனிக்) ஏவுகணையை இடைமறித்து அழிக்கும்
வலிமை எந்த நாட்டிடமும் இல்லை என பரவலாக நம்பப்பட்டது. மீயுயர்வேக (ஹைப்பர்சோனிக்)
ஏவுகணைகளை உருவாக்குவதில் இரசியாவும் சீனாவும் அமெரிக்காவிலும் பார்க்க ஒரு படி மேல்
உள்ளன எனவும் நம்பப்பட்டது. அந்த அதிச்சியைத் தொடர்ந்து அமெரிக்கா $1.2 பில்லியன் உதவியை
உக்ரேனுக்கு வழங்கவுள்ளது என்ற செய்தி 2023 மே 9-ம் திகதி வெளிவந்தது. இது உக்ரேனின்
நீண்ட கால வான் பாதுகாப்புக்கானது எனவும் அமெரிக்கா சொன்னது. அமெரிக்காவும் மற்ற நேட்டோ
நாடுகளும் தொடர்ச்சியாக உக்ரேனுக்கு படைக்கலன்களை வழங்கிக் கொண்டிருக்க முடியாது என
நம்பிய புட்டீன் இதை எப்படி எதிர் கொள்ளப்போகின்றார்? அமெரிக்கா தனது புதிய படைக்கலன்களை
உக்ரேன் போர்க்களத்தின் இரசியாவின் புதிய படைக்கலன்களுக்கு எதிராக பாவித்து தேர்வுக்கு
உள்ளாக்குகின்றதா என்பது இரசியாவிற்கு இன்னும் ஒரு அதிர்ச்சி. இரசியாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை அமெரிக்க patriotic சுட்டு வீழ்த்திய செய்தி மே 6ம் திகதி வெளிவந்தது
உக்ரேனின்
“இளவேனிற்காலத் தாக்குதல்” (Spring Offensive) ஒரு பெரிய அதிரடித் தாக்குதலாக
இருக்காது. இரசியர்கள் எதிர்பாராத இடத்தில், எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத வகையில்
சிறிய பல தாக்குதல்களாக இருக்கும்.
இப்போது
எதிர்த்தாக்குதல் நடக்க மாட்டாது. எமது போர் வீர ர்களை போதிய படைக்கலன்களின்றி களத்திற்கு
அனுப்ப மாட்டோம் என்றார் உக்ரேனிய அதிபர்.
தங்களிடம்
பதில் தாக்குதல் பற்றிய விபரங்களைக் கேட்க வேண்டாம் என்றார் உக்ரேனிய துணைப்பாதுகாப்பு
அமைச்சர்.
2023
ஏப்ரல் 28-ம் திகதி உக்ரேனில் பல இடங்களில் இரசியா தாக்குதல்களைச் செய்திருந்தது. உக்ரேனின்
படைக்கலக் களஞ்சியங்கள் எங்கு இருக்கின்றன எனத் தெரியாத வகையில் குடிசார் உட்-கட்டுமானங்களுக்கு
நடுவில் உக்ரேன் அவற்றை மறைத்து வைத்திருக்கின்றது. அவற்றை அழிப்பதற்கு இரசியா செய்யும்
தாக்குதல்கள் பல அப்பாவி மக்களுக்கு உயிரிழப்புக்களையும் சொத்து இழப்புக்களையும் ஏற்படுத்தியுள்ளன.
உக்ரேனியர்
தமது நிலப்பரப்பை ஆக்கிரமித்திருக்கும் படையினருக்கு எதிரான தாக்குதலை எப்போது செய்வார்கள்
எப்படிச் செய்வார்கள் என்பவை பெரிய கேள்விகளாக இருக்கின்றன.
உக்ரேனியர்
தமது பதிலடியை எப்போது செய்வார்கள் என்பது கால நிலையில் பெரிதும் தங்கியுள்ளது என்றார்
உக்ரேனியப் படைத்தளபதி. பனி உருகி சேறாக இருக்கும் போது படைக்கலன்களையும் வண்டிகளையும்
நகர்த்துவது சிரமமாக இருக்கும். அதனால் இளவேனிற் காலம் தொடங்கி ஒரு மாதத்திற்கு மேலாகியும்
தாக்குதல்கள் ஆரம்பிக்கப்படவில்லை.
உக்ரேனின்
தாக்குதல் Zaporizhzhiaவைக் கைப்பற்றி பின்னர் அங்கிருந்து கிறிமியாவிற்கான வழங்கற்பாதைகளைத்
துண்டிப்பதாக அமையலாம் என சிலர் எதிர்பார்க்கின்றனர்.
2022 செப்டம்பர் 5-ம் திகதி உக்ரேன் படையினர் இரசிய ஆக்கிரமிப்புப் படையினருக்கு எதிராக் ஓர் அதிரடித் தாக்குதலை உக்ரேனின் வட கிழக்குப் பகுதியில் உள்ள கார்கீவ் மாகாணத்தில் நடத்தி அம் மாகாணத்தின் பெரும் பகுதியை கைப்பற்றினர். உக்ரேன் கிறிமியா இரசியாவிற்கு சொந்தமானது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும், உக்ரேன் தனது கிழக்குப் பிராந்தியத்தில் பெருமளவு நிலப்பரப்பை விட்டுக் கொடுக்க வேண்டும், உக்ரேன் தனது படைக்கலன்களை கைவிட வேண்டும், உக்ரேன் நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பின் இணையும் எண்ணத்தைக் கைவிட வேண்டும் போன்ற தனது கோரிக்கைகளை உக்ரேனை ஏற்க வைப்பதற்காக இரசியா உக்ரேன் மீது “சிறப்புப்படை நடவடிக்கை” என்னும் பெயரில் இரசியா உக்ரேன் மீது ஆக்கிரமிப்பு படையெடுப்பை 2022 பெப்ரவரி 24-ம் திகதி ஆரம்பித்தது. அதில் பெரும் பின் வாங்கல் ஒன்றை செப்டம்பர் 5-ம் திகதி இரசியாவை உக்ரேன் செய்ய வைத்தது.
தொலைதூரத் தாக்குதல் படைக்கலன்களையும் குறுகிய தூரத் தாக்குதல் படைக்கலன்களையும் ஒன்றிறைந்துக் கையாளும் திறனை படைத்துறையில் Combined Arms Manoeuvre (இணைக்கப்பட்ட படைக்கலன்களை கவனமாககையாள்தல்) என அழைப்பர். இதை தனது 2022 செப்டம்பர் 5-ம் திகதி தாக்குதல்களின் போது உக்ரேன் சிறப்பாகச் செய்தனர். இதனால் இரசியாவின் வழங்கல் பாதைகள், கட்டுப்பாட்டு-கட்டளைப் பணியகத்தின் புறநிலைகள்(outposts) உட்படப் பல தாக்குதல் வலிமைகள் சேதமடைந்தன.
பின்வாங்கலின் பின்னர் இரசியா செய்த நகர்வுகள்:
1.இரசியப் படையினருக்கு எதிரான சட்டம்
இரசியப் படையில் இருந்து படை நடவடிக்கைகளின் போது தப்பி ஓடுபவர்களையும் படைக்கலன்களுக்கு சேதம் விளைவிப்பவர்களையும் அதிகாரிகளுக்கு கீழ்ப்படிபவர்களையும் கடுமையாக தண்டிக்கும் சட்டத்தை 2022 செப்டம்பர் 20-ம் திகதி நிறைவேற்றியுள்ளது. இரசியப் படையினர் அதிகாரிகளுக்கு கீழ்ப்படிய மறுக்கின்றார்கள் தங்கள் சொத்துக்களை தாமே சேதப்படுத்துகின்றார்கள், படையில் இருந்து தப்பி ஓடுகின்றார்கள் என மேச்ற்கு நாட்டு ஊடகங்கள் பரப்புரை செய்தபோது இரசியா அவை பொய்யான செய்திகள் என மறுத்து வந்தது. இரசியாவின் மறுப்பை இரசியாவின் இந்த நகர்வு கேள்விக்குறியாக்கியுள்ளது. இரசியா உக்ரேனில் 2022 பெப்ரவரி 24-ம் திகதி ஆரம்பித்த போரை இரசியா போர் என்று சொல்லாமல் அதை ஒரு சிறப்புப் படை நடவடிக்கை என்றே அழைக்கின்றது. இரசியா உக்ரெனில் போர் செய்கின்றது என்று சொல்வது இரசிய சட்டப்படி குற்றமாகும். இரசிய சட்டத்தில் சிறப்பு படை நடவடிக்கை என ஒன்று இல்லை என்றபடியால் அதற்கான சட்டம் இரசியாவில் தேவைப்படுகின்றது.
2. புதிதாக மேன்படைக்கு (Reserve Force) ஆட்சேர்ப்பு
இரசியா புதிதாக மூன்று இலட்சம் பேரை தனது மேன்படையில் (Reserve Force) இணைக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. இரசியா தனது படைக்கு கட்டாய ஆட்சேர்ப்பு செய்யலாம் என்ற கரிசனையில் பல இரசியர்கள் நாட்டை விட்டு தப்பி ஓடுவதாக பிரித்தானியாவின் டெய்லி மெயில் என்னும் இரசியாவிற்கு எதிரான செய்திகளை வெளியிடும் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இரசியாவை பின் வாங்கச் செய்யும் அமெரிக்கப் படைக்கலன்கள்:
அமெரிக்கா தொடர்ந்தும் பல படைக்கலன்களை உக்ரேனுக்கு வழங்கி வருகின்றது. ஆரம்பத்தில் இருந்தே மட்டுப்படுத்தப்பட்ட வலிமைகளைக் கொண்ட படைக்கலன்களையே அமெரிக்கா உக்ரேனுக்கு வழங்கி வந்தாலும் 2022 ஜூன் மாதத்தில் இருந்து வலிமை மிக்க பல்குழல் ஏவூர்தி செலுத்திகளை அமெரிக்கா உக்ரேனுக்கு வழங்குகின்றது.
1. 155-மில்லி மீட்டர் Howitzers ஏவூர்தி செலுத்திகள்
155-மில்லி மீட்டர் Howitzers என்னும் இழுத்துச் செல்லும் ஏவுகணைச் செலுத்திகள். இந்த வகை எறிகணைச் செலுத்திகள் 122ஐ அமெரிக்கா உக்ரேனுக்கு வழங்கியிருந்தது. அவற்றிற்கான குண்டுகள் எட்டு இலட்சம் வரை அமெரிக்கா உக்ரேனுக்கு வழங்கியது.
2. அமெரிக்காவின் GMLR ஏவூர்திகள்
GMLR என்னும் துல்லியமாக எதிரியின் இலக்குகளைத் தாக்கக் கூடிய ஏவூர்திகள். இவை GPS மூலம் வழிகாட்டப்படுபவை. 70கிமீ தொலைவில் உள்ள இலக்குகளைக் கூட தாக்கி அழிக்க வல்லவை. இவற்றைச் செலுத்தக் கூடிய 155மிமீ Howitzer செலுத்திகளையும் அமெரிக்கா உக்ரேனுக்கு வழங்கியுள்ளது.
3. அமெரிக்காவின் M-31 HIMARS மற்றும் M-142 HIMARS ஏவூர்தி செலுத்திகள்
M-31 HIMARS M-142 HIMARS என்ற இருவகை High Mobility Artillery Rocket System மிகவும் நகரக் கூடிய பல் குழல் ஏவுகணைச் செலுத்தி. இவற்றால் பல தொலைதூரம் பாயும் வழிகாட்டல் ஏவுகணைகளை ஒரேயடியாக வீச முடியும். அமெரிக்கா 2022 ஜூனில் உக்ரேனுக்கு வழங்கிய இந்த ஏவுகணைச் செலுத்தியை இரசியர்களின் கட்டளை நிலையங்களையும் படைக்கலன் கழஞ்சியங்களையும் அழிக்க உக்ரேனியர்கள் பயன்படுத்துகின்றார்கள். பல M-31 HIMAR ஏவுகணைச் செலுத்திகளை அழித்ததாக இரசியர்கள் சொல்கின்றனர். உக்ரேனியர்களிடம் முப்பதிற்கும் மேற்பட்ட M-31 HIMARS இருப்பதாக நம்பப்படுகின்றது. M-31 HIMARS ஐப் பாவித்து 400இற்கு மேற்பட்ட இரசிய இலக்குகள் அழிக்கப்பட்டதாக அமெரிக்கப் பாதுகாப்புத்துறை சொல்கின்றது. HIMARS இரசியப் படைக்கலன்களின் அரைப்பங்கை அழித்து விட்டது என சில செய்திகள் வருகின்றன. ஆனால் இரசியா தனது படை நடவடிக்கைகளை தொடர்ந்து செய்கின்றது. M-142 HIMARSஇல் இருந்து வீசப்படும் ஏவூர்திகள் 200மைல்கள்(321கிமீ) தூரம் வரை பாயக்கூடியன. இவற்றைப் பாவித்து கிறிமியாவில் உள்ள இரசியப் படை நிலைகள் மீது உக்ரேனியப் படையினர் தாக்குதல் செய்கின்றனர். இதனால் கிறிமியாவில் இருந்து இரசியாவின் நீர்மூழ்கிக் கப்பல்கள் வெளியேறியதாகவும் செய்திகள் வருகின்றன.
உக்ரேன் பாவித்தஉத்தி
தெற்கில் கேர்சன் பிராந்தியத்தைக் மீளக் கைப்பற்றுவோம் கிறிமியாவை மீட்போம் எனச் சொல்லி சிறிய தாக்குதலை அங்கு தொடுத்துவிட்டு வடகிழக்கில் கார்கீவ் பகுதியில் அதிரடித் தாக்குதல் செய்தமை. இரசியப் படைத்துறையில் நிலவும் ஊழலும் இரசியாவின் பின்னடைவிற்கு காரணம். உக்ரேனியர்கள் கேர்சனைக் கைப்பற்றப் போகின்றார்கள் என்ற எண்ணத்தில் இரசியா அதிக கவனத்தை அங்கு செலுத்தி வட கிழக்குப் பகுதியில் குறைந்த கவனத்தை செலுத்தியது.
போலந்து வழங்கிய Krab Self-propelled ஆட்டிலெறிகள் பலவற்றை செப்டம்பர் 5-ம் திகது உக்ரேனியர்கள் கார்கீவ் படை நடவடிக்கையின் போது பாவித்தார்கள்.
இடர் சூழ் எதிர்காலம்
இரசியா பெரிய அளவில் படை நகர்வுகளை இனிச் செய்தால் பெரும் ஆளணி இழப்பை சந்திக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. HIMRS Howitzer ஆகியவற்றை பயன்படுத்தும் திறனை உக்ரேனியப் படையினர் மிகத் துரிதமாக கற்றுக் கொண்டனர். உக்ரேனியர்கள் இது போன்ற படைக்கலன்களை ஏற்கனவே தாமே உற்பத்தி செய்தும் பயன்படுத்தியும் உள்ளனர். உக்ரேனின் தெற்குப் பகுதியில் உள்ள கேர்சன் பிரதேசத்தில் எதிரிகளின் படைநிலைகளுக்கு பின்னால் உள்ள படைக்கலன் களஞ்சியங்கள், பாலங்கள் போன்றவற்றை Howitzer இல் இருந்து வீசப்படும் ஏவூர்திகள் மூலம் தாக்கி அழித்துள்ளனர். இரசியப் படையினர் அதிக இடர் மிக்க பறப்புக்களைச் செய்கின்றனர். அதில் பல இழப்புக்களை அவர்கள் சந்திக்கின்றனர். தாழப்பறந்து தமது படையினருக்கு ஆதரவாக குண்டுகளை வீசும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபடுகின்றனர். இரசிய வான்படையினரின் Situation Awareness தொழில்நுட்பம் உயர்த தரத்தில் இல்லை எனச் சொல்லப்படுகின்றது. Situation Awareness தொழில்நுட்பம் எதிரியின் வான்பாதுகாப்பு மற்றும் வான்எதிர்ப்பு முறைமைகளை முன் கூட்டியே அறிந்து கொள்ளும் முறைமையாகும்.
விலகி நிற்கும் இரசியாவின் நண்பர்கள்
2022 செப்டம்பர் 16-ம் திகதி உஸ்பெக்கிஸ்த்தான் நகர் சமர்கண்ட் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 22-ம் உச்சி மாநாடு நடைபெற்ற போது அங்கு வைத்து இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனை சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி ஆகியோர் தனைத்தனியே சந்தித்தனர். மோடி போர் புரிவதற்கு இது உகந்த காலம் அல்ல என புட்டீனுக்கு மோடி சொல்லியிருந்தார். ஜீ ஜின்பிங்கை சந்தித்த பின்னர் விளடிமீர் புட்டீன் சீனாவிடம் உக்ரேன் போர் பற்றிய கேள்வியும் கரிசனையும் உள்ளன என்றார். சீனாவின் பல முதலீடுகள் உக்ரேனில் இரசியாவின் படை நடவடிக்கையால் அழிக்கப்பட்டுள்ளன. சீனா உக்ரேன் போர் துரிதமாக முடிவிற்கு கொண்டு வரப்படுவதையே பெரிதும் விரும்புகின்றது.
இரசிய தேசியவாதிகளும் சில புட்டீனின் ஆதரவாளர்களும் இரசியா உக்ரேன் மீது முழுமையான போரைச் செய்ய வேண்டும் எனவும் அதிக படையினரையும் அதிக சிறப்பு படையணிகளையும் களமிறக்க வேண்டும் எனவும் புட்டீனை வற்புறுத்துகின்றனர்.
இரசிய நலன்களைப் பாதுகாக்க எதையும் செய்வோம்; எம்மிடமிருக்கும் எந்தப் படைக்கலனையும் பாவிப்போம் என புட்டீன் சூளுரைத்துள்ளார். அவர் அணுக்குண்டைப் பாவிப்பார் என மிரட்டுகின்றார் என நம்பலாம். அணுக்குண்டுகள் இரசியாவிடம் இருக்கும் வரை இரசியாவிற்கு பின்னடைவு ஏற்படாது.
தன் நிலத்தை பாதுகாப்பதற்கான போரைச் செய்து கொண்டிருந்த உக்ரேன் நில மீட்பு போரைத் தொடங்கிவிட்டது போல பல தாக்குதல்களை 2022 ஓகஸ்ட் மாத இறுதியில் இருந்து செய்கின்றது. இரசியா தனக்கு மிக மிக கேந்திரோபாய முக்கியத்துவமான கிறிமியா குடநாட்டின் பாது காப்பை உறுதி செய்ய கேர்சன் (Kherson) பிரதேசத்தைக் கைப்பற்றியிருந்தது. அதை மீட்கும் போரை ஆரம்பிப்போம் என சூளுரைத்து விட்டு உக்ரேனின் வட கிழக்குப் பகுதியில் இரசியா கைப்பற்றி வைத்துள்ள கார்கீவ் (Kharkiv) பகுதியில் உள்ள இரசியப் படையினரின் வழங்கலின் இதயமாக இருந்த தொடரூந்து நிலையத்தை கைப்பற்றியுள்ளது.
எதிர்பாராத தாக்குதல்
உக்ரேனியர்கள் இரசியர்கள் எதிர்பாராத இடத்தில் எதிர்பாராத வகையில் செய்த தாக்குதல் இரசியப் படைகளை நிலைகுலையச் செய்து விட்டது. பல கிராமங்களை விட்டு அவர்கள் பின்வாங்கியுள்ளனர். இஜியம், குபியங்ஸ்க் ஆகிய நகரங்களை இரசியர்கள் இழந்துள்ளமை உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. இரசியப் படையினரின் வழங்கல்களுக்கு முக்கியத்துவம் மிக்க தொடரூந்து நிலையங்களைக் கொண்ட இஜியம் நகரை உக்ரேனியப் படையினர் மிகத் துரிதமாக கைப்பற்றினார்கள் என்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மார் தட்டும் உக்ரேனும் மட்டம் தட்டப்படும் புட்டீனும்
இரசியாவின் தீவிர ஆதரவு சமூக வலைத்தள செயற்பாட்டாளரக்ளான Peter Lundstrom, Yuri Podolyaka ஆகியோர் இரசியாவிற்கு ஏற்பட்டுள்ள இழப்பை காரணம் காட்டி புட்டீனிற்கு எதிராக கருத்துகளை வெளியிடுவதாகவும் செய்திகள் வருகின்றன. 2022 செப்டம்பர் மாதம் 11-ம் திகதி உக்ரேனியப் படைத்தளபதி வலரி சலுஸ்னி பதினொரு நாட்களில் தமது படையினர் மூவாயிரம் சதுர கிலோ மீட்டரை மீளக் கைப்பற்றியுள்ளதாக மார் தட்டினார். அல் ஜசீரா கார்கீவில் இருந்து முன்னேறிச் சென்ற உக்ரேனியப் படையினர் இரசிய எல்லையில் இருந்து 50கிமீ தொலைவில் இருப்பதாகச் சொல்கின்றது. 2022 செப்டம்பர் 11-ம் திகதி ஞாயிற்றுக் கிழமை இரசிய அரச தொலைக்காட்சியின் வாராந்த செய்தி நிகழ்ச்சியில் உக்ரேனில் இரசியப் படையினர் செய்யும் “சிறப்பு நடவடிக்கையில்” (உக்ரேன் போருக்கு இரசியர்கள் கொடுத்துள்ள பெயர்) இந்த வாரம் மிகக்கடுமையான வாரமாக அமைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. புட்டீனின் படைநடவடிக்கைக்கு ஆதரவு வழங்கும் இரசிய மரபு வழித் திருச்சபையின் ஞாயிறு ஆராதனையிலும் அது எதிரொலித்தது. ஆனால் இரசிய பாதுகாப்புத்துறை இது புறமுதுகிடல் அல்ல வேறு இடத்திற்கு படையினர் நகர்ந்து தம் நிலையை வலிமையாக்கினர் எனச் சொல்கின்றது.
அதிருப்த்தியடைந்த புட்டீனின் ஒட்டுக்குழுத்தலைவர்
புட்டீனுக்கு நெருக்கமானவரும் உக்ரேன் போரில் முக்கிய பங்கு வகிப்பவருமான செஸ்னிய தலைவர் ரமஜான் கடிரோவ் உக்ரேன் போர் இரசியா திட்டமிட்ட படி நடக்கவில்லை என்றார். அவரது செஸ்னியப் படையினர் உக்ரேன் போரில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். செஸ்னிய விடுதலைப் போரில் இரசியாவிற்கு எதிராக போர் செய்த ரமஜான் கடிரோவ் பின்னர் புட்டீனின் ஒட்டுக்குழுவாக மாறி அவருடன் இணைந்து செயற்படுகின்றார். போர் உத்திகள் மாற்றப்படவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பல மேற்கு நாட்டு ஊடகங்கள் கார்கீவ் பகுதியில் இரசியப் படையினர் பின்வாங்கியதை உறுதிப் படுத்த ரமஜான் கடிரோவின் கருத்துக்களை ஆதாரமாக முன்வைக்கின்றனர். உக்ரேன் போருக்கு எதிரான கருத்துக்களை உடைய சில உள்ளூராட்சி உறுப்பினர்கள் புட்டீன் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன.
பழிவாங்கும் தாக்குதல்கள்
கார்கீவ் பகுதியில் இருந்து பின்வாங்கிய இரசியப் படையினர் கார்கீவில் உள்ள குடிசார் உட்கட்டுமானங்கள் மீது தாக்குதல் நடத்தி பழிவாங்குவதாக உக்ரேன் குற்றம் சாட்டுகின்றது. அத்தாக்குதலில் கார்கீவில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாம். உக்ரேன் மீதான தாக்குதல்களுக்கு ஆதரவளிக்கும் இரசியர்கள் உக்ரேனிய் உட்கட்டுமானங்கள் மீதான தாக்குதலைப் பாராட்டியதுடன் அவை 2022 மார்ச் மாதத்தில் செய்திருக்க வேண்டியவை எனவும் சொல்கின்றனர்.
வான் பொய்ப்பின் தானை பொய்க்கும்
இரசியப் போர் இரசியா எதிர்பார்த்திலும் பார்க்க அதிக காலம் நீடிப்பதற்கும் இரசியா அதிக இழப்பை சந்திப்பதற்கும் இரசியாவின் வான் படை சிறப்பாக செயற்பட முடியாமை முதன்மைக் காரணமாக அமைந்துள்ளது. உக்ரேனிலும் பார்க்க பத்து மடங்கு வான் படை வலிமையைக் கொண்ட இரசியாவால் உக்ரேனின் வான்படையையும் அதன் வான் பாதுகாப்பையும் செயலிழக்கச் செய்ய முடியாமல் இரசியா இருக்கின்றது. இதனால் துணிவடைந்த உக்ரேனியர்கள் இரசியா கைப்பற்றிய Kherson பிராந்தியத்தை மீளக் கைப்பற்றும் படை நடவடிக்கையை 2022 ஓகஸ்ட் 30-ம் திகதி ஆரம்பித்தனர். 2022 பெப்ரவரி மாதம் இரசியா உக்ரேன் மீது படையெடுக்கும் போது இரசியாவிடம் உக்ரேனிலும் பார்க்க எண்ணிக்கையில் அதிகமான தரத்தில் உயர்வான விமானங்கள் இருந்தன. அதனால் உலகின் முன்னணி வான்படை எனப்படும் 1511 போர்விமானங்களைக் கொண்ட இரசியாவிற்கு எதிராக 98 பழைய விமானங்களைக் கொண்ட உக்ரேனால் தாக்கு பிடிக்க முடியாது என போரின் ஆரம்பத்தில் எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் போர் தொடங்கி ஆறு மாதங்கள் கடந்த நிலையில் சோவியத் ஒன்றிய காலத்து பழைய MIG-29 போர் விமானங்களில் உக்ரேனியரகள் அமெரிக்கா வழங்கிய புதிய HARM (High Speed Anti Radar missiles) ஏவுகணைகளை வெற்றிகரமாகப் பொருத்தி அவற்றை இரசியப் படை நிலைகள் மீது ஏவிவருகின்றனர். சோவியத் ஒன்றிய காலத்தில் உருவாக்கிய SU-34, SU-35 ஆகிய தாக்குதல் விமானங்களையும் MiG-29, SU-27 ஆகிய சண்டை விமானங்களையும் இப்போதும் உக்ரேன் போரில் பாவிக்கின்றது. அதே போர் விமான ங்களை இரசியா பல வகைகளிலும் மேம்படுத்தி உக்ரேன் போரில் இரசியா பாவிக்கின்றது. இரசிய போர் விமானங்கள் உக்ரேன் போரில் எதிர்பார்த்த அளவு சிறப்பாக செயற்பட முடியாமல் போனதால் படைத்துறை நிபுணர்கள் தாம் போட்டக் கணக்கு தப்பானது என ஐயப்படுகின்றனர். இதனால் எதிர் காலத்தில் உலகப் படைக்கலச் சந்தையில் இரசியப் போர் விமான விற்பனையை பாதிக்கப்படலாம்.
வானாதிக்கம் செய்ய முடியாத இரசியா
2022 பெப்ரவரி மாதம் இரசியா உக்ரேன் மீது படையெடுக்கும் போது இரசியாவிடம் உக்ரேனிலும் பார்க்க எண்ணிக்கையில் அதிகமான தரத்தில் உயர்வான விமானங்கள் இருந்தன. அதனால் உலகின் முன்னணி வான்படை எனப்படும் 1511 போர்விமானங்களைக் கொண்ட இரசியாவிற்கு எதிராக 98 பழைய விமானங்களைக் கொண்ட உக்ரேனால் தாக்கு பிடிக்க முடியாது என போரின் ஆரம்பத்தில் எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் போர் தொடங்கி ஆறு மாதங்கள் கடந்த நிலையில் சோவியத் ஒன்றிய காலத்து பழைய MIG-29 போர் விமானங்களில் உக்ரேனியரகள் அமெரிக்கா வழங்கிய புதிய HARM (High Speed Anti Radar missiles) ஏவுகணைகளை வெற்றிகரமாகப் பொருத்தி அவற்றை இரசியப் படை நிலைகள் மீது ஏவிவருகின்றனர். சோவியத் ஒன்றிய காலத்தில் உருவாக்கிய SU-34, SU-35 ஆகிய தாக்குதல் விமானங்களையும் MiG-29, SU-27 ஆகிய சண்டை விமானங்களையும் இப்போதும் உக்ரேன் போரில் பாவிக்கின்றது. அதே போர் விமான ங்களை இரசியா பல வகைகளிலும் மேம்படுத்தி உக்ரேன் போரில் இரசியா பாவிக்கின்றது. இரசிய போர் விமானங்கள் உக்ரேன் போரில் எதிர்பார்த்த அளவு சிறப்பாக செயற்பட முடியாமல் போனதால் படைத்துறை நிபுணர்கள் தாம் போட்டக் கணக்கு தப்பானது என ஐயப்படுகின்றனர். இதனால் எதிர் காலத்தில் உலகப் படைக்கலச் சந்தையில் இரசியப் போர் விமான விற்பனையை பாதிக்கப்படலாம். 1967-ம் ஆண்டு அரபு-இஸ்ரேல் போர், 1971 பங்களாதேசப் போர் ஆகியவற்றை வான் மேலாதிக்கத்தாலேயே வெற்றி கொள்ளப்பட்டது. 1991-ம் ஆண்டு குவைத்தை ஈராக் ஆக்கிரமித்த போது நேட்டோ படையினர் ஓரு சில மணித்தியாலங்களுக்குள் ஈராக்கினதும் குவைத்தினதும் வான்பரப்பை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இரசியா உக்ரேனின் 127,484 சதுர கிலோ மீட்டரைக் கைப்பற்றியுள்ள நிலையில் வெறும் மூவாயிரம் சதுர கிமீட்டரை (உக்ரேன் அதிபர் ஆறாயிரம் சகிமீ என்கின்றார்) உக்ரேனியப் படையினர் மீளக் கைப்பற்றியமை அவர்களின் வெற்றியின் தொடக்கம் என்றோ இரசியாவிற்கு பேரிழப்பு என்றோ இப்போது சொல்ல முடியாது. மேலும் பிரதேசங்களை உக்ரேன் கைப்பற்றிய பின்னர்தான் போரின் போக்கைப் பற்றி எதையும் உறுதியாகச் சொல்ல முடியும்.
அலெக்சாண்டர்
டுகின் ஒரு தத்துவ ஞானி போல் தாடியுடன் தோற்றமளிப்பவர். இவருக்கு
சொந்தமான காரில் பயணித்த இரவது மகள் இரசியாவின் மொஸ்கோ நகரில் 2022 ஓகஸ்ட் மாதம் 20-ம்
திகதி கொல்லப்பட்டார். டுகின் ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் புலமை
மிக்கவர். இவர் புட்டீனின் ராஸ்புட்டீன் எனவும் அழைக்கப்படுபவர். ராஸ்புட்டீன் (1869-1916)
இரசிய மன்னருக்கு ஆலோசகராக இருந்த பிரபலமான ஒருவர். அலெக்சாண்டர் டுகின்
அவர்களின் அமெரிக்காவிற்கு எதிரான கருத்துக்கள் சீனாவிலும் ஈரானிலும் துருக்கியிலும்
பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. உலகமயமாதலுக்கு எதிரான கருத்துக்களை உலகளாவிய அடிப்படையில்
ஒருங்கிணைப்பதில் முன்னின்றவர் அலெக்சாண்டர் டுகின். புட்டீனை
எதிர்ப்பவர்கள் யாரும் இரசியாவில் இல்லை, அப்படி யாராவது இருந்தால் அவர்களை மருத்துவ
பரிசோதனைக்கு உள்ளாக்க வேண்டும் என்பது டக்கினின் கருத்து. அது மட்டுமல்ல புட்டீன்
நிலையானவர், அகற்றப்பட முடியாதவர், எங்கும் நிறைந்தவர், எல்லாம் அவரே என எழுதியவர்
டுகின்.
உக்ரேன் தனிநாடாக இருக்க கூடாது
உக்ரேன்
இரசியாவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பதில் மிகத் தீவிரமாக இருப்பவர். இரசிய
வலதுசாரி தேசியவாதத்தின் முதன்மை அடையாளமாக கருதப்படுபவர். இரசியாவின் உலகம் யூரேசிய(ஐரோப்பா-ஆசியா)
பெருநிலப்பரப்பை ஒன்றாக ஆளவேண்டும் எனக் கருதுபவர். புதிய இரசியா (Novorossia) என்ற
எண்ணக்கருவிற்கு புத்துயிர் கொடுத்தவர். இவர் 1997இல் எழுதிய புவிசார் அரசியலின் அடிப்படை
என்னும் நூலில் உக்ரேன் ஒரு தனிநாடாக இருப்பது என்பது புவிசார் அரசியலில் அடிப்படை
அற்றது என வாதிட்டிருந்தார். அந்த நூல் தான் 2014இல் புட்டீன் கிறிமியாவையும் உக்ரேனின்
கிழக்குப்பகுதியையும் ஆக்கிரமிக்க வழிவகுத்தது எனக் கருதப்படுகின்றது. அப்போது பேச்சு
வார்த்தை வேண்டாம், உக்ரேனியர்களைக் கொல்லுங்கள், கொல்லுங்கள், கொல்லுங்கள் எனச் சொன்னவர்
டுகின்.
நிலவலிமையும் கடல் வலிமையும்
இரசியாவும்
சீனாவும் இணைந்து பல்துருவ ஆதிக்க உலகை உருவாக்க வேண்டும் என ஒரு தொடர் சொற்பொழிவை
ஆற்றியவர். இரசிய சீன ஒத்துழைப்பை இவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார். 2022-ம்
ஆண்டு ஏப்ரல் மாதம் இரசிய சீன வெளியுறவுத் துறை அமைச்சர்களிடையே நடந்த சந்திப்பின்
போது இந்த கருத்தை இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டனர். அலெக்சாண்டர் டுகின்
அவர்களின் கருத்துப்படி ஆசிய-ஐரோப்ப பெரு நிலப்பரப்பில் நடுவில் இருக்கும் இரசியா
உலகின் பெரும்பகுதி நிலபரப்பில் ஆதிக்கம் செலுத்தக் கூடியது. உலக கடற்பரப்பின் பெரும்பகுதியில்
ஆதிக்கம் செலுத்தும் ஐக்கிய அமெரிக்காவுடன் போட்டி போடக் கூடிய நாடாக இரசியாவில் நில-வலிமை
உள்ளது என முழங்குபவர் டுகின். ஐரோப்பாவின் மேற்கு எல்லையில்
உள்ள ஐரிஸ் தலைநகர் டப்ளின் முதல் இரசியாவின் (ஆசியாவில்) உள்ள விளடிவொஸ்டொக் நகர்வரையிலான
பெரும் பிரதேசம் இரசியாவின் ஆட்சிக்கு உட்பட்டது என்ற பேராசை கொண்டவர் டுகின்.
புத்தியலுக்கு(Modernity) எதிரான போரில்
ஈரான் முன்னணி
ஈரானுக்கு
அடிக்கடி பயணம் மேற்கொண்டு அங்கு தன் கருத்துகளைப் பரப்பும் அலெக்சாண்டர் டுகின் ஈரானிய மதவாத தலைவர்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணுகின்றார்.
அமெரிக்கா முன்னெடுக்கும் புத்தியலுக்கு(Modernity) எதிராக பல நாடுகள் செய்யும் போரில்
ஈரான் முன்னணியில் நிற்கின்றது என டுகின் பாராட்டியுள்ளார். துருக்கியில்
AKP என அழைக்கப்படும் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியின் அழைப்பின் பேரில் அங்கு
சென்று டுகின் சொற்பொழிவாற்றியுள்ளார். துருக்கியிலும் ஈரானிலும்
அமெரிக்காவிற்கு எதிரான கருத்துக்களை அவர் விதைக்கின்றார்.
மேற்கு ஐரோப்பவிலும் அமெரிக்காவிலும் டுகின் பரப்புரை
இரசிய
வங்கி உரிமையாளரான Konstantine Malofeev அலெக்சாண்டர் டக்கினின் பரப்புரைகளுக்கு நிதி
உதவி வழங்கி வருகின்றார். அந்த நிதி உதவியுடன் இத்தாலியின் லீக், பிரான்சில் ரலி, ஒஸ்ரேஇயாவின்
சுதந்திரக் கட்சி ஆகிய வலதுசாரிக் கட்சிகளுடன் டுகின் தொடர்புகளை
ஏற்படுத்தியுள்ளார். டுகின் அமெரிக்க வலதுசாரியான முன்னாள் குடியரசுத்
தலைவர் டொனால்ட் டிரம்பை தான் இதயம் நிறைய ஆதரிப்பதாக தெரிவித்திருந்தார். அமெரிக்காவில்
ஒரு புவிசார் அரசியல் குழப்ப நிலையை உருவாக்க பிரிவினைவாதிகள், இனவாதிகள், போன்ற பல்வேறு
எதிர்ப்பாளர்களை தூண்ட வேண்டியது அவசியம் என டுகின் எழுதியிருந்தார்.
2022இல்
பாக்கிஸ்த்தானையும் சீனாவையும் சேர்ந்த அறிஞர்களுக்கு உரையாற்றுகையில் அலெக்சாண்டர்
டுகின் உக்ரேனில் தோல்வையைச் சந்திப்பதிலும் பார்க்க அணுக்குண்டை
வீசி போரை இரசியா முடிக்கும் எனச் சொல்லியிருந்தார்.
எஸ்த்தோனியாமீது இரசியா நடவடிக்கை எடுக்குமா?
அலெக்சாண்டர்
டுகின் அமெரிக்காவினாலும் உக்ரேனினாலும் வெறுக்கப்பட வேண்டிய
ஒருவர் என்பது நிச்சயம். டக்கினும் அவரது மகளும் ஒரு நிகழ்வில் கலந்து விட்டு ஒன்றாக
வெளியேறுவதாக இருந்தது. அலெக்சாண்டர் டுகின் வேறு இடத்திற்கு
போக வேண்டி இருந்ததால் அவரது மகள் மட்டும் அவரது காரில் வீடு திரும்பும் வேளையில் குண்டுத்
தாக்குதல் அக்கார் மீது செய்யப்பட்டது. அலெக்சாண்டருக்கு வைக்கப்பட்ட குண்டில் அவர்
மகள் பலியானார் என்பதில் ஐயமில்லை. உக்ரேனியப் பெண் ஒருவர் 2022 ஜூலை மாதம் இரசியாவிற்கு
தன் மகளுடன் வந்தார் என இரசியா சொல்கின்றது. உக்ரேனின் உளவுத்துறை அவரை அனுப்பியதாகவும்
குற்றம் சாட்டும் இரசியா இக்கொலையை செய்துவிட்டு எஸ்த்தோனியாவிற்கு அவர் தப்பிச் சென்று
விட்டதாகச் சொல்லுவதுடன் கொலையாளியை கைது செய்து நாடு கடத்தும்படி எஸ்த்தோனியாவை இரசியா
மிரட்டுகின்றது. எஸ்த்தோனியா ஒரு நேட்டோ உறுப்பு நாடாக இருப்பதால் அதற்கு எதிரான இரசிய
நடவடிக்கை ஒரு இரசிய-நேட்டோ முறுகலை உருவாக்கலாம்.
உக்ரேன்
அலெக்சாண்டர் டக்கினின் கொலைக்குப் பின்னால் இருக்கின்றது என்ற குற்றச் சாட்டை உக்ரேனிய
அரசு கடுமையாக மறுக்கின்றது.
சில மேற்கு
நாட்டு ஊடகங்கள், உக்ரேன் போரில் பெரும் பின்னடைவைச் சந்திக்கும் இரசியா, தனது போரை
மேலும் தீவிரப்படுத்த அலெக்சாண்டர் டக்கினை கொலை முயற்ச்சி நாடகமாடி அவரது மகளைப் பலியெடுத்தது
எனக் குற்றம் சாட்டுகின்றது.
அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தில் இருந்து வீசப்பட்ட இரண்டு ஏவுகணைகளால் அல் கெய்தாவின் தலைவர் ஐமன் அல் ஜவஹிரி கொல்லப்பட்டார். ஆப்கான் தலைநகர் காபுலில் அவர் மறைந்திருந்த வீடு ஒன்றின் மீது 2022 ஜூலை 31-ம் திகதி ஞாயிற்றுக் கிழமை அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ செய்த படை நடவடிக்கையால் ஐமன் அல் ஜவஹிரி கொல்லப்பட்டார். 2001-ம் ஆண்டு அமெரிக்காவில் செய்யப்பட்ட இரட்டைக் கோபுரத்தாக்குதலைச் செயற்படுத்துவதில் அல் கெய்தா தலைவர் பின் லாடனுடன் அல் ஜவஹிரியும் இணைந்து செயற்பட்டார் என்பதால் அதற்கான நீதி வழங்கப்பட்டதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. அத்தாக்குதலில் 2977பேர் கொல்லப்பட்டனர். கென்யா தன்சானியா ஆகிய நாடுகளுக்கான அமெரிக்க தூதுவரகங்களில் அல் கெய்தா தாக்குதல் நடத்தி 244 அமெரிக்கர்களை கொன்றதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டுகின்றது.
25மில்லியன் டொலர் கொலை
அல் ஜவஹிரியின் தலைக்கு அமெரிக்கா 25மில்லியன் டொலர் பரிசுத்தொகையையும் அறிவித்திருந்தது. ஜவஹிரியின் இருப்பிடத்தை உறுதி செய்தபின்னர் அவரைக் கொல்ல தான் அனுமதி வழங்கியதாக அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். 2011-ம் ஆண்டு பின் லாடனை பாக்கிஸ்த்தானில் வைத்துக் கொலை செய்தபின்னர் அல் கெய்தாவின் தலைமைப் பொறுப்பை தற்போது 71 வயதான எகிப்த்திய கண் அறுவை மருத்துவரான ஐமன் அல் ஜவஹிரி ஏற்றிருந்தார். எத்தனை காலமானாலும் எங்கு மறைந்திருந்தாலும் அமெரிக்காவிற்கு எதிரான பயங்கரவாதிகளை நாம் அழிப்போம் என அமெரிக்கா மார் தட்டியுள்ளது. அத்துடன் ஆப்கானிஸ்த்தான் பயங்கரவாதிகளின் புகலிடமாக அனுமதிக்க மாட்டோம் எனவும் அறிவித்திருந்தது. ஆப்கானிஸ்த்தானில் அதிகாரத்தில் உள்ள தலிபான்கள் தாக்குதலை உறுதி செய்தது ஆனால் கொல்லப்பட்டவர் யார் என்பதைக் கூறவில்லை.
கண் அறுவை மருத்துவர் (Eye Surgeon)
இளவயதில் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பில் இணைந்து செயற்பட்ட ஐமன் அல் ஜவஹிரி 15வது வயதில் எகிப்திய அரசால் கைது செய்யப்பட்டார். மருத்துவரான பின்னர் பாக்கிஸ்த்தான் சென்று சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக போராடிய ஆப்கானிஸ்த்தான் போராளிகளுக்கு பாக்கிஸ்த்தானில் வைத்து மருத்துவ உதவிகளை செய்துவந்தார். 1998-ம் ஆண்டு கென்யாவிலும் தன்சானியாவிலும் அமெரிக்க தூதுவரகங்களில் செய்யப் பட்ட தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்காவால் மிகவும் தேடப்படும் ஒருவராக அவர் இருந்தார். திட்டமிட்டு தாக்குதல்கள் செய்வதில் அவர் வல்லவராக கருதப்படுகின்றார். அவர் கொல்லப்படும் போது அவர் மட்டும் வீட்டில் இருந்தார் எனவும் அவரது குடும்பத்தினர் வேறு இடங்களில் இருந்தனர் எனவும் நம்பப்படுகின்றது.
AGM-114 Hellfire ஏவுகணைகள்
Air to Ground Missiles 114 Hellfire என்னும் வானில் இருந்து தரைக்கு ஏவப்படும் ஏவுகணைகள் இரண்டால் ஜவஹிரி கொல்லப்பட்டார். 45கிலோ எடையுள்ள துல்லியத் தாக்குதல் செய்யக் கூடிய இந்த ஏவுகணைகளை பெறுமதி மிக்க இலக்குகள் மீது தாக்குதல் செய்ய அமெரிக்கப்படையினர் பாவித்ஹ்டு வருகின்றனர். 2004-ம் ஆண்டு அவற்றைப் பாவித்து ஹமாஸ் தளபதியை இஸ்ரேலியர் கொலை செய்தனர். அமெரிக்காவில் பிறந்து பின்னர் அல் கெய்தாவில் இணைந்த இஸ்லாமிய போதகரான அனவர் அல் அவ்லாக்கியின் கொலைக்கும் அவ் ஏவுகணைகள் பாவிக்கப்பட்டன. அல் ஷஹாப் தலைவர் அகமட் அப்டி கொடானே சோமாலியாவி வைத்து Air to Ground Missiles 114 Hellfire ஏவுகணையால் கொல்லப்பட்டார்.
சிஐஏயின் எல்லை தாண்டிய பயங்கரவாதம்
ஒரு பயங்கரவாத அமைப்பாக பலரும் கருதும் அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ பராக் ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில் ஒரு படைத்துறைப் பிரிவை உருவாக்கியது. அதன் படையணிகள் வெளிநாடுகளில் செய்யும் கொலைகள் அமெரிக்காவின் சட்டங்களுக்குள் உட்பட்டதல்ல அமெரிக்க அரசுக்கோ மக்களுக்கோ பொறுப்புக் கூற வேண்டிய நிலையிலும் அவை இல்லை. பல நாடுகளில் சிஐஏயின் படையினர் தளம் அமைத்து பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சில நாடுகளில் அந்த நாடுகளுக்கு தெரியாமலே அவர்களின் படைத்தளம் அமைந்துள்ளது. பாக்கிஸ்த்தானில் சிஐஏயின் படைத்தளம் அமைக்க இம்ரான் கான் ஒத்துக் கொள்ளவில்லை. அவர் அதன் பின்னர் ஆட்சியை இழந்தார். 2022-ம் ஆண்டு ஏப்ர மாதத்தில் அல் ஜவஹிரி ஆப்கானிஸ்த்தானில் மறைந்திருக்கும் இடத்தை சிஐஏ அறிந்து கொண்டது. அவர் தனது வீட்டின் உப்பரிகையில் நிற்பதையும் சிஐஏ (Balcony) அவதானித்தது. அதன் பின்னர் அவர் தொடர்ச்சியாக அவதானிக்கப்பட்டு அவரது அடையாளம் நடமாடும் விதம் உறுதி செய்யப்பட்டது. ஆப்கானிஸ்த்தானில் இப்போது திறமையாக சிஐஏயால் உளவுத் தாக்குதல் செய்ய முடியும் என்பது நிருபணமாகியுள்ளது.
2020-ம் ஆண்டு அமெரிக்காவும் தலிபானும் செய்து கொண்ட உடன்பாட்டின் படி அல் கெய்தா ஆப்கானிஸ்த்தானில் செயற்பட தலிபான் அனுமதிக்காது என ஒத்துக் கொள்ளப்பட்டிருந்தது. தலிபான் உடன்பாட்டை மீறியது எனச் சொல்லி இனி அமெரிக்காவும் உடன்பாட்டை மீறலாம்.
அரசியலமைப்பு நெருக்கடி: அரசியலில் ஏற்படும் முதன்மையான நெருக்கடிகளுக்கு அரசியலமைப்புச் சட்டத்தினிற்குள் அல்லது கடந்த கால முன்மாதிரிகளை வைத்துக் கொண்டோ தெளிவான தீர்வு கொண்டுவர முடியாத நிலையை அரசியலமைப்பு நெருக்கடி என்பார்கள். அரசியலமைப்பு நெருக்கடி ஏற்படும் போது அரசு செயற்பட முடியாத நிலை உருவாகும்.
அரசியலமைப்பு
நெருக்கடி உருவாகும் சூழல்கள்:
1, ஒரு
நெருக்கடிக்கான தீர்வு அரசியலமைப்பில் இல்லாதபோது
2. அரசியலமைப்பின்
வாசகங்களுக்கான வியாக்கியாங்களில் முரண்பாடு நீதித்துறையில் ஏற்படும்போது.
3. அரசியலமைப்பில்
உள்ளவற்றை நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்படும்போது.
4. அரச
நிறுவனங்கள் செயற்பட முடியாத போது. உதாரணமாக அரசமைப்பின் படி தேர்தல் நடத்த வேண்டிய
நேரத்தில் அதை நடத்த முடியாத நிலை ஏற்படுதல்.
அரசியலமைப்பு
நெருக்கடிக்கான உதாரணங்கள்
1. உலக
அரசியல் வரலாற்றில் பல அரசியலமைப்பு நெருக்கடிகள் ஏற்பட்டதுண்டு. தென் ஆபிரிக்காவில்
கறுப்பின மக்கள் வாக்களிக்க முடியாமல் அதன் அரசியலமைப்பு தடை செய்திருந்தது. கலப்பின
மக்களும் வாக்களிக்க முடியாது என 1950இல் சட்டம் மாற்றப்பட்டதை உச்சநீதி மன்றம் நிராகரித்தது.
அதை அரசு ஏற்க மறுத்த போது அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட்டது.
2. 1975இல்
ஒஸ்ரேலியாவின் தொழிற்கட்சி தலைமை அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டபோது ஆளுநர் நாயகம்
தாராண்மைவாதக் கட்சியைச் சேர்ந்தவரை தலைமை அமைச்சராக நியமித்தார். அதற்கு எதிராக நாடாளுமன்ற
உறுப்பினர்கள் கிளர்ந்த போது அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட்டது.
3. ஐக்கிய
அமெரிக்காவில் நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக குடியரசுத் தலைவர் செயற்படும்
போது அரசியலமைப்பு நெருக்கடி அடிக்கடி ஏற்படுவது உண்டு.
4. 2007-ம்
ஆண்டு உக்ரேனிய நாடாளுமன்றத்தை குடியரசு தலைவர் கலைத்தமையை நாடாளுமன்றம் ஏற்க மறுத்த
போது பிணக்கை உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்காமல்
விட்ட போது அரசியலமைப்பு நெருக்கடி ஏற்ப்பட்டது.
குடியரசுத்
தலைவராக 2019இல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கோத்தபாய ராஜபக்ச 2022 ஜூலை 9-ம் திகதி
நாட்டில் ஏற்பட்ட குழப்பத்தைத் தொடர்ந்து நாட்டில் இருந்து வெளியேறி விட்டார். தனது
வாயால் தான் பதவி விலகுவதாக அவர் பகிரங்கமாக அறிவிக்கவில்லை. அவர் தனது பதவி விலகல்
கடிதத்தை கையளிப்பார் என முதலில் அறிவித்த இலங்கை நாடாளுமன்ற அவைத்தலைவர் (சபாநாயகர்)
மஹிந்த யாப்பா அபேவர்த்தன பின்னர் அவர் கடிதத்தில் கையொப்பமிட்டார் என்றார். ஆனால்
2022 ஜூலை 14ம் திகதை காலை 10 மணியளவில் வெளிவந்த செய்திகளின் படி குடியரசுத் தலைவர்
அவைத்தலைவரிடம் பதவி விலகல் கடிதத்தை கையளிக்கவில்லை. பொதுவாக குடியரசுத் தலைவர் வெளிநாடு
செல்லும் போது தலைமை அமைச்சர் தற்காலிக குடியரசுத் தலைவராக பதவி ஏற்கலாம். குடியரசுத்
தலைவர் வெளிநாடு சென்றார் என்பது கூடிய முறைப்படி அறிவிக்காத நிலையில் தலைமை அமைச்சர்
ரணில் விக்கிரமசிங்க அவசரகாலச் சட்டத்தை அறிவித்தார். பின்னர் குடியரசுத் தலைவராக பதவி
ஏற்றுக் கொண்டார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவும் அவரது ஐக்கிய மக்கள்
சக்திக் கட்சியின் இன்னொரு உறுப்பினரான பீல்ட் மாஷல் சரத் பொன்சேக்காவும் ரணிலின் பதவி
ஏற்றல் செல்லுபடியற்றது என்கின்றனர். மக்கள் விடுதலை முன்னணியின் அனுர குமார திசாநாயக்கவும்
ரணிலை குடியரசுத் தலைவராக ஏற்கவில்லை. இவர்கள் பாதுகாப்புத்துறையினர், காவற்துறையினர்
உட்பட அரசைச் சேர்ந்தவரகள் ரணிலின் உத்தரவிற்கு இணங்க செயற்படக்கூடாது எனப் பகிரங்க
அறிக்கை விட்டுள்ளனர். கோத்தபாய ராஜபக்சவின் ஆளும் மக்கள் முன்னணியின் கணிசமான நாடாளுமன்ற
உறுப்பினரகள் ரணிலை ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் இலங்கை சுதந்திரக் கட்சி (மைத்திரிபால
சிரிசேன), தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவையும் ரணிலுக்கு ஆதரவாக இல்லை. இத்தனை
பிரச்சனைகளினதும் நடுவண் புள்ளியாகிய மக்கள் எழுச்சியை செய்தவர்களில் முதன்மையானவர்களாகிய
அனைத்துப் பல்கலைக் கழக மாணவர் அமைப்பு ரணில் பதவி ஏற்பை கடுமையாக எதிர்த்ததுடன் அந்த
அமைப்பும் மற்ற கிளர்ச்சிக்காரர்களும் தலைமை அமைச்சரின் அரச வதிவிடமான அலரி மாளிகையை
தங்கள் வசமாக்கியுள்ளனர்.
கோத்தபாய ராஜபக்ச தான் இருக்கும் போது உள்ள குழப்பத்திலும் பார்க்க தான் போன பின்னால் அதிக குழப்பம் இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயற்பட்டிருக்கலாம். தனது பதவிலகல் கடிதத்தை சமர்ப்பிக்காமல் விட்டால் தான் தனது பதவிக் காலம் முடியமுன்னர் நாடு திரும்பி மீண்டும் பதவி ஏற்கலாம் என்ற எண்ணத்துடனும் அவர் செயற்ப்பட்டிருக்கலாம்.
2022 ஜூலை 14-ம் திகதி பிற்பகல் மூன்று மணிக்கு (பிரித்தானிய நேரம்) கோத்தபாய மின்னஞ்சல் மூலம் தன் பதவி விலகல் கடிதத்தை அனுப்பியதாக செய்தி வந்தது. அங்கும் ஒரு குழப்பம். மின்னஞ்சல் மூலமான பதவி விலகல் கடிதம் அரசியலமைப்பில் இல்லை. அதற்கான முன்மாதிரியும் இல்லை. அவர் வெளிநாட்டில் இருந்தால் அந்த நாட்டில் உள்ள இலங்கையின் தூதுவரகத்தில் பதவி விலகல் கடிதத்தை வழங்குவது ஏற்புடையதாக இருக்கலாம். பிரித்தானிய நேரம் 16:47இற்கு பிரித்தானிய கார்டியன் பத்திரிகையின் இணையச் செய்தியின் படி சிங்கப்பூரில் இருந்து பதவி விலகல் கடிதம் விமான மூலம் அவைத் தலைவருக்கு போய்ச் சேர்ந்ததாகவும் அதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்த பின்னர் ஜூலை 15-ம் திகதி அவைத்தலைவர் பதவி விலகல் பற்றி அறிவிப்பார் என அறியக் கூடியதாக உள்ளது.
அரசியலமைப்பு நெருக்கடி மட்டுமல்ல இரத்தக்களரி
கோத்தபாய
ராஜபக்ச குடியரசுத் தலைவராக இருக்கும் வரை அவருக்கான அரசுறவியல் கவசம் (Diplomatic
Immunity) பல நாடுகளில் கிடைக்கும். அதனால் அவர் தனக்கும் தனது உடன்பிறப்புக்கள் உள்ளிட்ட
குடும்பத்தினர்க்கு உரிய பாதுகாப்பு கிடைக்கும் வரை பதவி விலகல் கடிதம் சம்ர்ப்பிக்க
மாட்டர் என்றே தோன்றுகின்றது. நாடாளுமன்ற அவைத்தலைவர் அபேவர்த்தன பதில் குடியரசுத்
தலைவர் பதவி ஏற்ற நிலையில் மக்களால் தெரிந்து எடுக்கப்பட்ட அதிபர் பதவி விலகியுள்ளார்
என்பதற்கான கடிதம் இல்லாத சூழலில் அவர் பதவி விலகியுள்ளார் என்பதற்கான சட்ட ஆதாரங்களைத்
தான் தேடுவதாக அறிவித்துள்ளார். பதவி விலகல் கடிதம் இல்லாமல் அவர் பதவி விலகினார் என்பதை
அபேகுணவர்த்தனவோ அல்லது சட்ட மா அதிபரோ உறுதிப்படுத்தாவிடில் இலங்கையில் அரசியலமைப்பு
நெருக்கடி ஏற்பட வாய்ப்புண்டு. அதை “போராட்டம்” (அரகலய) என்னும் பெயரில் கிளர்ச்சி
செய்பவர்களை மேலும் சினப்படுத்தலாம். வெளிநாடுகளின் ஆதரவுடன் ரணிலை பதவியில் தக்க வைக்க
படையினர் முயன்றால் இரத்தக் களரி ஏற்பட வாய்ப்புண்டு.
அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜோ பைடன் தைவான் சீனாவின் ஒரு பகுதி அல்ல என்றார். இது அமெரிக்காவின் நிலைப்பாடல்ல என்றார் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சலைவன். அமெரிக்கா தைவான் தொடர்பாக வெளியில் சொல்வது வேறு அதன் செயற்பாடு வேறு. சீன ஆட்சியாளர்கள் தைவான் சீனாவின் ஒரு மாகாணம் என தொடர்ச்சியாக சொல்லி வருகின்றனர். ஆனால் தைவான் எல்லா வகையிலும் ஒரு தனிநாடாகவே செயற்படுகின்றது.
சீனாவின் ஐநா உறுப்புரிமை தைவானிடம்
1945
ஒக்டோபரில் ஐக்கியநாடுகள் சபை உருவான போது சீனாவும் அதில் ஓர் உறுப்பு நாடாகியது. அது
பொதுவுடமை சீனா உருவாக முன்னர் இருந்த மக்கள் சீனக் குடியரசாகும். அதன் ஒரு பகுதியாக
தைவானும் இருந்தது. 1949 ஒக்டோபரில் பொதுவுடமைவாதிகள் மாவோ தலைமையில் மக்கள் சீனக்
குடியரசை உருவாக்கிய போது தைவான் ஒரு தனிநாடாகியது. அமெரிக்கா தைவானில் ஆட்சியில் இருப்பவர்கள்
தான் உண்மையான சீன ஆட்சியாளர்கள் என்றும் தைவான் அரசுதான் சீனக் குடியரசு என்றும் அந்தக்
குடியரசு தான் ஐக்கிய நாடுகள் சபையில் முழுச் சீனாவிற்குமான உறுப்புரிமை உடையது என்றும்
அடம் பிடித்தது. 1943-ம் ஆண்டு எகிப்தில் நடந்த முதலாவது கெய்ரோ மாநாட்டில் உலகப் போரின்
பின்னரான ஆசிய அரசுகள் பற்றி முடிவு செய்த போது ஜப்பானின் கட்டுப்பாட்டில் இருந்து
விடுபட்ட தைவான சீனக் குடியரசின் ஒரு பகுதியாக ஒத்துக்கொள்ளப்பட்டது. அது பொதுவுடமைப்
புரட்சிக்கு முன்னரான நிலைப்பாடு.
கேந்திரோபாயத் தெளிவின்மையா
(Strategic Ambiguity) கேந்திரோபாய பொய்யா?
தைவான்
தொடர்பான நிலைப்பாட்டை “கேந்திரோபாயத் தெளிவின்மை” (Strategic Ambiguity) என்னும் பெயரிட்டு
குழப்பமான ஒன்றாக அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் முன்னெடுக்கின்றார்கள். 1972-ம் ஆண்டு
அமெரிக்க குடியரசுத் தலைவர் ரிச்சர்ட் நிக்சனும் சீனத் தலைவர் மாவோ சே துங்கும் சந்திக்கும்
வரை தைவான் சீனக் குடியரசு எனவும் சீனா மக்கள் சீனக் குடியரசு எனவும் அழைக்கப்பட்டன.
1979இல் சீன அமெரிக்க உறவைப் புதுப்பித்தல் (Détente)செய்த போது சீனாவிற்கு அமெரிக்கா
காட்டிய இரட்டை முகத்தில் இருந்து கேந்திரோபாய தெளிவின்மை செயற்படுத்தப்படுகின்றது.
அமெரிக்காவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ரிச்சர்ட் நிக்சன் தைவான் சீனாவின் ஒரு பகுதி
என்பதை விருப்பமின்றி ஒத்துக் கொண்டார். நிக்சன் எதை ஒத்துக் கொண்டார் என்பதற்கும்
அப்போதைய சீன ஆட்சியாளர்கள் அதை எப்படி புரிந்து கொண்டார் என்பதற்கும் வித்தியாசம்
உண்டு என 2000-ம் ஆண்டிலிருந்து அமெரிக்கர் சொல்லி வருகின்றார்கள். நிக்சனும் மாவோவும்
பேச்சு வார்த்தை நத்திக் கொண்டிருக்கையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தைவான் பாதுகாப்புச்
சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதுவரை தைவானை சீனக் குடியரசு என அழைத்து வந்த அமெரிக்க
தைவான் பாதுகாப்புச் சட்டத்தில் “தைவானை ஆளும் அதிகாரப்பட்டயங்கள் (Governing Authorities
of Taiwan) எனக் குறிப்பிட்டது. 1979இல் சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக சீனாவை தன்
நட்பு நாடாக்குவதற்காக அமெரிக்கா சொன்ன பொய் “ஒரே சீனா”. அந்த ஒரே சீனாவில் தைவான்
இருக்கின்றதா இல்லையா என்ற கேள்விக்கான பதில்தான் “கேந்திரோபாயத் தெளிவின்மை”
இரு விமானம் தாங்கி கப்பல்களுக்கு அஞ்சிய
சீனா!
பொதுவுடமைச்(?)
சீனாவின் சிற்பியாகிய மாவோ சே துங்கின் குறிக்கோள் ஹொங் கொங்கும் தைவானும் சீனாவின்
பிரிக்க முடியாத பகுதிகள் என்பதாகும். ஆனால் இன்றுவரை சீனாவால் அதை நடைமுறைப்படுத்த
முடியவில்லை. சீனா ஒரு போர் மூலம் தைவானைக் கைப்பற்ற முயன்றால் அமெரிக்கா சீனாவிற்கு
எதிராக போர் செய்யும் என்பது போல அமெரிக்காவில் இருந்து கருத்து வெளியிடப்படுவது ஆண்டு
தோறும் வலுவடைந்து கொண்டு போகின்றது. 1996-ம் ஆண்டு தைவானை ஆக்கிரமிக்க சீனா தயார்
செய்த போது அப்போதைய அதிபராக இருந்த பில் கிளிண்டன் இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்களை
சீனாவிற்கும் தைவானிற்கும் இடையிலான தைவான் நீரிணக்கு அனுப்பியவுடன் சீனா தனது முயற்ச்சியைக்
கைவிட்டது. பதினைந்து ஆழ்கடல் துறைமுகங்களைக் கொண்ட தைவானை சீனா கைப்பற்றினால் அதன்
கடற்படை வலிமை மிகவும் அதிகமாகும்.
தைவான் வேறு சீனா வேறு என்கின்றது அமெரிக்கா
The
American Enterprise Institute என்ற அமெரிக்க வலதுசாரிக் கருத்துக் கலம் வரலாற்று ஆய்வு
ஒன்றைச் செய்து தைவான் சீனாவின் பகுதியாக இருந்ததில்லை என ஒரு நூலை வெளியிட்டுள்ளது.
மேலும் அந்த நூல் சீனா தைவானை ஆட்சி செய்த காலத்திலும் பார்க்க நீண்ட காலம் மேற்கு
ஐரோப்பிய நாடுகள் ஆசிய மற்றும் ஆபிரிக்காவில் உள்ள நாடுகளை ஆட்சி செய்தன என்கின்றது.
கிங் கோமரபு (Qing Dynasty) தைவானை இரண்டு நூற்றாண்டுகளுக்கு (1683 – 1895) மேல் ஆட்சி
செய்தது. கிங் கோமரபின் பிடியில் இருந்த சீனாவுடன் ஜப்பானியர்கள் 1894இல் போரை ஆரம்பித்தனர்.
1895இல் முடிந்த முதலாம் சீன-ஜப்பான் போரில் ஜப்பான் தைவானையும் சீனாவின் காற்பங்கு
நிலப்பரப்பையும் கைப்பற்றியது. கிங் கோமரபு ஆட்சியாளர்கள் உண்மையான ஹன் சீனர்கள் அல்ல
அவர்கள் ஆக்கிரமிப்பாளர்களே என அமெரிக்க ஆய்வு நிறுவனம் சொல்கின்றது. கிங் கோமரபிற்கு
முன்னர் தைவானை டச்சுக்காரர்களும் போர்த்துக்கேயர்களும் ஆண்டனர். பொதுவுடமை சீனாவைப்
பற்றி பல நூல்களை எழுதிய Edgar Snow என்பவருக்கு மாவோ சே துங் 1936இல் வழங்கிய பேட்டியில்
மாவோ தைவானை சீனாவின் ஒரு பகுதியாக குறிப்பிடவில்லை என்கின்றது The American
Enterprise Institute.
சீனாவால் தைவானைக் கைப்பற்ற முடியாதாம்
சிலர்
தைவான் தீவைக் கைப்பற்றக் கூடிய வலிமையான கடற்படை ஒரு போதும் சீனர்களிடம் இருந்ததில்லை
என்கின்றனர். 23.6 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட தைவானைக் கைப்பற்ற போர் அனுபவம்
இல்லாத சீனப்படையினர் எத்தனை பேர் தேவைப்படுவார்கள் என்ற கேள்விக்கு நூறு தைவானியர்களுக்கு
ஒரு சீனப் படை வீரர் என்ற கணக்குப் படி பார்த்தால் 240,000 சீனப் படையினர் தேவைப்படுவார்கள்.
அவர்களையும் அவர்களுக்கு தேவையான போர்த்தாங்கிகள், ஆட்டிலெறிகள், துப்பாக்கிகள், சுடுகலன்கள்,
உணவுகள் போன்றவற்றை எல்லாம் எடுத்துக் கொண்டு நூறு மைல்கள் தூரம் கடலைக் கடந்து செல்ல
வேண்டும். அதற்கு தேவையான தரையிறக்க கப்பல்கள் (Landing Vessels) சீனாவிடம் இல்லை என்ற
விவாதத்தை சில மேற்கு நாட்டு ஆய்வாளர்கள் முன்வைக்கின்றார்கள். சீனாவிடம் உள்ள எட்டு
தரையிறக்க கப்பல்கள் மூலம் ஐம்பதினாயிரம் படையினரையும் ஆயிரம் போர்த்தாங்கிகளை மட்டும்
தரையிறக்க முடியும் என்பது அவர்களது கருத்து. பகுதி பகுதியாக படையினரை இறக்கினால் மிகப்பெரும்
அழிவை சீனப் படையினர் சந்திக்க வேண்டிவரும். சீனா தனது தரை, வான், கடல் நிலைகளில் இருந்து
குண்டுகளை வீசி தைவானை தரைமட்டமாக்கிய பின்னர் படையெடுத்தால் சீனா தைவானின் தொழில்நுட்பத்தையும்
பொருளாதாரத்தையும் கைப்பற்றும் நோக்கம் நிறைவேறாது. தைவானியர்களின் கரந்தடிப் போரை
சீனா எதிர் கொள்ள வேண்டிவரும். தைவானைப் பாதுகாக்க அமெரிக்கா, ஜப்பான், ஒஸ்ரேலியா,
பிரித்தானியா ஆகிய நாடுகள் களமிறங்கினால் நிலைமை மோசமாக இருக்கும். இவை உண்மையாயின்
சீனா தொடர்ந்தும் தைவான் சீனாவின் ஒரு மாகாணம் என வாயளவில் (பொய்) சொல்லிக் கொண்டே
இருக்க வேண்டும். இரசியா உக்ரேன் மீது படையெடுக்கும் போது சீனாவும் தைவான் மீது படை
எடுக்கும் என எதிர்பார்த்ததும் நடக்கவில்லை.
முள்ளம் பன்றிக் கோட்பாடு
ஒரு முள்ளம்பன்றி
சிறிதாக இருந்தாலும் அதன் எதிரிகள் அதைத் தொட்டால் அதன் முள்ளுகள் குத்தும்.
அப்படியாக இருக்கக் கூடிய மாதிரி தைவானை வைத்திருக்கும் திட்டத்தை 2008-ம் ஆண்டு
அமெரிக்கா உருவாக்கியது. அத்திட்டத்தின் படி அமெரிக்கா போர் விமானங்கள் மற்றும்
படைத்தாக்குதல் செய்யக் கூடிய ஆளில்லாப் போர் விமானங்கள்,
கணினியால் இயங்கும் கண்ணி வெடிகள் போன்றவற்றை
தைவானிற்கு வழங்கியது. உக்ரேன் போரில் பெற்ற அனுபவங்களை அடிப்படையாக
வைத்து தைவானின் படையினரை மாற்றி அமைக்க அமெரிக்கா முயல்கின்றது. அத்துடன் தைவானிற்கு
மேலதிக படைக்கலன்களை விற்று பணம் சம்பாதிக்கவும் அமெரிக்கா முயல்கின்றது. சமச்சீரற்ற
போர் முறைப் பயிற்ச்சியையும் அதற்குரிய படைக்கலன்களையும் தைவான் பெற வேண்டும் என அமெரிக்கப்
படைத்துறை நிபுணர்கள் கருதுகின்றனர். 1979 தைவான் உறவுச் சட்டம் அமெரிக்கா தைவானிற்கு
தற்காப்பு படைக்கலன்களை வழங்க வேண்டும் என்கின்றது. தாக்குதற் படைக்கலன்கள் இல்லாமல்
சீனாவை தைவானியர்கள் எதிர் கொள்ள வேண்டும்.
தற்காப்பு படைக்கலன்களைப் பெற்றுக் கொண்டு
உக்ரேனியர்கள் படும் பாட்டை தைவானியர்கள் அவதானித்துக் கொண்டு இருக்கும் வேளையில் இரசியாவின்
இழப்புக்களை சீனர்களும் அவதானித்துக் கொண்டு இருக்கின்றனர்.
இலங்கையில் அரசியலமைப்பு யாப்பு மக்களுக்காக எழுதப்படாமல் தனிப்பட்டவர்களுக்காக எழுதப்படுவதும் திருத்தப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது. இலங்கையின் முதலாவது அரசியலமைப்பு யாப்பு பிரித்தானிய குடியேற்றவாத்த த்தை புதிய குடியேற்றவாதமாக மாற்றுவதற்கு 1947இல் எழுதப்பட்டது. 1972இல் இருந்த சிறீமாவோ பண்டாரநாயக்க தனது ஆட்சிக்காலத்தை நீடிப்பதற்கு இலங்கைக் குடியரசின் முதலாவது அரசியலமைப்பு யாப்பை பயன்படுத்தினார். 1978இல் ஆட்சியில் இருந்த ஜே ஆர் ஜயவர்த்தன தன்னை அதிகாரம் மிக்க ஆட்சியாளராக மாற்ற ஓர் அரசியலமைப்பு யாப்பை உருவாக்கினார். தன்னை நிறைவேற்று அதிகாரம் கொண்ட குடியரசுத்தலைவராக்கினார்.
திருத்தங்கள் நாட்டை திருத்தவில்லை
நிறைவேற்று அதிகாரம் கொண்ட குடியரசுத் தலைவர் முறைமையை ஒழிப்பேன் என சூளுரைத்துக் கொண்டு 1994இல் ஆட்சிக்கு வந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க அதை நிறைவேற்றாமல் அதிபரின் அதிகாரங்களை இலங்கை அரசியல் யாப்பின் 17-ம் திருத்தம் மூலம் குறைத்தார். 2001-ம் ஆண்டு குடியரசுத் தலைவராக ஆட்சிக்கு வந்த மஹிந்த ராஜபக்ச 18-ம் திருத்தத்தின் மூலம் தன் அதிகாரங்களை அதிகரித்தார். 2015-ம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க தலைமை அமைச்சராகவும் மைத்திரிபால சிறிசேன குடியரசுத் தலைவராகவும் கூட்டாக ஆட்சியைக் கைப்பற்றினர். ரணில் தலைமை அமைச்சரான தனது அதிகாரஙகளை அதிகரிப்பதற்காகவும் மைத்திரியை ஓரம் கட்டுவதற்காகவும் 19-ம் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அது ஆட்சியாளர்களின் பொறுப்புக் கூறலை அதிகரித்தது என்று சொல்லப்பட்டாலும் ரணில் ஆட்சிக் காலத்தில் இலங்கை நடுவண் வங்கியின் கடன் முறி விற்பனையில் பெரும் ஊழல் நடந்தது. 2019இல் கோத்தபாய ராஜபக்ச குடியரசுத் தலைவர் தேர்தலிலும் அவரது கட்சியான இலங்கை மக்கள் முன்னணி 2020இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் பெரு வெற்றி பெற்றனர். இதனால் அவர்கள் 2020இல் இலங்கை அரசியலமைப்பின் 20-ம் திருத்தத்தை நிறைவேற்றினர். அதனால இலங்கை அவரகளது பிடிக்குள் போய்விட்டது என்ற குற்றம் சாட்டு இலங்கையிலும் இலங்கைக்கு வெளியிலும் பரவலாக முன்வைக்கப்பட்டது. இலங்கையின் அரசியலமைப்பு யாப்பு அவ்வப்போது தனிப்பட்டவர்களுக்கு ஏற்ப திருத்தப்பட்டமையால் நாட்டில் ஊழல், திறமையற்ற ஆட்சி தொடர்ந்து நடைபெற்று வருவதாலும் இலங்கையின் பொருளாதார முகாமைத்துவத்தில் பேரினவாதம் இரண்டறக் கலந்திருப்பதாலும் நாடு தொடர்ச்சியாக சீரழிந்து கொண்டிருக்கின்றது.
கொலையாளிகளைத் தேடும் சிங்களம்
இலங்கையில் கடந்த முப்பது ஆண்டுகளாக நடந்த தேர்தலில் இனக்கொலையை சிறப்பாகச் செய்பவர்கள் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றினர். 2019 குடியரசுத் தலைவர் தேர்தலிலும் 2020 நாடாளுமன்றத் தேர்தலிலும் முடிவுகளை 2019 ஏப்ரல் மாதம் உதிர்த்த ஞாயிறன்று இலங்கையின் பல்வேறு பகுதிகளில் நடந்த குண்டு வெடிப்புக்களே முடிவு செய்தன. அது தேர்தல் முடிவை மாற்ற திட்டமிட்டுச் செய்யப்பட்ட குண்டு வெடிப்புக்கள் என ஐயம் வெளிவிடப்பட்டது. ரணில் விக்கிரமசிங்கவின் தலைமை ஆலோசகரான சகல இரத்நாயக்க கோத்தபாய ராஜபக்சவை “சேர்” (Sir) என அழைப்பதை அவருடன் பணிபுரிபவர்கள் நகைத்த போது கோத்தபாய விடுதலைப் புலிகளை அழித்தவர் என்பதால் அவர் மரியாதைக்கு உரியவர் என சகல இரத்நாயக்க பதிலளித்தார். ஓர் இனம் இனைக்கொலையாளி எனக் குற்றம் சாட்டுபவரை மற்ற இனம் மதிப்புக்குரியவராக உயர்த்திக் கொண்டிருப்பதால் அவரது தகைமை, திறமை, நேர்மை போன்றவற்றிற்கு அப்பால் அவர் தேர்தலில் வெற்றி பெற்றார். முன்னாள் இலங்கை குடியரசுத் தலைவர் ஜே ஆர் ஜயவர்த்தன தமிழர்களுக்கு தீங்கிழைப்பவர்களை சிங்களவர்கள் மதிப்பார்கள் எனப் பகிரங்கமாகவே தெரிவித்திருந்தார்.
21இற்கு திசை திருப்பும் ரணில்
இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் பெரும் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மக்களில் சிலர் அரசுக்கு எதிராக கிளர்ந்து எழுந்த நிலையில் மஹிந்த ராஜ்பக்ச தலைமை அமைச்சுப் பதவியில் இருந்து விலக ரணில் விக்கிரமசிங்கேயை தலைமை அமைச்சராக 2022 மே மாதம் அவரது அரசியல் எதிரியாகக் கருதப்படும் குடியரசுத் தலைவர் கோத்தபாய ராஜபக்ச நியமித்தார். நாட்டு மக்களுக்கு மூன்று வேளை உணவு, அரசியல் சீர்திருத்தம் என்பவற்றை முதன்மை கொள்கையாக முன்வைத்து ரணில் பதவியை ஏற்றுக் கொண்டார். அவர் பதவி ஏற்ற பின்னர் மேற்கு நாடுகளில் இருந்தும் உலக வங்கி, பன்னாட்டு நாணய நிதியம் போன்றவற்றிடமிருந்தும் கடன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. காலிமுகத்திடலில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை இலங்கை வர்த்தக சபை, சட்டவாளர் சபை, சமூக நீதிக்கான மக்கள் இயக்கம் ஆகியவை காலிமுகத் திடல் போராட்டத்தை ஆரம்பித்து வைத்த அமைப்புக்களாக கருதப்படுகின்றது. ரணில் தலைமை அமைச்சராகிய பின்னர் காலிமுகத் திடல் ஆர்ப்பாட்டத்தின் வலிமை குறைந்து விட்டதாகவும் சில செய்திகள் வெளிவருகின்றன.
குடியரசுத் தலைவர் பதவியை ஒழிக்க முடியுமா?
ரணில் விக்கிரமசிங்கவால் மக்களுக்கு மிகவும் தேவைப்படும் பொருட்களுக்கான விலையை குறைக்க முடியாது என்ற சூழலில் மக்களைத் திசைதிருப்பவும் தனது அதிகாரத்தை கூட்டி படிப்படியாக ராஜபக்சேக்களை ஓரம் கட்டவும் இலங்கை அரசியல் யாப்பிற்கான 21-ம் திருத்தத்தை கொண்டு வர முயல்கின்றார். அவரது கை இலங்கை அரசியலில் ஓங்குவதை விரும்பாத அவரது அரசியல் எதிரியான மக்கள் வலிமைக் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் ஒரு 21-ம் திருத்தத்தை முன் வைத்துள்ளார். ரணில் குடியரசுத் தலைவரின் அதிகாரத்தை குறைக்க முயல்கின்றார். சஜித் குடியரசுத் தலைவர் பதவியையே ஒழித்துக் கட்ட முயல்கின்றார். சஜித் தன்னால் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெல்ல முடியாது என்பதால் அப்பதவியை ஒழிக்க முயல்கின்றார். இறப்பதற்கு முன்னர் தான் குடியரசுத் தலைவராக வேண்டும் என்ற அவாவில் ரணில் அதை ஒழிக்க மறுக்கின்றார். கோத்தபாய ராஜபக்சவும் குடியரசுத் தலைவர் பதவியை ஒழிப்பதை எதிர்க்கின்றார்.
இரட்டைக் குடியுரிமைப் பிரச்சனை
21-ம் திருத்தத்தின் படி இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராகவோ குடியரசுத்தலைவராகவோ பதவி வகிக்க முடியாது என்ற நிலைமையை உருவாக்குவதில் ரணிலும் சஜித்தும் முனைப்பு காட்ட கோத்தபாயவின் மக்கள் முன்னணிக் கட்சியினர் பலர் அதை எதிர்க்கின்றனர். இலங்கையின் அரசியலமைப்பு தனிப்பட்டவர்களைச் சுற்றியே சுழலுகின்றது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.
கோத்தாவிற்கு அமைச்சுப்பதவி பிரச்சனை
கோத்தபாய ராஜ்பக்ச தன் குடியரசுத் தலைவர் பதவியுடன் பாதுகாப்பு அமைச்சராகவும் இருக்கின்றார். குடியரசுத் தலைவர் அமைச்சுப் பதவியை வகிக்க கூடாது என சஜித் மற்றும் ஜேவிபி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணியினர் கருதுகின்றனர். ரணில் கோத்தபாயாவைச் சமாளிக்க வேண்டி இருப்பதால் அதில் அதிக முனைப்பு காட்டவில்லை. ஆனால் ரணிலிடம் பாதுகாப்பு அமைச்சுப் பதவி இருந்தால் அவரால் இலகுவாக கோத்தபாயாவை ஓரம் கட்டலாம்.
தலைமை அமைச்சரின் அதிகாரம்
தலைமை அமைச்சரான ரணில் தலைமை அமைச்சருக்கே அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் 21-ம் திருத்தத்தில் உள்ளடக்கப்பட வேண்டும் என விரும்புகின்றார். தற்போது தலைமை அமைச்சர் உட்பட எல்லா அமைச்சர்களையும் நியமிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவரிடமே உள்ளது. அது ரணிலின் கையில் வந்தால் அவர் தனது பக்கம் பல நாடாளுமன்ற உறுப்பினர்களை இழுத்துக் கொள்ளலாம். ஏற்கனவே ரணில் மனுஷ நாணயக்காரா, ஹரின் பெர்னாண்டோ ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களை சஜித் பிரேமதாசவின் மக்கள் வலிமைக் கட்சியில் இருந்து தன் பக்கம் கவர்ந்துள்ளார். மக்களின் அமோக ஆதரவுடன் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த கோத்தபாயவின் அதிகாரங்களை தேர்தலில் தோல்வியடைந்து பின் கதவால் நாடாளுமன்றத்திற்கு வந்த ரணிலுக்கு தாரைவார்க்கக் கூடாது என கோத்தபாயவின் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். 20-ம் திருத்தத்தின்படி நாடாளுமன்றத் தேர்தல் நடந்து நான்கரை ஆண்டுகளின் பின்னரே அதை குடியரசுத் தலைவர் கலைக்க முடியும். ரணில் அந்தக் கால எல்லையை 21-ம் திருத்தத்தின் மூலம் இரண்டரை ஆண்டுகளாக குறைக்க முயல்கின்றார். அதன் மூலம் அடுத்த ஆண்டுக்குள் நாட்டின் பொருளாதாரப் பிரச்சனையை தீர்த்துவிட்டு தேர்தலை நடத்தி தான் அதிகாரம் மிக்க ஒருவராக வரவேண்டும் என்பது ரணிலின் கனவு.
சிங்களவர்கள் எத்தனை தடவை அரசியலமைப்பை மாற்றினாலும் அவர்களால் ஒரு நேர்மையான, திறமையான ஆட்சியாளரை தேர்ந்தெடுப்பதில்லை என்பதை இலங்கை சுதந்திரமடைந்த நாளில் இருந்து நிரூபித்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் திருந்தும் வரை திருத்தங்கள் பயன் தரமாட்டாது.
2022 ஏப்ரல் மாதம் 17-ம் திகதி கிருத்தவர்களின் உயிர்த்தெழுந்த ஞாயிறு, இசுலாமியர்களின் நோன்பு நடக்கும் வேளையிலும் யூதர்களின் நோன்பு நடக்கும் வேளையிலும் நிகழ்ந்தது. முப்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு ஒரு தடவை இப்படி நடப்பதாக கூறுகின்றார்கள். இம் மூன்று மத்தினருக்கும் புனித இடமான ஜெருசேலத்தில் உள்ள பழைய நகரில் எப்போதும் போல் இல்லாத வகையில் இஸ்ரேலியர்களும் 2022 ஏப்ரலில் அரபுக்களும் மோதிக் கொண்டனர். ஜெருசேலம் பழைய நகர் யூதர்களின் புனித இடமாகக் கருதப்படுகின்றது. இறை தூதர் நபி வர முன்னர் மட்டுமல்ல பரபிதா தன் ஒரே ஒரு குமாரரை புவியில் உள்ள பாவிகளை இரட்சிக்க அனுப்ப முன்னரே ஜெருசேலத்தில் பழைய நகர் யூதர்களின் புனித இடமாக இருந்து வருகின்றது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஜெருசேலம் உலகன் நடுப்புள்ளியாக இருந்ததாகத யூதர்கள் கருதுகின்றனர். யூதர்களின் புனித இடமான மலைக்கோவில் (Temple Mount) ஜெருசேலம் பழைய நகரில் உள்ளது. இஸ்லாமியர்கள் நபிகள் நாயகம் புவியில் இருந்து வானுலகம் நோக்கி பயணைத்த புனித இடம் ஜெருசேலம் எனச் சொல்கின்றனர். அவரகள் ஜெருசேலம் பழைய நகரில் அல் அக்சா என்னும் பள்ளிவாசலை உருவாக்கி அதை அவர்கள் மக்கா, மதினா போன்ற மிகப் புனிதமான இடமாக கருதுகின்றனர். யேசு நாதர் போதனை செய்த, சிலுவையில் அறையப்பட்ட, உயிர்த்து எழுந்த தலம் ஜெருசேலம் நகராகும். ஜெருசேலத்தில் உள்ள பழைய நகரைச் சுற்றி மதில் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. அங்கு கிருத்தவர்களுக்கு எனவும், ஆர்மினியர்களுக்கு எனவும் (அவர்கள் மரபுவழி கிருத்தவர்கள்) யூதர்களுக்கு எனவும் இஸ்லாமியர்களுக்கு எனவும் தனித்தனி நிலப்பரப்புக்கள் உள்ளன.
1967 போர் வெற்றி ஊர்வலம்
யூதர்கள் 1967-ம் ஆண்டு நடந்த அரபு இஸ்ரேல் போரில் தாம் வெற்றி பெற்றதையும் தங்களது புனித தலமாகிய கிழக்கு ஜெருசேலம் நகரைக் கைப்பற்றியதையும் ஆண்டு தோறும் கொண்டாடி வருகின்றனர். அதை ஒட்டி அவர்கள் தங்கள் கொடியுடன் பழைய நகர் முழுவதும் ஊர்வலம் போவார்கள். போகும் போது பலஸ்த்தீனிய அரபுக்கள் மீது தாக்குதல் நடத்துவதை வழமையாகக் கொண்டுள்ளனர். ஊர்வலத்தில் அரபுக்கள் அழிக என கூச்சலிட்டுக் கொண்டு யூதர்கள் செல்வார்கள். கிழக்கு ஜெருசேலம் பழைய நகர் யூதர்களின் இறையாண்மைக்கு உட்பட்டது என்பதை உணர்த்தும் வகையில் அவர்கள் இஸ்லாமியர்களின் நிலப்பரப்புக்களூடாக ஊர்வலம் செல்வார்கள். 2022 ஏப்ரல் 17-ம் திகதி உயிர்த்த ஞாயிறு நடந்த மோதலைத் தொடர்ந்து மே மாதம் 29-ம் திகதி யூதர்கள் ஊர்வலம் போகும் போது மோதல் கடுமையாக இருந்தது. 2022 மே மாதம் 29-ம் திகதி ஞாயிற்றுக் கிழமை அரபுக்களுக்கும் யூதர்களுக்கும் இடையில் நடந்த மோதலில் 150இற்கும் மேற்பட்ட பலஸ்த்தீனியர்கள் காயமடைந்தனர். மூன்று யூத காவல் துறையினர் காயமடைந்தனர். நூற்றுக்கு மேற்பட்ட பலஸ்த்தீனியர்கள் கைது செய்யப்பட்டனர். அல் அக்சாவினுள் பலஸ்த்தீனியர்கள் நுழைய முடியாமல் இஸ்ரேலியர் தடுத்து நின்றனர். பலஸ்த்தீனியர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். ஒரு இளம் பெண் கடுமையாகத் தாக்கப் படும் காணொலிவெளியிடப்பட்டுள்ளது.
தீவிரவாத இஸ்ரேலியர்கள்
இஸ்ரேலின் தீவிரதேசியவாதக் கட்சியின் தலைவரான இதமர் பென் வீர் தலைமையில் பல தீவிரதேசியவாத யூதர்க்ள் 2021-05-29 ஞாயிற்றுக் கிழமை காலை இஸ்லாமியர்களின் புனித தலமான அல் அக்சாவை ஆக்கிரமித்திருந்தனர். அல் அக்சாவின் அல் கிபிலி வணக்க மண்டபத்தில் அவர்கள் நிலை கொண்டுள்ள்னர். பலஸ்த்தீன செம்பிறைச் சங்கம் தமது அவசர நோயாளர் வண்டி காயமடைந்தவர்களை எடுக்கச் சென்றபோது தாக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர். தீவிரவாத யூதர்கள் இஸ்லாமியர்களின் அல் அக்சா பள்ளிவாசலையும் மலைக் குவிமாடத்தையும் (Dome of the Rock) அகற்றிவிட்டு யூதர்களின் வழிபாட்டிடங்கள் அமைக்கப் படவேண்டும் என அடம் பிடிக்கின்றனர். இஸ்ரேலியச் சட்டப்படியும் யூத தலைமை மத குருவின் கட்டளைப்படியும் யூதர்கள் அல் அக்சா பள்ளிவாசலில் தமது மத தொழுகையை நடத்தக் கூடாது. இருந்தும் 2022 மே மாதம் யூத தீவிரவாதிகள் அல் அக்சா பள்ளிவாசலில் தமது மத தொழுகையைச் செய்தனர்.
2021 மோதலில் காசா நிலப்பரப்பில் கடும் தாக்குதல்
2021-ம் ஆண்டு மே மாதம் ரம்ழான் நோன்பு தொழுகையின் போது அல் அக்சா பள்ளிவாசலில் உள்ள ஒலி பெருக்கியில் இருந்து வரும் ஒலி யூதர்களின் போர் வெற்றிக் கூட்டத்தில் ஆற்றுகின்ற உரைக்கு இடையூறாக இருந்ததால் இஸ்ரேலிய காவல் துறையினர் அல் அக்சாவினுள் சென்று ஒலிபெருக்கியை உடைத்தனர். அப்போது இரு தரப்பு மோதல் உருவானது. பல்ஸ்த்தீனியர்கள் கற்களையும் இஸ்ரேலிய காவல் துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் வீசினர். இந்த மோதலால் சினமடைந்த கமாஸ் அமைப்பினர் தமது காசா நிலப்பரப்பில் இருந்து இஸ்ரேல் மீது எறிகணைத் தாக்குதல்களை நடத்தினர். அதனால் காசா நிலப்பரப்பின் மீது இஸ்ரேலியப் படையினர் கடும் தாக்குதல்களை செய்தனர். பதினொரு நாட்கள் தொடர்ந்த மோதலில் அரபு பலஸ்த்தீனியர்கள் வாழும் காசா நிலப்பரப்பில் பல கட்டிடங்களை இஸ்ரேல் தரைமட்டமாக்கியது. 2022 நடக்கும் மோதலில் இதுவரை கமாஸ் அமைப்பினர் அமைதியாக இருப்பதை பலரும் வியப்புடன் பார்க்கின்றனர். 2021-ம் ஆண்டு கமாஸிற்கு விழுந்த அடியில் இருந்து இன்னும் அது மீளவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. அல்லது கமாஸ் அமைப்பினர் தமது மக்களின் பொருளாதார நிலை மீது அதிக கவனம் செலுத்துகின்றனர் எனவும் கருத இடமுண்டு.
1967இல் நடந்த போரில் கிழக்கு ஜெருசேலத்தை ஜோர்தானிடமிருந்து இஸ்ரேல் அபகரித்துக் கொண்டது. 2019இல் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் ஆட்சியில் இருக்கும் போது அதை இஸ்ரேலின் ஒரு பகுதியாக இணைத்துக் கொண்டது. ஐக்கிய நாடுகள் சபையும் பல உலக நாடுகளும் கிழக்கு ஜெருசேலம் யூதர்களுக்கு சொந்தமானது அல்ல எனக் கருதுகின்றனர். ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களின் படி கிழக்கு ஜெருசேலம் ஓரு ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசமாகும். பன்னாட்டு சட்டங்களின் படி ஆக்கிரமிக்கப் பட்ட பிரதேசத்தில் ஆக்கிரமித்த நாடு குடியேற்றங்களைச் செய்ய முடியாது. பன்னாட்டு நியமங்களுக்கும் சட்டங்களுக்கும் எதிராகச் செயற்பட்டு இசுலாமியர்களின் புனித இடமாகிய அல் அக்சாவை இழிவுபடுத்தும் இஸ்ரேலுடன் உறவை எப்படி வளர்ப்பது என்பது பற்றி பல அரபு நாடுகளின் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றனர். இசுலாமியர்களின் முப்பெரும் புனித இடங்களில் ஒன்றான அல் அக்சாவில் இஸ்லாமியர்கள் நிம்மதியாக வழிபட முடியவில்லை. அரபு நாடுகளில் உள்ள தீவிரவாதிகளின் நகர்வுகளை நன்கு அவதானிக்கும் இஸ்ரேலிய உளவுத்துறையின் உதவி அரபு நாடுகளின் ஆட்சியாளர்களுக்கு அவசியம் தேவைப்படுகின்றது. அதை வைத்துக் கொண்டு தமது நாடுகளில் உள்ள தீவிரவாதிகள் ஆட்சியைக் கைப்பற்றாமல் அரபு நாடுகளின் ஆட்சியாளர்கள் தடுக்கின்றார்கள்.
“ஐரோப்பிய
பாதுகாவலர்” மற்றும் “உடனடி பதிலடி” என்னும் இரு 2022 மே மாதம் 13-ம் திகதி போலாந்து
உட்பட 14 நாடுகளிலும் “Exercise Hedgehog” என்னும் போர்ப்பயிற்ச்சியை இரசியாவின் எல்லையில்
உள்ள நேட்டோ உறுப்பு நாடாகிய எஸ்தோனியாவிலும் இன்னும் ஓர் எல்லை நாடாகிய லித்துவேனியாவில்
“இரும்பு ஓநாய்” என்னும் போர்ப்பயிற்ச்சியையும் ஜெர்மனியில் “Wettiner Heide” என்னும்
போர்ப்பயிற்ச்சியையும் நேட்டோ என்னும் படைத்துறைக் கூட்டமைப்பின் இருபது நாடுகள் இணைந்து
செய்துள்ளன. 1991-ம் ஆண்டு பனிப்போர் முடிவுக்கு வந்த பின்னர் நடந்த மிக பெரிய அளவிலும்
மிகப் பரந்த நிலப்பரப்பிலும் இப்போர்ப்பயிற்ச்சி நடந்துள்ளது. இது உக்ரேனை இரசியா ஆக்கிரமிப்பதற்கு
முன்ன்ரே திட்டமிடப்பட்டிருந்தது. இப்போர்ப்பயிற்ச்சிகளில் பின்லாந்தும் சுவீடனும்
கலந்து கொண்டுள்ளன.
நேட்டோவிலும் வீட்டோ உண்டு
நேட்டோ
படைத்துறைக் கூட்டமைப்பில் ஒரு நாடு புதிதாக இணைவதை எல்லா நாடுகளும் ஏற்றுக் கொள்ள
வேண்டும் ஒரு நாடு எதிர்த்தாலும் இணைய முடியாது. இதுவும் ஒரு வகை இரத்து (வீட்டோ) அதிகாரம்
போன்றது. நேட்டோவில் யூக்கோஸ்லாவியாவில் இருந்து பிரிந்து உருவாகிய நாடாகிய மசிடோனியா
இணைய முற்பட்ட போது கிரேக்கம் அதை தடுத்திருந்தது. கிரேக்கத்தில் மசிடோனியா என்ற பெயரில்
ஒரு மாகாணம் உள்ளது அதே பெயருடன் இன்னும் ஒரு நாடு இருப்பதை கிரேக்கம் விரும்பவில்லை.
அதனால் அந்த நாட்டின் வட மசிடோனியா என மாற்ற வேண்டும் என கிரேக்கம் வற்புறுத்தியது
ஆனால் மசிடோனியா அதற்கு இணங்கவில்லை. மசிடோனியா நேட்டோவில் இணைய முற்பட்ட போது கிரேக்கம்
தடுத்த படியால் வேறு வழியின்றி மசிடோனியா 2018இல் தன் பெயரை வட மசிடோனியா என மாற்றி
நேட்டோவில் இணைந்து கொண்டது. வட மசிடோனியா முதற்தடவையாக 2022 மே 13-ம் திகதி ஆரம்பித்த
நேட்டோ போர்ப்பயிற்ச்சியில் இணைந்து கொண்டது.
துள்ளும் துருக்கி
பெரிய
போர்ப்பயிற்ச்சியை நேட்டோப் படைகள் ஒரு புறம் நடத்திக் கொண்டிருக்க மறு புறம் பல ஆண்டுகளாக
இரசியாவிற்கும் நேட்டோவிற்கும் இடையிலான முறுகலில் நடு நிலை வகித்துக் கொண்டிருந்த
சுவீடனும் பின்லாந்தும் நேட்டோ கூட்டமைப்பில் இணைய முடிவு செய்துள்ளன. ஜெர்மன் தலைநகர்
பெர்லினில் நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் வெளிநாட்டமைச்சர்களின் முறைசாரா மாநாடு (informal
meeting) 2022 மே 15-ம் திகதி நடைபெற்றது. அங்கு உரையாற்றிய நேட்டோவின் ஒரே ஒரு இஸ்லாமிய
நாடான துருக்கியின் வெளிநாட்டமைச்சர் மெவ்லுட் கவுசொக்லு பின்லாந்தும் சுவீடனும் பயங்கரவாதிகளுக்கு
ஆதரவு வழங்கக் கூடாது என்றும் துருக்கியின் ஏற்றுமதிக்கு அவர்கள் விடுத்துள்ள தடைகளை
நீக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். மேலும் அவர் தான் எந்த நெம்பு கோலையும்
பாவிக்கவில்லை எனவும் யாரையும் பயமுறுத்தவில்லை எனவும் கூறியதுடன் குர்திஷ்த்தான் தொழிலாளர்
கட்சிக்கு பின்லாந்தும் சுவீடனும் வழங்கும் ஆதரவை பகிரங்கப் படுத்துவதாகவும் வெளிப்படுத்தினார்.
சுவீடனில் பெருமளவு குர்திஷ் மக்கள் தஞ்சமடைந்து வாழ்கின்றனர். இந்தியா தமிழர்கள் எங்கு
விடுதலை பற்றி பேசும்போது அவர்களுக்கு எதிராக இரகசியமாகச் செயற்படுவது போல் அல்லாமல்
துருக்கி உலகின் எப்பகுதியிலும் குர்திஷ் மக்கள் தமது விடுதலைச் செயற்பாட்டை முன்னெடுத்தால்
துருக்கி அங்கு பகிரங்கமாகத் தலையிடுவது வழக்கம். ஈராக்கில் உள்ள அரபுக்கள் அங்குள்ள
குர்திஷ் மக்களின் விடுதலைக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கையிலும் பார்க்க அதிக நடவடிக்கையை
துருக்கி எடுப்பதுண்டு. சிரியாவிலும் இதே நிலைமை தான். உக்ரேனுக்கு இரசியாவிற்கு எதிரான
போரில் மட்டுப்படுத்தப்பட்ட உதவிகளை துருக்கி வழங்கி வருகின்றது. உக்ரேனின் கடற்பகுதிகளை
இரசியா கைப்பற்றினால் கருங்கடலில் இரசியாவின் ஆதிக்கம் ஓங்குவது துருக்கிக்கும் அச்சுறுத்தல்
என்பதை துருக்கி நன்கு உணரும். ஆனால் துருக்கியில் வாழும் குர்திஷ் மக்கள் விடுதலைப்
போராட்டத்தை முன்னெடுப்பதை துருக்கி கடுமையாக எதிர்க்கின்றது. சுவீடனும் பின்லாந்தும்
நேட்டோவில் இணைவதைத் தடுத்து தனது வேண்டுகோளை கிரேக்கம் நிறைவேற்றியது போல் துருக்கியும்
தனது காய்களை நகர்த்த முயல்கின்றது. ஆனால் துருக்கியி தனது கோரிக்கையில் உறுதியாக நிற்க
மாட்டாது என நம்பப்படுகின்றது.
கங்கணம் கட்டுமா ஹங்கேரி?
1999-ம்
ஆண்டு போலாந்து செக் குடியரசு ஆகிய நாடுகளுடன் ஹங்கேரியும் நேட்டோ கூட்டமைப்பில் இணைந்து
கொண்டது. ஹங்கேரி இரசியாவில் இருந்து மலிவு விலையில் எரிவாயு வாங்க விரும்புகின்றது.
அதற்கான விதிவிலக்கு தனக்கு வழங்கப் பட்டால் மட்டுமே சுவீடனையும் பின்லாந்தையும் நேட்டோவில்
இணைய அனுமதிப்பேன் என ஹங்கேரி தன் காய்களை நகர்த்துகின்றது. நேட்டோ நாடுகளில் இரசியாவுடன்
நல்ல உறவை ஹங்கேரி பேணி வந்தது. ஆனாலும் உக்ரேனை இரசியா ஆக்கிரமிப்பது ஹங்கேரிக்கும்
ஆபத்தானது.
உக்ரேன்
போரின் பின்னர் மேற்கு நாடுகள் ஒன்றுபட்டுள்ளன என மேற்கு ஊடகங்கள் மார் தட்டிக் கொண்டிருக்கையில்
துருக்கியும் ஹங்கேரியும் அந்த ஒருமைப் பாட்டை கலைக்குமா என 2022 மே மாதம் 21-ம் திகதிக்கு
முன்னர் தெரிய வரும்.
2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியப் படைகளை விளடிமீர் புட்டீன் உக்ரேனுக்கு அனுப்பியதால் மேற்கு நாடுகள் இரசியாவிற்கு எதிராக கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தன. அதனால் இரசிய நாணயமான ரூபிளின் பெறுமதி நாற்பது விழுக்காட்டால வீழ்ச்சியடைந்து 2022 மார்ச் 7-ம் திகதி ஒரு அமெரிக்க டொலருக்கு 139 ரூபிள் என ஆனது. பின்னர் ரூபிளின் பெறுமதி முன்பு இருந்த நிலைக்கு மீளவும் உயர்ந்து 2022 மார்ச் மாதம் உலகில் சிறந்த பெறுமதி வளர்ச்சி அடைந்த நாணயமாக அடையாளமிடப்பட்டது.
இறந்த பூனையா பதுங்கிய புலியா
நிதிச் சந்தையில் ஒரு நாணயத்தின் அல்லது பங்கின் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து பின்னர் ஒரு குறுகிய காலத்திற்கு மீளவும் சற்று உயர்ந்து அதைத் தொடர்ந்தும் வீழ்ச்சியடைவதுண்டு. அந்த இடைக்கால மீள் உயர்ச்சியை இறந்த பூனையில் விழிப்பு என்பர். ஆனால் இரசிய ரூபிள் புலி போலச் சற்று பதுங்கிப் பாய்ந்துள்ளது. 2022 மே மாதம் 9-ம் திகதி இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் இரண்டாம் உலகப் போர் வெற்றி நினைவு நாளில் உரையாற்றுகையில் ரூபிளின் பெறுமதி எழுச்சியடைந்தது. அமெரிகாவின் Wall Street Journal 2022 மார்ச்சில் இந்த ஆண்டு ரூபிளின் பெறுமதி தாழ்ந்த நிலையில் இருக்கும் என எதிர்வு கூறியிருந்தது. இரசியப் பொருளாதார நிபுணர்கள் பிரித்தானிய Economist சஞ்சிகையின் BigMac Index முறைமையை ஆதரமாக வைத்து ஒரு அமெரிக்க டொலர் 23 இரசிய டொலருக்கு ஈடானது என்கின்றார். 2022 மே மாதம் 68 ரூபிளாக இருக்கின்றது. அதன் படி ரூபிளின் பெறுமது உண்மையான பெறுமதியிலும் பார்க்க குறைந்த மதிப்பில் உள்ளது. ரூபிளின் பெறுமதி தாக்குப் பிடிப்பதால் வட்டி விழுக்காடு 14% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இரசிய எரிவாயுவிற்கு உடனடி மாற்றீடு இல்லை
இரசியா மீது விதிக்கப் பட்ட பொருளாதாரத் தடைகளில் பெரும்பான்மையானவை இரசியா டொலர், யூரோ போன்ற நாணயங்கள் பெற்முடியாமல் இருக்கவே செய்யப்பட்டிருந்தன. இரசியாவிற்கு எதிராக விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையால் உலகச் சந்தையில் எரிபொருள் விலை பெரிய அளவில் அதிகரித்தது. உலகின் முன்னணி எரிபொருள் கொள்வனவு நாடுகளான சீனாவும் இந்தியாவும் இரசியாவில் இருந்து தமது எரிபொருள் கொள்வனவை அதிகரித்தன. இந்த இரண்டு காரணிகளாலும் இரசியாவின் எரிபொருள் ஏற்றுமதி வருமானம் அதிகரித்தது. அதன் மூலம் இரசியாவிற்கு தேவையான வெளிநாட்டுச் செலவாணி தங்கு தடையின்றிக் கிடைத்தது. பல ஐரோப்பிய நாடுகள் இரசியாவில் இருந்து எரிவாயுவை தொடர்ந்தும் வாங்கிக் கொண்டே இருக்கின்றன. பல ஐரோப்பிய நாடுகள் தங்கள் எரிபொருள் கையிருப்பை அதிகரிக்க வழமையிலும் பார்க்க அதிக எரிபொருளை வாங்கின.
ரூபிளில் மட்டும் எரிவாயு வங்கலாம்
ரூபிளின் பெறுமதியை தக்க வைக்க இரசியா எடுத்த அதிரடி நடவடிக்கைகளில் முக்கியமானது. இரசியாவில் இருந்து வாங்கும் எரிபொருளுக்கு இரசிய ரூபிளில் கொடுப்பனவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டமையே. அதற்கு முன்னர் பெரும்பாலும் அக்கொடுப்பனவுகள் யூரோவிலும் டொலரிலும் செய்யப்பட்டன. இந்த உத்தரவால் எரிபொருள் இறக்குமதியாளர்கள் டொலர், யூரோ போன்றவற்றை விற்று ரூபிள் வாங்க வேண்டிய நிலை உருவானது. ரூபிளை பலர் பெருமளவில் வாங்கியதால் அதன் பெறுமதி அதிகரித்தது. 2018-ம் ஆண்டு அப்போதிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜெர்மனி தன் எரிபொருள் தேவைக்கு இரசியாவில் பெருமளவு தங்கியிருப்பது அதன் பாதுகாப்பிற்கு பாதகமானது எனச் சொன்ன போது ஜெர்மனியர் சிரித்தார்கள்.
வட்டி அதிகரிப்பு
எந்த ஒரு நாடும் தன் நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியடியாமல் இருக்க அதன் வட்டி விழுக்காட்டை அதிகரிக்கும். அதை இரசியா தாராளமாகச் செய்தது. இரசிய வட்டி விழுக்காடு 20ஆக அதிகரிக்கப்பட்டது. அது ரூபிளை கையிருப்பில் வைத்திருப்பவர்கள் அதை விற்பனை செய்யாமல் தடுத்தது. அதனால் ரூபிளின் பெறுமதி மீள் எழுச்சியடைந்தது.
அதிரடியான உத்தரவு
வெளிநாடுகளில் இருந்து வருமானம் ஈட்டும் இரசியர்கள் தங்கள் வருவாயில் எண்பது விழுக்காட்டை ரூபிளுக்கு மாற்ற வேண்டும் என்ற உத்தரவு இரசியாவில் பிறப்பிக்கப்பட்டது. இதனால் பன்னாட்டு வர்த்தகம் புரியும் இரசிய நிறுவனங்கள் தங்கள் டொலர் மற்றும் யூரோ போன்ற நாணயங்களை விற்று ரூபிளை வாங்க வேண்டிய நிலை உருவாக்கப்பட்டது. இதனால் ரூபிளின் பெறுமதி அதிரித்தது.
தடுக்கப்பட்ட விற்பனை
பல வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் இரசியாவின் அரச கடன் முறிகளிலும் இரசியப் பங்குச் சந்தைகளிலும் முதலீடு செய்திருந்தனர். அவர்களின் கடன்முறிகளையும் பங்குகளையும் விற்பனை செய்வதை இரசியா தடை செய்தது. இதனால் அவர்கள் ரூபிளில் இருக்கும் சொத்துக்களை விற்று டொலை வாங்குவது தடுக்கப்பட்டது. உக்ரேன் போர் தொடங்கியவுடன் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தம் முதலீட்டை விற்பனை செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அது நடக்காமல் தடுத்தமை ரூபிளின் வீழ்ச்சியைத் தடுத்தது.
சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை
என்ற வள்ளுவன் வக்கு மகளிருக்கு மட்டுமல்ல நாணயத்திற்கும் பொருந்தும். இரசியாவின் நாணயத்தின் பெறுமதி அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியால் பாதுகாக்கப்படும் போதே து நிறைவானதும் நிரந்தரமானதுமான பெறுமதியாக இருக்கும். இரசிய அரசு எடுத்த பல நடவடிக்கைகள் செயற்கையாக ரூபிளிற்கு உலகச் சந்தையில் வாங்கப்படுவதை அதிகரித்தும் விற்கப்படுவதை குறைப்பதாகவும் உள்ளன. உக்ரேன் போருக்கு முடிவு கொண்டு வந்து இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகள் விரைவில் நீக்கப்பட்டால் இரசிய நாணயத்தின் பெறுமதி தொடர்ந்து நிலைத்து நிற்கும். பொருளாதாரத் தடை தொடர்ந்தால் இரசியா ஒரு நாளுக்கு $900மில்லியன்களைத் தொடர்ந்து செலவு செய்து கொண்டிருந்தால் இரசியப் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படும். ஐரோப்பிய நாடுகள் தமது எரிபொருள் தேவையை வேறு நாடுகளில் இருந்து பெற்ற்றுக் கொள்ளும். உலகெங்கும் எரிபொருள் உற்பத்தி அதிகரிக்கப்படுவதுடன் மாற்று எரிபொருள்களும் உருவாக்கப்படும். அதனால் ரூபிளின் பெறுமதியை செயற்கையாக உயர்ந்த நிலையில் பேண முடியாமல் போவதுடன் ஒரு கட்டத்தில் ரூபிளின் மதிப்பு பெருமளவு வீழ்ச்சியடைந்து இரசியாவில் பணவீக்கம் அதிகரிக்கலாம். 14% வட்டியும் வெளி நாட்டு முதலீட்டு தடையும் உள்நாட்டில் முதலீட்டைக் குறைக்கும். 14% வட்டி தொடர்ந்து பேண முடியாது.ச் அது பொருளாதார வளர்ச்சிக்கு உகந்தது அல்ல. இரசியாவில் இளையோர் தொகை மொத்த மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் குறைவாக உள்ளதுடன் பல இளையோர் நாட்டை விட்டு வெளியேறுகின்றார்கள். அது இரசியப் பொருளாதாரத்திற்கு உகந்தது அல்ல. இரசியா தனது பொருளாதாரத்தை உறுதியான வளர்ச்சி நிலையில் வைத்திருக்க வேண்டும்.
நோர்வே,
டென்மார்க், சுவீடன், பின்லாந்து, ஐஸ்லாந்து, கிரீன்லாந்து ஆகியவை நோர்டிக் நாடுகள்
என அழைக்கப்படுகின்றன. பூமிப்பந்தின் ஆர்க்டிக் வளையம் என்னும் கற்பனைக் கோட்டுக்கு வடக்கே இருக்கும் 1.1
மில்லியன் சதுரமைல் பிரதேசமான ஆர்க்டிக் கண்டத்தில்
ஆதிக்கம் செலுத்துவதற்கு இந்த நோர்டிக் நாடுகளும் அமெரிக்காவும் கனடாவும் இரசியாவுடன்
போட்டியிடுகின்றன. எரிபொருள் வளம், கனிம வளம் கடலுணவு ஆகியவை நிறைந்த ஆர்க்டிக் கண்டத்தில்
புவி வெப்பமாவதால் பனி உருகி கடற்போக்குவரத்துச் செய்யக் கூடிய பிரதேசமாகவும் அது உருவாகி
வருகின்றது.
பின்லாந்தும் இரசியாவும்
இருபதாம்
நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியிலும் அதற்கு முன்னரும். பின்லாந்தை அடிக்கடி இரசியா ஆக்கிரமித்ததுண்டு.
இரசியாவின் ஆட்சியின் கீழ் பின்லாந்து இருந்ததும் உண்டு. 2022இன் ஆரம்பத்தில் இரசியாவின்
எல்லையைக் கொண்டுள்ள எஸ்த்தோனியா, லித்துவேனியா, லத்வியா ஆகிய மூன்று போல்ரிக் நாடுகள்
மட்டுமே நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பில் உறுப்பு நாடுகளாக உள்ளன. இரசியா எஸ்த்தோனியாவுடன்
294கிலோ மீட்டர் எல்லையையும், லத்வியாவுடன் 214கிலோ மீட்டர் எல்லையையும் கொண்டுள்ளது.
இரசியாவின் வெளிநில மாநிலமான கலினின்கிராட்டுடன் லித்துவேனியா 275கிலோ மீட்டர் எல்லையைக்
கொண்டுள்ளது. இம் மூன்று நாடுகளின் மொத்த எல்லை 783கிமீ நீளமானது. இவற்றிலும் பார்க்க
நீண்ட எல்லையை இரசியா பின்லாந்துடன் கொண்டுள்ளது. பின்லாந்தும் இரசியாவும் 1340கிலோ
மீட்டர் எல்லையைக் கொண்டுள்ளன. 2014-ம் ஆண்டு இரசியா உக்ரேனை ஆக்கிரமிக்கும் வரை நேட்டோப்படைகள்
மேற்படி மூன்று நாடுகளில் நிலை கொண்டிருக்கவில்லை. அம்மூன்று சிறிய நாடுகளையும் இரசியா
ஆக்கிரமிக்கலாம் என்ற அச்சத்தில் அவை தமது நாடுகளில் நேட்டோப் படையினர் இருக்க வேண்டும்
என வேண்டின. அந்த நாடுகளில் நேட்டோ படையினரை பெருமளவில் நிலை கொள்ள வைத்தால் அது இரசியாவைக்
கரிசனை கொள்ள வைக்கும் என்பதால் ஆயிரம் படையினர் மட்டுமே ஒவ்வொரு நாடுகளிலும் நிறுத்தப்பட்டன.
அதே வேளை அங்கு பெரிய படைக்களஞ்சியங்களும் அமைக்கப்பட்டன.
பின்லாந்திற்கு சுதந்திரம் கொடுத்த புரட்சி
பின்லாந்தை
இரசியப் பேரரசு ஆக்கிரமித்திருந்த வேளையில் நடந்த 1917 ஒக்டோபர் பொதுவுடமைப் புரட்சியின்
போது பின்லாந்து இரசியாவிடமிருந்து சுதந்திரம் பெற்றது. பின்னர் சோவியத் ஒன்றியத்திடமிருந்து
பல நெருக்குவாரங்கள் பின்லாந்தின் மீது செய்யப்பட்டது. 1939இல் பின்லாந்தின் ஹங்கோ
குடாநாட்டை தனது கடற்படைக்கு தளம் அமைக்க குத்தகைக்கு தரும்படி சோவியத் ஒன்றியம் வற்புறுத்தியதை
பின்லாந்து மறுத்திருந்தது. அதனால் 1939-குளிர்காலப் போர் இரண்டு நாடுகளுக்கும் இடையில்
நடந்தது. வலிமை மிக்க சோவியத் படையினருக்கு எதிராக பின்லாந்து மக்கள் தீரமாக போராடினர்.
உலக நாடுகள் அமைப்பில் இருந்து சோவியத் ஒன்றியம் வெளியேற்றப்பட்டது. 1940-ம் ஆண்டு
இரு நாடுகளும் விட்டுக் கொடுப்புக்களைச் செய்து ஹங்கோ குடாநாடு முப்பது ஆண்டுகள் இரசியாவிற்கு
குத்தகைக்கு வழங்கப்பட்டது. பதிலா இரசியா தனது எல்லையை 25கிலோ மீட்டர் பின் நகர்த்தியதுடன்.
கரெலியா பிரதேசத்தின் ஒரு பகுதியையும் பின்லாந்திற்கு விட்டுக் கொடுத்தது. 1941முதல்
1944வரை இரண்டாம் உலகப் போரின் போது பின்லாந்து ஜேர்மனியுடன் இணைந்து போர் செய்து ஹங்கோ
குடாநாட்டை மீளக் கைப்பற்றிக் கொண்டது.
நடுநிலை எடுத்த சுவீடன் மாறுகின்றது
சுவீடனின்
170 ஆண்டுகால வரலாற்றில் சுவீடனின் ஆட்சியாளர்கள் உலக நாடுகளிடையேயான மோதலில் நடுநிலை
வகிப்பவர்களாக இருந்தனர். ஆனாலும் இரசியா மீதான நெப்போலியனின் படையெடுப்பை அவர்கள்
தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தினர். சுவீடனும் பின்லாந்தைப் போலவே இரசியாவுடன் பல
போர்களில் ஈடுபட்டது. 1790-ம் ஆண்டு இரண்டு நாடுகளுக்கும் இடையில் நடந்த போரின் பின்னர்
சுவீடனின் எல்லையை இரசியா மதிப்பதாக ஒத்துள் கொள்ளப்பட்டது. ஜெர்மன் இரசியாமீது தொடுத்த
போர் பின்லாந்தை இரசியாவிற்கு எதிராக வலிமையடையச் செய்தது. அதற்கு முன்னர் நெப்போலியன்
இரசியாவிற்கு எதிராக செய்த போர் சுவீடனை இரசியாவிற்கு எதிராக வலிமையடையச் செய்தது.
உலகின் 13வது பெரிய படைக்கல ஏற்றுமதி நாடாக சுவீடன் இருக்கின்றது. சுவீடனின் Jas 39 Gripen விமானம் உலகின் முன்னணி
போர்விமானங்களில் ஒன்றாகும். அதன் போர்விமானங்கள் இலத்திரனியல் போரில் சிறந்து விளங்குபவை.
நேட்டோவில் சுவீடன் இணைவது இரசியாவிற்கு எதிரான நேட்டோவின் படைவலுவை அதிகரிக்கச் செய்யும்.
பனிப்போரில் நடுநிலை
இரண்டாம்
உலகப் போரின் பின்னர் உருவான பனிப்போரில் சுவீடனும் நேட்டோ பின்லாந்தும் நடுநிலை வகித்து
கொண்டன. இருந்தும் சோவியத் ஒன்றியம் தம்மை ஆக்கிரமிக்கலாம் என்ற கரிசனையும் தமது நாடுகளிற்கும்
“பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்” வரலாம் என்ற அச்சத்துடனும் இருந்தனர். அதனால் அவர்கள்
தற்போது மூன்று வல்லரசுகள் உட்பட முப்பது நாடுகளைக் கொண்ட நேட்டோ கூட்டமைப்புடன் அதிகம்
ஒத்துழைத்தனர். 1990களில் இருந்து சுவீடனும் பின்லாந்தும் நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பினுடன்
கூட்டுப் போர்ப்பயிற்ச்சி உட்பட பலச் ஒத்துழைப்பை மேற்கொண்டு வருகின்றன.
மனம் மாறிய ஜெர்மனி
உக்ரேன்
மீது 2022 பெப்ரவரியில் செய்த படையெடுப்பில் இரசியாவிற்கு ஏற்பட்ட பாதகமான விளைவுகளில்
ஒன்று இரசியாவிற்கு எதிராக ஜெர்மனி கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளமையாகும். நேட்டோ
விரிவாக்கத்திற்கு ஜெர்மனி ஆதரவு கொடுத்தால் அது இரசியாவிலிருந்து ஜெர்மனி பெறும் எரிவாயு,
இரசியாவிற்கான ஜெர்மனியில் மகிழூர்ந்து ஏற்றுமதி போன்றவற்றை பாதிக்கும் என கரிசனை கொண்டிருந்த
ஜெர்மனி தனது படைத்துறைச் செலவை அதிகரித்தது. உக்ரேனுக்கு அனுப்ப மறுத்திருந்த படைக்கலன்களை
அனுப்பியது. சுவீடனும் பின்லாந்தும் நேட்டோ கூட்டமைப்பில் இணைவதை ஜெர்மனி ஆதரிக்கும்
முடிவை எடுத்துள்ளது. 2022 மார்ச் 3-ம் திகதி ஜெர்மன் அதிபர் Olaf Scholz பின்லாந்தினதும்
சுவீடனினதும் தலைமை அமைச்சர்களான Sanna Marin மற்றும் Magadalena Anderson ஆகியோர்
அருகிருக்க ஊடகவியலாளர்களிடம் பேசும் போது
பின்லாந்தும் சுவீடனும் நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பில் இணைவதை தான் ஆதரிப்பதாகத்
தெரிவித்தார்.
பின்லாந்து
திசைமாறும் முடிவெடுக்கலாம்
பின்லாந்தின் பாதுகாப்புத் துறை நிபுணர்கள் அரசுக்கு சமர்ப்பிக்கவிருக்கும் பாதுகாப்பு ஆய்வு அறிக்கையைப் பார்த்த பின்னர் பின்லாந்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேட்டோவில் இணைவது தொடர்பாக 2022 மே மாதம் 13-ம் திகதி முடிவெடுப்பார்கள். அதே போல் 2022 மே மாதம் 12-ம் திகதி சுவீடனின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவெடுப்பார்கள். இரண்டு நாடுகளினதும் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேட்டோவில் அவர்களது நாடுகள் இணைவதை விரும்புகின்றார்கள். பின்லாந்தின் மக்களிடையே எடுத்த கருத்துக் கணிப்பும் பெரும்பான்மையானவர்கள் நேட்டோவில் இணைவதை விரும்புகின்றார்கள் எனத் தெரிவிக்கின்றன. இரசியாவுடன் 830 மைல் எல்லையைக் கொண்ட பின்லாந்தால் நேட்டோவிற்கு பயன் தரக் கூடிய வகையில் பல உளவுத் தகவல்களை இரசியாவில் இருந்து திரட்ட முடியும். இதனால் உக்ரேன் நேட்டோவில் இணைவதிலும் பார்க்க பின்லாந்து நேட்டோவில் இணைவது நேட்டோவிற்கு சாதகமாகவும் இரசியாவிற்கு பாதகமாகவும் அமையும். ஒன்பது இலட்சம் படையினரைக் கொண்ட பின்லாந்திடம் ஜெர்மனியிடம் இருப்பதலும் பார்க்க அதிக எண்ணிக்கையிலான போர்த்தாங்கிகள் உள்ளன.
அணுக்குண்டுகள் குவியும் போல்ரிக் கடல் பிராந்தியம்
சுவீடனும் பின்லாந்தும் நேட்டோவில் இணைவது அவர்களது சொந்த முடிவு என இரசிய தரப்பில் இருந்து தொடர்ச்சியாக சொல்லி வந்தாலும் அந்த இணைவு போல்ரிக் பிராந்தியத்தில் படைச்சமநிலையை பெருமளவில் மாற்றும் என இரசியா தெரிவிக்கின்றது. அதைச் சமாளிக்க போல்ரிக் பிராந்தியத்தில் இரசியா அணுக்குண்டுகளை நிறுத்தும் என இரசிய முன்னாள் அதிபர் Dmitry Medvedev தெரிவித்தார். ஆனால் ஏற்கனவே போல்ரிக் கடற் பிராந்திய்த்தில் இரசியாவிற்கு சொந்தமான கலினின்கிராட் நிலப்பரப்பில் இரசியா பெருமளவு அணுக்குண்டுகளை வைத்திருக்கின்றது என்கின்றால் பின்லாந்தின் வெளியுறவுத் துறை அமைச்சர்.
பின்லாந்தும்
சுவீடனும் நேட்டோவில் இணைவது இரசியாவிற்கும் நேட்டோவிற்கும் இடையிலான படைவலு நிலைமையை
இரசியாவிற்கு பாதகமாக்கும். இரசியா மீதான நேட்டோவின் தாக்கும் திறனை பெருமளவில் அதிகரிக்கும்.
இரசியாவின் எல்லையில் உள்ள நாடு ஒன்று நேட்டோவில் இணைவது இரசியாவிற்கு அச்சுறுத்தலை
அதிகரிக்கும். அதே வேளை அந்த புதிய நேட்டோ உறுப்பு நாட்டில் நேட்டோ படையினர் தளம் அமைப்பது
இரசியாவிற்கான அச்சுறுத்தலை பன்மடங்காக்கும். சுவீடனும் பின்லாந்தும் நேட்டோவில் இணைந்தாலும்
அந்த இரு நாட்டிலும் நேட்டோ படைகள் தளம் அமைக்க மாட்டாது எனச் சொல்லலாம். நேட்டோவின்
ஆரம்பகால உறுப்பு நாடான நோர்வே இரசியாவின் சினத்திற்கு உள்ளாகாமல் இருக்க தனது நாட்டில்
நேட்டோ படைத்தளம் அமைக்கப்படுவதை தவிர்த்து வருகின்றது.
2022 ஜனவரியில் இம்ரான் கானை பாக்கிஸ்தானின் ஆட்சியில் இருந்து அகற்றும் நடவடிக்கைகளை பாக்கிஸ்தானின் படையினரும் எதிர்க்கட்சியினரும் முடுக்கி விட்ட போது. தான் ஆட்சியில் இருக்கும் போது அவரது எதிரிகளுக்கு உள்ள ஆபத்திலும் பார்க்க ஆட்சியில் அகற்றப் பட்ட பின்னர் வரப்போகும் ஆபத்து அதிகமானதாகவே இருக்கும் என முழங்கினார். மேலும் அவர் தான் தனது ஆதரவாளர்களுடன் தெருவில் இறங்கினால் தன் எதிரிகளுக்கு ஓடி ஒளிக்க இடமிருக்காது என்றார். அவர் சூளுரைத்த படியே அவருக்கு ஆட்சியில் இருக்கும் போது உள்ள ஆதரவிலும் பார்க்க அதிக அளவு ஆதரவு பாக்கிஸ்தான் மக்கள் மத்தியில் பெருகுவதுடன் பாக்கிஸ்தான் படைத்துறையின் மீது மக்கள் அதிக வெறுப்பு காட்டுகின்றனர்.
இம்ரான் கானின் ஆதரவு அதிகரித்துள்ளது
இம்ரான் கானை ஆட்சியில் இருந்து அமெரிக்காவும் பாக்கிஸ்தான் படைத்தளபதி கமார் ஜாவிட் பஜ்வாவும் இணைந்து சதி செய்தே அகற்றினர் என இம்ரான் சொல்லுவதை பல பாக்கிஸ்தான் மக்கள் நம்புகின்றனர். அமெரிக்கா இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிரானது என உலகெங்கிலும் உள்ள பல இஸ்லாமியர்கள் நம்புகின்றனர். அதற்கு பாக்கிஸ்தானியர் விதி விலக்கல்ல. தலைமை அமைச்சர் பதவியில் இருந்து அகற்றப்பட்ட பின்னர் இம்ரான் கான் பாக்கிஸ்தானின் முக்கிய நகரங்களில் எல்லாம் பல பேரணிகளை நடத்தியுள்ளார். அவற்றில் திரண்ட மக்கள் தொகை இம்ரான் கானின் ஆதரவுத் தளம் மேலும் வலிமையடைந்துள்ளது என்பதை எடுத்துக் காட்டுகின்றது. இம்ரான் கான் பதவியில் இருந்து அகற்றப்பட்ட பின்னர் உலகச் சந்தையில் எரிபொருள் விலை பெருமளவு அதிகரித்துள்ளதும் இம்ரான் கானுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. இம்ரான் கான் மக்கள் முன் உரையாற்றும் போதெல்லாம் இரண்டாவது விடுதலைப் போர் ஆரம்பம் என்கின்றார். பாக்கிஸ்தானை அமெரிக்கப் பிடியில் இருந்து விடுவிக்கும் விடுதலைப் போரை ஆரம்பிப்போமாக என அவர் முழங்குகின்றார். சிஐஏ பாக்கிஸ்தானில் படைத்தளம் அமைக்க தான் மறுத்த படியால் தன்னை ஆட்சியில் இருந்து அகற்றியது அமெரிக்காவே என இம்ரான் கான் குற்றம் சாட்டுகின்றார்.
உறுதியற்ற ஆட்சி
இம்ரான் கானைப் பதவியில் இருந்து அகற்றிவிட்டு ஆட்சிக்கு வந்த ஷபாஸ் ஷெர்ஃப்பால் நாட்டின் பொருளாதாரப் பிரச்சனையை தீர்க்க முடியவில்லை. அதனால் பாக்கிஸ்தானுக்கு ஒரு உறுதியான அரசு தேவைப்படும் நிலையில் தலைமை அமைச்சர் ஷபாஸ் ஷெர்ஃப்பால் உறுதியான ஆட்சி அமைக்க முடியவில்லை. அவரை ஆட்சியில் அமர்த்திய கூட்டணியில் உள்ள மற்றக் கட்சியினர் நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு பொதுத்தேர்தல் நடத்தும்படி அவர நச்சரிக்கின்றனர்.
இம்ரானின் குற்றச் சாட்டை உறுதிசெய்த
Fox News
அமெரிக்க
தொலைக்காட்சி சேவையான Fox Newsஇல் தோன்றிய அதன் அரசியல் ஆய்வாளரான Rebecca Grant பாக்கிஸ்தான்
உக்ரேனுக்கு ஆதரவளிக்க வேண்டும், பாக்கிஸ்தான் இரசியாவுடன் உடன்பாடுகள் செய்வதை நிறுத்த
வேண்டும், சீனாவுடனான தனது ஈடுபாடுகளை மட்டுப்படுத்த வேண்டும், அமெரிக்காவிற்கு எதிரான
கொள்கைகளை கைவிட வேண்டும் ஆகியவை இம்ரான் கான் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டமைக்கான
காரணமாக அமைந்தது என்றார். அதைத் தொடர்ந்து இம்ரான் கான் தன்னை ஆட்சியில் இருந்து நீக்கியமைக்கு
அமெரிக்காதான் காரணம் என்பதை Rebecca Grant உறுதிப்படுத்தியுள்ளது என்றார்.வ்
இம்ரானிற்கு பின் மோசமான பொருளாதாரம்
2022 மார்ச்சில் பாக்கிஸ்தானில் பணவீக்கம் 12.6% ஆக இருந்தது. அத்துடன் பாக்கிஸ்தானின் இறக்குமதி ஏற்றுமதியிலும் பார்க்க அதிகமாகவும் அரச செலவு வரவிலும் அதிகமாகவும் உள்ளது. பாக்கிஸ்தானின் வெளிநாட்டுச் செல்வாணைக் கையிருப்பு $11 பில்லியன் மட்டுமே. இது கடந்த இரண்டு ஆண்டுகாலத்தில் மிகக் குறைவான கையிருப்பாகும். இது இரண்டு மாத இறக்குமதிக்கு மட்டும் போதுமான கையிருப்பாகும். பொதுவாக எந்த ஒரு நாடும் மூன்று மாதத்திற்கு தேவையான கையிருப்பை வைத்திருக்க வேண்டும். பாக்கிஸ்தானிற்கு இது போன்ற நிதி நெருக்கடி புதிதல்ல. கடந்த ஐம்பது ஆண்டுகளில் பதின் மூன்று தடவை அது நிதி நெருக்கடிகளைச் சந்தித்துள்ளது. 2021 ஜூலையில் இருந்து 2022 மார்ச் வரையிலான ஒன்பது மாதப் பகுதியில் பாக்கிஸ்தானின் இறக்குமதி ஏற்றுமதியிலும் பார்க்க $13.7 பில்லியன் அதிகமாக இருந்தது 2020/2021 அதே ஒன்பது மாத காலப்பகுதியில் அது $275 மில்லியனாக மட்டுமே இருந்தது. இதனால் பாக்கிஸ்தான நாணயத்தின் பெறுமதி பெருமளவு வீழ்ச்சியடைந்துள்ளது. மொத்தத்தில் 2021-ம் ஆண்டு இலங்கை இருந்த நிலையில் பாக்கிஸ்தான் 2022 ஏப்ரல் மாதத்தில் இருக்கின்றது. பாக்கிஸ்தானியர் தமது நாட்டை எப்போதும் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். இந்தியா பாக்கிஸ்த்தானைப் போல் அடிக்கடி பன்னாட்டு நாணய நிதியத்திடம் கடன் வாங்கப் போவதில்லை என்பதை இட்டு அவர்கள் விசனம் அடைந்துள்ளனர். அத்துடன் பாக்கிஸ்த்தானின் பொருளாதாரச் சுட்டிகள் பல பங்களாதேசத்தின் சுட்டிகளிலும் பார்க்க மோசமாக இருப்பதையிட்டு அவர்கள் வெட்கப்படுகின்றன.
அடுத்த தேர்தலில் இம்ரானின் வெற்றி வாய்ப்பை அதிகரிப்பவை:
1. பதவியில் இருந்து விலக்கப்பட்ட உடனேயே இமரான் கான் தன் பரப்புரைக் கூட்டங்களை ஆரம்பித்தமை
2. இம்ரான் கானுக்கு பின்னால் அவரே எதிர்பார்த்திராத அளவு மக்கள் கூடுகின்றனர்.
3. உலகப் பொருளாதாரம் உக்ரேன் போரால் பாதிப்படைந்திருப்பது பாக்கிஸ்தானையும் பெரிதும் பாதித்துள்ளமை புதிய தலைமை அமைச்சர் ஷபாஸ் ஷெரிஃப் அவர்களுக்கு எதிர்பாராத தலையிடியைக் கொடுத்துள்ளது.
4. இம்ரான் பாக்கிஸ்தானில் பயங்கரவாதத்தை தணித்திருந்தார்.
5. இம்ரான் கான் ஆட்சியில் இருக்கும் போது மக்களிற்கு சிறந்த மருத்துவ சேவையை வழங்கியிருந்தார்.
6. இம்ரான் கான் பாக்கிஸ்தானின் கல்வித்துறையில் பல முன்னேற்றங்களைச் செய்திருந்தார்.
7. ஷபாஸ் ஷெரிஃப்பின் ஆட்சி அந்நிய சக்திகளால் உருவாக்கப்பட்ட ஆட்சி என பாக்கிஸ்தான் மக்களை இம்ரான் நம்ப வைக்கின்றார். டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் ஷபாஸ் ஷெரிஃப்பின் ஆட்சி “இறக்குமதி செய்யப்பட்ட ஆட்சி” என்ற கொத்துக்குறியில் (hasgtag) நான்கு மில்லியனக்ளுக்கும் அதிகமான பதிவுகள் இடப்பட்டுள்ளன.
8. அறுபது கோடி கைப்பேசி பாவனை உள்ள பாக்கிஸ்தானில் மற்றக் கட்சியினரிலும் பார்க்க இம்ரான் கான் சமூக வலைத்தளங்களை சிறப்பாக கையாளுகின்றார்.
9. பல முன்னாள் படைத்தளபதிகள் இம்ரான் கானைப் பராட்டுகின்றனர்.
அமெரிக்கா தனது பிராந்திய நலன்களிற்காக பாக்கிஸ்தானில் ஊழல் செய்யும் சர்வாதிகாரிகளை ஆட்சியில் அமர்த்துவதை வழமையாகக் கொண்டுள்ளது என்பதை பாக்கிஸ்த்தானிய மக்கள் எல்லோரும் உணர வேண்டும். அமெரிக்காவின் இந்த அணுகு முறையால் பாக்கிஸ்தான் தரமான முறையில் ஆட்சி செய்வதற்கும் மக்களுக்கு நன்மையளிக்க கூடிய வகையில் பொருளாதார முகாமையை செய்வதற்கும் கடினமான ஒரு நாடாக இதுவரை இருந்து வந்துள்ளது. எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு பங்களாதேசையும் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு இலங்கையையும் பாக்கிஸ்த்தான் உதாரணமாக பார்க்க வேண்டும்.
உத்திசார் படைக்கலன்கள், கேந்திரோபாயப் படைக்கலன்கள் என இரு வகை உள்ளன. உத்திசார் படைக்கலன்கள் இலக்குத் தெரிவு, இலக்கை அடைதல், இலக்கை அழித்தல் ஆகியவை இலத்திரனியல் மயப்படுத்தப்பட்டவையாக இருக்கும். அவை குறுகிய தூரம்வரை பாயக் கூடியவையாக இருக்கும். போர்த்தாங்கிகள், கப்பல்கள், விமானங்கள் போன்ற சிறிய இலக்குகளை அழிப்பதற்கு என உருவாக்கப்பட்டவையாக இருக்கும். கேந்திரோபாய படைக்கலன்கள் எதிரியின் படைவலிமை, பொருளாதாரம், அரசியல் வலிமை போன்றவற்றை தகர்கக் கூடியவையாக இருக்கும். அவற்றால் படைத்தளங்கள் படைக்கல உற்பத்தி நிலையங்கள், நகரங்கள், உட்கட்டுமானங்கள், தொடர்பாடல் கட்டமைப்பு போன்றவற்றை அழிக்கலாம். இரசியாவிற்கு எதிராகப் போராட உக்ரேனுக்கு நேட்டோ நாடுகள் வழங்கியவை எல்லாம் உத்திசார் படைக்கலன்களே. இரசியாவிற்கு எதிராக கேந்திரோபாய படைக்கலன்களை வழங்கினால் இரசியாவும் அமெரிக்காவின் எதிரி நாடுகளான ஈரான், வட கொரியா போன்ற நாடுகளுக்கு அவற்றை வழங்கலாம் என்ற கரிசனையால் அவற்றை வழங்கவில்லை. வலிமை மிக்க படைக்கலன்களைக் கொண்ட எதிரியுடன் மட்டுப்படுத்தப் பட்ட படைக்கலன்களைக் கொண்ட மக்கள் போராடும் போது அவர்கள் பலத்த இழப்பைச் சந்திப்பார்கள்.
நோக்கத்தை மாற்றிய புட்டீன்
உக்ரேன் மீதான இரசியாவின் போர் உக்ரேனை நாஜிவாதிகளிடமிருந்து மீட்பதையும் உக்ரேனை படையற்ற பிரதேசமாக்குவதையும் நோக்கங்களாக கொண்டது என இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் கூறிக்கொண்டு போரை 2022 பெப்ரவரி 24-ம் திகதி ஆரம்பித்தார். அவரது இந்த இரண்டாவது ஆக்கிரமிப்புப் போரின் உண்மையான நோக்கங்கள் 1. கிறிமியா மீதான இரசியப் பிடியை உறுதி செய்வது, 2. உக்ரேனில் இரசிய சார்பானவர்களை ஆட்சியில் அமர்த்துவது. 3. உக்ரேனின் கடற்கரைப் பிரதேசம் முழுவதையும் இரசியக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது. 4. இரசியப் படைகள் நிலை கொண்டுள்ள மொல்டோவாவின் Transnistria பிரதேசத்துடன் இரசியாவிற்கு ஒரு நிலத் தொடர்பை ஏற்படுத்துவது, 5. கருங்கடலில் இரசியாவின் ஆதிக்கத்தை மேம்படுத்துவது. உக்ரேனில் இரசிய சார்பானவர்களை ஆட்சியில் அமர்த்த முடியாது என்பதை உணர்ந்த நிலையில் புட்டீன் தனது படையினரை 2022 ஏப்ரல் 6-ம் திகதி உக்ரேன் தலைநகரை சுற்றி வளைத்த தனது படையினரை அங்கிருந்து முழுமையாக விலக்கிக் கொண்டு உக்ரேனின் டொன்பாஸ் பிரதேசத்தை முழுமையாக கைப்பற்றும் நோக்குடன் அங்கு தன் படையினரை அதிகரித்தார். டொன்பாஸ் போருக்கு பொறுப்பாக சிரியாவின் கசாப்புக் கடைக்காரர் என மேற்கு நாடுகள் விபரிக்கும் ஜெனரல் அலெக்சாண்டர் வோர்ணிக்கோவை புட்டீன் நியமித்தார். இரசிய கட்டளைத் தளபதி ருஸ்டாம் மின்னெகயேவ் இரசியா அயல்நாடுகளின் நிலங்களை வென்றெடுக்க உள்ளது என்றார்.
உதவிகளை அதிகரித்த அமெரிக்கா
உக்ரேனின் கிழக்குப் பிராந்த்யத்தில் உள்ள டொன்பாஸ் பிரதேசத்தில் போர் உக்கிரமடையவிருக்கும் நிலையில் அமெரிக்கா 2022 ஏப்ரில் 21-ம் திகதி உக்ரேனியர்களுக்கு எண்ணூறு மில்லியன் டொலர் பெறுமதியான படைக்கலன்களை உதவியாக வழங்குவதாக அறிவித்தது. அமெரிக்காவின் Howitzers ஆட்டிலெறிகள் தொண்ணூறை 184,000 குண்டுகளுடன் உக்ரேனுக்கு அவசரமாக வழங்குதல் அதன் முதல் கட்டமாக அமைகின்றது. அவற்றை இயக்குவதற்கான துரிதப் பயிற்ச்சியையும் அமெரிக்கப் படையினர் பெயர் குறிப்பிடாத ஐரோப்பிய நாடு ஒன்றில் வைத்து உக்க்ரேனியர்களுக்கு வழங்குகின்றனர். உக்ரேனுக்கு நிண்ட தூர ஆட்டிலெறிகள் 300 தேவைப்படுகின்றது. அமெரிக்கா 72ஐ மட்டும் கொடுத்துள்ளது. உக்ரேன் தலைநகர் கீவ்வைப் போல் அல்லாமல் டொன்பாஸ் பிரதேசம் சமதரைப் பிரதேசமாகும். அங்கு ஆட்டிலெறிகள் பவிப்பது அதிக நன்மை தரக்கூடியதாக இருக்கும் என அமெரிக்காவும் இரசியாவும் நம்புகின்றன. உக்ரேன் போரில் துருக்கியின் TB-2 ஆளிலி வானூர்திகள் சிறப்பாகச் செயற்பட்ட படியால் அமெரிக்கா Ghost Phoenix எனப்படும் ஆளிலி வானூர்திகளை மிக அவசரமாக வடிவமைத்து உக்ரேனுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது. இவை எதிரியின் இலக்கு மீது மோதி தன்னையும் அழித்து இலக்கையும் அழிக்கும் தன்மை கொண்டவை. இவை tube launched loitering munition என்னும் வகையைச் சேர்ந்தவை. அமெரிக்காவின் Switchblade என்னும் ஆளிலிவானூர்திகளைப் போன்றவை. ஏற்கனவே அமெரிக்கா அறுநூற்றுக்கும் மேற்பட்ட Switchbladeகளை உக்ரேனுக்கு அனுப்பியுள்ளது. Ghost Phoenix ஆளிலிகள் தொடர்ந்து பத்து மணித்தியாலங்கள் பறக்கக் கூடியன பத்து கிலோ மீட்டர் தொலவில் உள்ள ஆட்டிலெறிகளையும் தாங்கிகளையும் அழிக்கக் கூடியவை. அமெரிக்கா தனது தனியார் படைத்துறை உற்பத்தியாளர்களுக்கு அவசரமாக உக்ரேன் களமுனைக்கு ஏற்ப படைக்கலன்களை உருவாக்கும் வேண்டுகோளையும் விடுத்துள்ளது.
இரசியாவிற்குள் தாக்குதல்கள் தீவிரமடையலாம்
சுலோவாக்கியா தன்னிடமுள்ள பதினான்ங்கு மிக்-29 போர் விமானங்களையும் உக்ரேனுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. உக்ரேனிடம் உதிரிப்பாகங்கள் இன்றி செயற்படாமல் இருந்த போர் விமானங்கள் தற்போது செயற்படக் கூடிய நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. ஆனாலும் உக்ரேனிடம் வலிமை மிக்க வான் படை இல்லை என்பதுதான உண்மை. இரசியாவின் முதன்மை கப்பலான Moskovaவை உக்ரேன் தனது சொந்த தயாரிப்பான நெப்டியூன் ஏவுகணைகள் மூலம் மூழ்கடித்தது. அதனை இடமறிதலில் துருக்கியின் TB-2ஆளிலிகள் முக்கிய பங்கு வகித்தன. இனிவரும் காலங்களில் அந்த ஏவுகணைகள் இரசியாவிற்குள் சென்று தாக்கலாம். ஏற்கனவே உக்ரேனின் உலங்கு வானூர்திகள் இரசியாவின் Belgorod நகருக்குள் ஊடுருவி அங்குள்ள எரிபொருள் குதங்களை அழித்துள்ளன. 2022 ஏப்ரல் 25-ம் திகதி இரசிய உக்ரேன் எல்லையில் இருந்து 154கிமீ தொலைவில் இரசியாவிற்குள் உள்ள எரிபொருள் குதம் ஒன்று தீப்பிடித்து எரிகின்றது. இவை போன்ற பல நிகழ்வுகள் இனி இரசிய நிலப்பரப்பில் நடக்கலாம். இரசியாவின் வான் பாதுகாப்பு முறைமை தேர்வுக்கு உட்படுத்தப்படலாம்.
இரசியாவின் எதியோப்பியாவிற்கான தூதுவரகத்தில் இரசியாவின் கூலிப்படைகளுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு விடுத்ததும் அங்கு நீண்ட வரிசையில் இளையோர் திரண்டனர் எனவும் செய்திகள் வந்திருந்தன. ஜோர்ஜியா, இரசியாவின் தூரகிழக்கு பிரதேசம் ஆகியவற்றில் இருந்து பல இரசியப் படையினர் உக்ரேனின் டொன்பாஸ் பிரதேசத்தில் களமிறக்கப்பட்டுள்ளனர். டொன்பாஸ் போரின் ஆரம்பத்தில் Kharkhiv நகரம் உட்பட 42 கிராமங்களை இரசியா இலகுவாக கைப்பற்றியது. ஏற்கனவே இரசியா Mariupol, Kherson ஆகிய இரு மூக்கிய நகரங்களை இரசியா கைப்ப்ற்றியுள்ளது.
அமெரிக்காவின் செய்மதிகளின் உளவு, வேவு, கண்காணிப்பு உக்ரேனுக்கு நல்ல பயன்களைக் கொடுக்கின்றன. ஆனால் கேந்திரோபாயப் படைக்கலன்களை அமெரிக்கா உக்ரேனுக்கு வழங்காமல் இரசியாவை உக்ரேனால் வெற்றி கொள்ள முடியாது என்பதை அமெரிக்கா அறியும். உக்ரேனை வெற்றி கொள்ள வைப்பதிலும் பார்க்க ஒரு நீண்ட போரையே அமெரிக்கா விரும்புகின்றது.
2022 மே மாதம் உக்ரேன் போரின் திசையை முடிவு செய்யும் மாதமாக இருக்கும்.
2021
டிசம்பரில் அமெரிக்கா கூட்டிய மக்களாட்சி உச்சி மாநாட்டில் பங்கேற்ற பக்கிஸ்தான் மறுத்திருந்தது.
அந்த மாநாடு இரசியாவிற்கும் சீனாவிற்கும் எதிராக கூட்டப்பட்ட மாநாடு எனக் கருதப்பட்டது.
சீனாவில் 2022 பெப்ரவரியில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் ஆரம்ப நிகழ்வுகளை
நேட்டோ நாடுகளின் அரசுறவியலாளரக்ள் புறக்கணித்தனர். ஆனால் அப்போதைய பாக் தலைமை அமைச்சர்
இம்ரான் கான் பங்கேற்றார்.
2022
பெப்ரவரி 24-ம் திகதி இரசிய - உக்ரேன் போர் ஆரம்பித்தவுடன் இரசியாவைக் கண்டிக்கும்
படி அப்போது தலைமை அமைச்சராக இருந்த இம்ரான் கான் மீது பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின்
தூதுவர்கள் அழுத்தம் கொடுத்தனர். ஐநா சபையில் இரசியாவிற்கு எதிராக பாக் வாக்களிக்க
வேண்டும் என 22 நாடுகளின் தூதர்கள் பாக் அரசுக்கு ஒரு பகிரங்க கடிதத்தையும் எழுதியிருந்தனர்.
அதை மறுத்த இம்ரான் கான் பாக்கிஸ்தான் யாருக்கும் அடிமையில்லை என முழங்கினார். அத்துடன்
இந்தியாவிற்கு இப்படி ஒரு கடிதத்தை எழுதினீர்களா எனக் கேள்வியும் எழுப்பினார். ஐக்கிய
நாடுகள் சபையில் இரசியாவிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானங்களில் பாக்கிஸ்தான்
நடு நிலை வகித்தமை நேட்டோ நாடுகளை அதிருப்த்திக்கு உள்ளாக்கியது.
பாக்கிஸ்தான் இரசிய
உறவு
14/08/1947 இல் சுதந்திரமடைந்த பாக்கிஸ்தானை 1948 மே மாதம் சோவியத்
ஒன்றியம் (இரசியா) அங்கீகரித்தது. பாக்கிஸ்தானில் மக்களாட்சி நடக்கும் போது இரசிய பாக்
உறவு நல்ல நிலையில் இருக்கும். படையினரின் ஆட்சி நடக்கும் போது அது மோசமடையும். பாக்கிஸ்தானில்
படையினரின் ஆட்சிகள் உருவாகுவதின் பின்னணியை அறிந்து கொள்ளலாம். 1965-ம் ஆண்டு நடந்த
இந்தியா – பாக் போரின் போது சோவியத் ஒன்றியம் தலையிட்டு போரை நிறுத்தியதுடன் இந்தியா
கைப்பற்றிய நிலப்பரப்பில் இருந்து இந்தியாவை சோவியத் ஒன்றியம் வற்புறுத்தி விலகச் செய்தது.
அந்த வற்புறுத்தலின் பின்னணிய அப்போதைய இந்திய தலைமை அமைச்சர் லால்பகதூர் சாஸ்த்திரியின்
இறப்பில் முடிந்தது. 1971இல் நடந்த பங்களாதேச விடுதலைப் போரில் பாக்கிஸ்தானுக்கு எதிராக
சோவியத் ஒன்றியம் இந்தியாவுடன் உறுதியாக இணைந்திருந்தது. 1979-1989 வரை நடந்த சோவியத்
ஆப்கானிஸ்தான் போரின் போது சோவியத்-பாக் உறவு மோசமடைந்தது. இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில்
இருந்து அமெரிக்காவிடமிருந்து அதிக படைக்கலன்களை இந்தியா வாங்கத் தொடங்கியதில் இருந்து
இரசிய பாக் உறவு நெருக்கமடைந்தது. சீனாவுடன் பாக்கிஸ்த்தானின் நட்பு ஏற்கனவே வளர்ந்திருந்த
படியால் சீன இரசிய உறவு வளரும் போது பாக் – இரசிய உறவும் வளர்ந்தது. Pakistan
Stream Gas Pipeline Project (PSGP) என்னும் பாக்கிஸ்தானில் 1,100கிலோ மீட்டர் நீளமான
எரிவாயுக் குழாய் அமைக்கும் ஒப்பந்தம் 2021-ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டது. இரு நாடுகளின்
உறவை வளர்க்கும் என எதிர்பார்க்கப்பட்ட லாஹூரையும் கராச்சியையும் எரிவாயு விநியோகத்தில்
இணைக்கும் $2.5பில்லியன் பெறுமதியான இத்திட்டம் இன்னும் முற்றுப் பெறவில்லை. ஆர்மினியா அஜர்பைஜான்
போரில் இரசியாவின் நிலைப்பாடு, கஜக்ஸ்த்தானில் இரசியா தலையிட்டு அரசுக்கு எதிரான கிளர்ச்சியை
அடக்கியமை பாக்கிஸ்த்தானின் முன்னாள் தலைமை அமைச்சரை மிகவும் கவர்ந்திருந்தது. தனது
ஆட்சியையும் இரசியா பாதுகாக்கும் என நம்பினார். ஆனால் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லாப்
பிரேணையை இரசியாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
டொனால்ட்
டிரம்ப் பாக்கிஸ்தானை வெறுத்தார்
1998-ம்
ஆண்டு பராக் ஒபாமா பாக்கிஸ்தானுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்தார். ஆனால்
2001-ம் ஆண்டு செப்டம்பரில் நடந்த நியூயோர்க் நகர் இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னர்
அமெரிக்காவிற்கு பாக்கிஸ்தானை அதிகம் தேவைப்பட்டது. அமெரிக்கா தொடர்ச்சியாக பாக்கிஸ்த்தானுக்கு
பல உதவிகளை செய்வதாகவும் ஆனால் அதற்கு கைமாறாக பாக்கிஸ்தான் அமெரிக்காவிற்கு எதிராக
செயற்படுவதாகவும் இஸ்லாமியத் தீவிரவாதத்தை வளர்ப்பதாகவும் அமெரிக்க அதிபராக இருந்த
டிரம்ப் குற்றம் சாட்டினார். பாக்கிஸ்தான் படையினருக்கு அமெரிக்கா வழங்கி வந்த பயிற்ச்சிகளையும்
நிறுத்தினார். அதனால் 2018-ம் ஆண்டு பாக் படைத்தளபதிகள் தொடர்ச்சியாக இரசியா சென்று
பாக் படையினருக்கு இரசியா பயிற்ச்சி வழங்கும் ஒப்பந்தங்களையும் செய்தனர். 2018 செப்டம்பரில்
அமெரிக்கா பாக்கிஸ்தானிற்கு வழங்கவிருந்த முன்னூறு மில்லியன் நிதி உதவியையும் டிரம்ப்
இரத்துச் செய்தார்.
அமெரிக்கா-இந்தியா-பாக்கிஸ்தான்
அமெரிக்க-பாக்
உறவும் அமெரிக்க-இந்திய உறவும் ஒன்றுடன் ஒன்று எப்போதும் முரண்பட்டதாகவே இருக்கின்றது.
பிரித்தானிய தலைமை அமைச்சர் பொறிஸ் ஜோன்சன் இந்தியாவை இரசிய நட்பில் இருந்து பிரித்து
நேட்டோ நாடுகளின் பக்கம் இழுப்பதற்காக 2022 ஏப்ரில் 20-ம் திகதி இந்தியா பயணமானார்.
இந்தியாவையும் இரசியாவிடமிருந்து பிர்க்க வேண்டும் பாக்கிஸ்தானையும் இரசியாவுடன் நெருங்காமல்
பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த நிலையில் நேட்டோ நாடுகள் பாக்கிஸ்த்தானை எப்படிக்
கையாளப் போகின்றன என்ற கேள்விக்கான சாத்தியமான பதில்கள்:
1. பாக்கிஸ்தானில்
இரசியாவிற்கு பாதகமான அமெரிக்காவிற்கு சாதகமான ஆட்சியாளர்களை ஆட்சியில் அமர்த்துவது.
2022 ஏப்ரல் மாதம் புதிய பாக் தலைமை அமைச்சர் ஷெபாஸ் ஷரிஃப் அமெரிக்காவுடன் உறவை விரும்புகின்ற
ஒருவர். ஆனால் அவரது பதவிக் காலம் இரண்டு கூட நீடிக்க முடியாது. 2023 ஒக்டோபருக்கு
முன்னர் தேர்தல் நடக்க வேண்டும். அவரது கூட்டணிக் கட்சிகள் சீக்கிரம் தேர்தல் வேண்டும்
என கதறுகின்றனர.
2. பாக்கிஸ்தானைப் பிரிப்பது. பாக்கிஸ்தானின் சிந்து, பலவரிஸ்தான்,
பலுச்சிஸ்தான் ஆகிய மாகாணங்களில் பிரிவினைவாதம் தலை தூக்கியுள்ளது. பாக்கிஸ்த்தானின்
கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பலுச்சிஸ்த்தான் மாகாணம் இருக்கின்றது. அங்குள்ள குவாடர்
துறைமுகம் சீனாவிற்கு சொந்தமானதாக இருக்கின்றது. அத்துறைமுகம் சீனாவின் முத்துமாலைத்
திட்டத்திலும் சீனாவின் பட்டி-பாதை முன்னெடுப்பு என்னும் பொருளாதாரத் திட்டத்திலும்
முக்கிய பங்கு வகிக்கின்றது. ஏற்கனவே பலுச் இன மக்கள் சீனாவின் அபிவிருத்தித் திட்டங்களால்
கடும் சினம் அடைந்துள்ளனர். சீனர்களுக்கு எதிரான தீவிரவாத தாக்குதல்களும் அங்கு நடந்துள்ளன.
பலுச்சிஸ்த்தான் பிரிவினை ஈரானில் வாழும் பலுச் இன மக்களையும் பிரிவினைவாதத்தை வளர்க்கும்.
அதனால் பலுச் மக்கள் பாக்கிஸ்தானிற்கு ஈரானுக்கும் எதிராக அமெரிக்கவால் பாவிக்கக் கூடியவர்களாக
இருக்கின்றனர்.
இந்தியாவின் இந்துத்துவா ஆட்சியாளர்களின் மனதில் இருப்பவற்றை
அவ்வப்போது சுப்பிரமணிய சுவாமி போட்டு உடைப்பது வழமை. பாக்கிஸ்தானை நாம் நான்கு நாடுகளாகப்
பிளவு படுத்துவோம் என அவர் சொன்னதையும் இங்கு கருத்தில் கொள்ள வேண்டும். பிரித்தானிய இந்தியா
இந்தியா பாக்கிஸ்தான் எனப் பிரியும் போது பலுச் மக்கள் இந்தியாவுடன் இணைய விரும்பினர்.
நேரு அதை ஏற்க மறுத்தார். பலுச் இன மக்கள் அடிப்படையில் ஈரானியர்கள் ஆகும்.
பாக்கிஸ்த்தான் இரசிய சீன கூட்டில் இணைவது அதன் பிராந்திய ஒருமைப்பாட்டை
கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கும்.
2022 ஏப்ரல் 14-ம் திகதி இரசியாவின் பத்தாயிரம் தொன் எடையுள்ள Moskva என்னும் வழிகாட்டல் ஏவுகணை தாங்கிக் கப்பல் உக்ரேனின் Odessa மாகாணத்திலிந்து 65 கடல் மைல் தொலைவில் கருங்கடலில் பயணிக்கையில் உக்ரேனியப் படையினர் வீசிய இரு R-360 Neptune ஏவுகணைகள் மூலம் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது. அதன் தளபதி உட்பட அதில் பயணித்த 510 பேரும் கொல்லப்பட்டதாக உக்ரேன் சொல்வதை இரசியா மறுத்துள்ளது. இரசியாவின் தலைநகரின் பெயர் சூட்டப்பட்ட Moskva கப்பல் அதன் கடற்படையின் பெருமை மிகு கப்பலாகும். அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் உக்ரேனிய உலங்கு வானூர்திகள் இரசியாவின் Belgorod நகருக்குள் ஊடுருவி இரசியப் படையினருக்கு எரிபொருள் வழங்கும் குதம் ஒன்றையும் அழித்தனர். 2022 மார்ச் மாதம் 29-ம் திகதி இன்னும் ஒரு எரிபொருள் குதம் அழிக்கப்பட்டது. இதற்கு முன்னர் கருங்கடல் மற்றும் அஜோவ் கடல் பகுதியில் உக்ரேன் எல்லைக்கு அண்மையாக செயற்பட்டு வந்த இரசியக் கடற்படைக்கலன்கள் யாவும் அங்கிருந்து விலகி தூரத்தில் செயற்படுவதாக போரை அவதானிப்பவர்கள் சொல்கின்றனர்.
இரு கேந்திர முக்கியத்துவ இழப்பு
உக்ரேனின் கிழக்கில் உள்ள டொன்பாஸ் பிரதேசத்தை இரசியாவின் முழுமையான கட்டுப்பாட்டினுள் கொண்டு வருவதற்கு இரசியாவின் கடல் வலிமையும் Belgorod நகரில் இருந்து வழங்கப்படும் விநியோகங்களும் அவசியமாகும். முதலில் இரசியா Moskvaவில் தீப்பிடித்ததாக பொய்யுரைத்தது. பின்னர் இரசியா பழுதடைந்த Moskvaவை வேறு கப்பல் மூலம் கட்டி இழுத்துச் செல்கையில் கடலில் மூழ்கியதாக தெரிவித்துள்ளது. நெப்டியூன் ஏவுகணைகளின் தாக்கத்தால் Moskvaவில் உள்ள ஏவுகணைகள் வெடித்து அது நீரில் மூழிகியுள்ளது. செய்மதிகள் மூலமான அவதானிப்புக்கள் மூலம் Moskvaவின் மூழ்கடிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இரசியாவின் கருங்கடல் கடற்படையணியில் தலைமைக் கப்பலாக Moskva இருந்தது.
இரசியாவின் Moskva ஏவுகணை தாங்கி
இரண்டாம் உலகப் போரின் பின்னர் இரசியா இழந்த மிகப் பெரிய கப்பல் Moskva ஆகும். இரசியாவின் P-1000 கப்பல் எதிர்ப்பு ஏவுகணைச் செலுத்திகள் பதினாறு, இரசியாவின் பிரபல விமான எதிப்பு ஏவுகணை முறைமையான S-300இன் 64 செங்குத்து குழாய்கள், Osa என்னும் வான் தற்பாதுகாப்பு ஏவுகணைகளின் செலுத்திகள் நாற்பது, நீரடிஏவுகணைகள் (Torpedo) செலுத்திகள், உலங்கு வானூர்தி தளங்கள் ஆகியவற்றுடன் Moskva வழிகாட்டி கப்பல் இரசியாவின் கருங்கடல் பிராந்தியத்தின் மீதான் ஆதிக்கத்தின் கோட்டையாக இருந்தது. 12,500 தொன் எடையுள்ள Moskva 1979இல் செயற்பாட்டிற்கு விடப்பட்டது. அன்றிலிருந்து அதற்கு பல தொழில்நுட்ப மேம்பாடுகள் செய்யப்பட்ட்ன. அதில் 440மைல்கள் பாயக் கூடிய கப்பல்களை அழிக்கும் பதினாறு ஏவுகணைகள் உள்ளன. இரண்டு வகையான முப்பரிமாண ரடார்கள், கப்பலோட்டும் ரடார்கள், மூன்று வகையான தீயணைக்கும் ரடார்கள் எனப் பலதரப்பட்ட ரடாரகளும் அதில் உள்ளன. Moskvaவை இழந்தமையால் எதிரியின் விமானங்கள், ஏவுகணைகள், உலங்கு வானூர்திகள், ஆளிலிகள் போன்றவை இரசியாவின் கடற்கலனிகள் மீது தாக்குதல் செய்வதை தடுக்கும் திறன் குறைந்துள்ளது.
உக்ரேனின் உன்னத தயாரிப்பு நெப்டியூன்
உக்ரேன் முதன் முதலாக தனது நெப்டியூன் ஏவுகணையை போரில் பயன்படுத்தியுள்ளது. நெப்டியூன் துல்லியத் தாக்குதல் செய்யக் கூடிய வழிகாட்டல் ஏவுகணையாகும். நெப்டியூன் ஏவுகணைகள் சோவியத் ஒன்றிய காலத்தில் உருவாக்கப்பட்ட KH-25 என்ற ஏவுகணைகளை அடிப்படையாக கொண்டு உக்ரேனியர்களால் உருவாக்கப்பட்ட ஏவுகணையாகும். 2014-ம் ஆண்டு இரசியா உக்ரேனை ஆக்கிரமித்த போது உக்ரேனியர் தம் கடற்படைக்கலன்களில் எண்பது விழுக்காட்டை இழந்த பின்னர் உக்ரேனியரக்ள் நெப்டியூன் ஏவுகணைகளை உருவாக்கத் தொடங்கினர். KH-25 ஏவுகணைகள் கடலிலும் வானிலும் இருந்து வீசப்படும் ஏவுகணைகளாகும். ஆனால் உக்ரேனியர்கள் அதில் பல மாற்றங்களைச் செய்து தரையில் பார ஊர்திகளிலும் இருந்து ஏவக் கூடிய வகையில் மாற்றியுள்ளனர். அதனால் அவை மும்முனைகளில் இருந்தும் வீசக் கூடையவை. நெப்டியூன் ஏவுகணைகள் இருநூறுமைல்கள் வரை பாயக் கூடியவை. அவற்றின் முக்கிய இலக்குகள் கடற்கலன்களாகும். உக்ரேனின் மேற்கு கரையில் உள்ள அஜோவ் கடலிலும் தெற்குப் பகுதியில் உள்ள கருங்கடலிலும் உக்ரேனின் பாதுகாப்பை உறுதி செய்ய உருவாக்கப்பட்டன. உக்ரேனின் LUCH Design Bureau நெப்டியூனை உருவாக்கியது. உக்ரேனின் நெப்டியூன் ஏவுகணைகள் கருங்கடலின் எப்பாகத்திலும் தாக்கும் திறனை உக்ரேனுக்கு வழங்கியுள்ளது. R-360 நெப்டியூன் ஏவுகணையால் ஐயாயிரம் தொன் எடையுள்ள கடற்கலனை அழிக்க முடியும் Moskva வழிகாட்டி கப்பல் பத்தாயிரம் தொன் எடையுள்ளது என்றபடியால் அதன் மீது இரு ஏவுகணைகள் வீசப்பட்டன. நெப்டியூனின் முதலாவது பரிசோதனை 2016 மார்ச் மாதம் மேற்கொள்ளப்பட்டது. எதிரியின் இடைமறிப்பு ஏவுகணைகளால் தடுக்கப்படுவதை தடுக்க நெப்டியூன் கடல் மேற்பரப்பில் இருந்து பத்து முதல் பதினைந்து மீட்டர் உயரத்தில் பறந்து செல்லும் இறுதியாக இலக்கைத் தாக்க முன்னர் அது மூன்று முதல் பத்து மீட்டர் உயரத்தில் பறக்கும். அந்த சிறப்புத் தன்மையால் S-300 உட்பட பல ஏவுகணை எதிர்ப்பு முறைமைகளைக் கொண்ட Moskva வழிகாட்டி கப்பலை அழித்தது. ஐந்து மீட்டர் நீளமான நெப்டியூன் ஏவுகணை 320 இறாத்தல் எடையுள்ள உயர் திறன் வெடிபொருள் கொண்ட குண்டுகளைத் தாங்கிச் செல்லும். அது தனது வழிகாட்டல் முறைமையையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
இரசியாவின் கண்காணிப்பு, வேவு, உளவு தோல்வி
பெருவல்லரசாக கருதப்படும் இரசியா தன் எதிரியின் நகருவுகளை துல்லியமாக கண்காணிக்க வேண்டும். தொடர்ச்சியாக வேவு பார்க்க வேண்டும். போதிய உளவாளிகளை எதிரிகளிடையே நிறுத்தியிருக்க வேண்டும். நெப்டியூன் ஏவுகணையை செலுத்துவதற்கு பெரிய பார ஊர்தி தேவை. அதன் உயர்ந்த செலுத்தியை தூக்கி நிறுத்த வேண்டும். இவற்றை செய்மதியில் இருந்தே அவதானிக்க முடியும். உக்ரேனின் ஏவுகணைச் செலுத்திகளையும் அதன் ஏவுகணை இருப்பு களஞ்சியங்களையும் அழிக்க இரசியா தவறியமை அதன் வலுவற்ற தன்மையை எடுத்துக் காட்டுகின்றது.
2022 பெப்ரவரி 24-ம் திகதி பல நேட்டோ நாடுகள் மட்டுப்படுத்தப்பட்ட வலுவுள்ள படைக்கலன்களை உக்ரேனுக்கு வழங்குகின்றன. முதல் தடவையாக வலிமை மிக்க படைக்கலன் ஒன்றை இரசியாவிற்கு எதிராக பாவித்து இரசியாவிற்கு பேரிழப்பை உக்ரேன் ஏற்படுத்தியுள்ளது. சோவியத் ஒன்றியத்தின் ஒரு குடியரசாக இருந்த போது மிகச் சிறந்த படைத்துறை உற்பத்தி நாடாக இருந்த உக்ரேன் மீண்டும் தன் படைக்கல உற்பத்தியை மேம்படுத்த ஆரம்பித்துள்ளது. உக்ரேனின் நெப்டியூன் அதன் படைக்கல உற்பத்தியின் மீள் எழுச்சியை உறுதி செய்துள்ளது. நூற்றுக்கு மேற்பட்ட நெப்டியூன் ஏவுகணைகள் உக்ரேனிடம் உள்ளன.
2022 ஏப்ரல் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் இருந்து உக்ரெனின் கிழக்குப் பிரதேசமான டொன்பாஸ் பகுதியில் இரசிய அதிபர் புட்டீன் தனது ஆக்கிரமிப்பு போரை தீவிரப்படுத்தியுள்ளார். 2014-ம் ஆண்டு உக்ரேனின் டொன்பாஸ் பிரதேசத்தை இரசியப் படையினரின் ஆதரவுடன் அங்கு வாழும் இரசிய மக்கள் பிரிவினைவாதப் போர் தொடுத்தனர். உக்ரேனின் முழு நிலப்பரப்பையும் ஆக்கிரமிக்கும் விளடிமீர் புட்டீனின் திட்டத்தில் அது முக்கிய பங்காக அமைந்தது. உக்ரேனில் மிகவும் கைத்தொழில் மயமாக்கப்பட்ட டொன்பாஸ் பிரதேசத்தின் மிகவும் நகரமயமாக்கப்பட்ட பகுதிகளை இரசியப் படையினரும் டொன்பாஸ் பகுதியில் வாழும் இரசியர்களும் இணைந்து 2014-15இல் நடந்த போரில் கைப்பற்றிக் கொண்டனர். டொன்பாஸ் பகுதியில் வாழும் இரசியர்களுக்கு அங்கு சுயநிர்ணய உரிமை உள்ளதா என நாம் அறிந்து கொள்ள வேண்டியுள்ளது.
டொன்பாசின் வரலாறு
ஆறாம் நூற்றாண்டில் உக்ரேனிலும் கிறிமியாவிலும் கிரேக்கர்கள் குடியேற்ற ஆட்சி ஏற்படுத்தினர். அதன் பின்னர் அவர்களுடன் ஈரானியர்கள் வர்த்தகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டனர். தொடர்ந்து துருக்கியர்கள் அப்பிரதேசத்தில் ஆதிக்கம் செலுத்தினர். துருக்கியர்களிடமிருந்து உக்ரேனியர்கள் ஏழாம் நூற்றாண்டில் சுதந்திரம் பெற்றுக் கொண்டனர். பின்னர் அவர்களை அரபுக்கள் ஆக்கிரமித்தனர். உக்ரேனியர்கள் கிரேக்கர், ரோமர், துருக்கியர், அரபுக்கள், ஈரானியர் போன்ற பண்டைய நாகரிகம் மிக்க இனங்களுடன் தொடர்பு பட்டவர்களாக இருந்தபடியால் அவர்களும் நாகரிகத்தில் சிறந்து விளங்கினர். தற்போதைய இரசியத் தலைநகர் மொஸ்க்கோ ஒரு கிராமமாக இருந்த போது உக்ரேனியத் தலைநகர் கீவ் ஒரு உலகத்தரம் வாய்ந்த நகராக இருந்தது. 18-ம் நூற்றாண்டின் பின்னரே உக்ரேனின் கிழக்குப் பதியான டொன்பாஸ் பிரதேசத்துடன் இரசியர்கள் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டனர்.
நிலக்கரிக்காக நிலம் பிடித்த இரசியர்
கைத்தொழில் புரட்சி ஐரோப்பாவிற்கு பரவிய நிலையில் நிலக்கரிக்கான தேடல் ஐரோப்பாவில் தீவிரமானது. 1721-ம் ஆண்டு உக்ரேனின் கிழக்குப் பகுதியான டொன்பாஸ் பிரதேசத்தில் நிலக்கரி இருப்புக் கண்டறியப்பட்டது. மரம் பழுக்க வரும் வௌவால்களாக கிரேக்கர், சேர்பியர், இரசியர் எனப்பலர் அங்கு சென்று நிலக்கரி அகழும் தொழிலில் ஈடுபட்டனர். பிரித்தானிய முதலாளிகளும் அங்கு அக்கறை காட்டினர். 1869-ம் ஆண்டு வேல்ஸ் வர்த்தகரான John Hughes என்பவர் டொன்பாஸ் பகுதியில் உருக்கு அகழ்வில் ஈடுபட்டு அங்கு பெரிய உருக்கு ஆலையையும் நிறுவினார். அவரே Donetsk என்ற நகரை உருவாக்கிவர் ஆவார். Donetsk இரசியர்களால் உருவாக்கப்பட்டதல்ல என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். Russian Imperial Census என்ற இரசிய ஏகாதிபத்தியத்தின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பிரிவு 1897 ச்செய்த கணக்கெடுப்பின் படி Donetsk மாகாணத்தில் 52.4% உக்ரேனியர்களும் 28.7% இரசியர்களும் வாழ்ந்துள்ளனர். கிரேக்கர்கள், ஜெர்மனியர்கள், யூதர்கள், தாட்டார்கள் போன்றவரகளும் அங்கு வாழ்ந்துள்ளனர். 1918-ம் ஆண்டு வரை உக்ரேனிய குடியரசின் கட்டுப்பாட்ட்டில் டொன்பாஸ் பிரதேசம் இருந்தது. பின்னர் இரசியர்கள் உக்ரேனை ஆக்கிரமித்து உக்ரேனையும் தங்களது “பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசு” என்பதன் ஒரு பகுதியாக்கினர். உக்ரேனையும் சோவியத் ஒன்றியத்தின் ஒரு ஒரு “குடியரசு” எனவும் பறைசாற்றினர். சோவியத் ஒன்றிய காலத்தில் அதில் இணைக்கப்பட்ட குடியரசுகளின் வளம் மிக்க பகுதிகளில் இரசியர்கள் திட்டமிட்டு குடியேற்றப்பட்டனர். அதனால் டொன்பாஸ் பிரதேசத்தில் இரசியர்கள் திட்டமிட்ட முறையில் பெரும்பான்மை இனமாக்கப்பட்டனர். Donetsk பகுதியில் 52.4% விழுக்காடாக இருந்த உக்ரேனியர்கள் 46% ஆக்கப்பட்டு 28.7% ஆக இருந்த இரசியர்கள் 48.15% ஆக அதிகரிக்கப்பட்டனர். இதுவே Luhansk மாகாணத்திலும் நடந்தது. ஆக்கிரமித்து இணைத்து குடியேற்றம் மூலம் பெரும்பான்மை ஆக்கப்பட்டவர்களுக்கு சுய நிர்ணய உரிமை உண்டா? கட்டமைக்கப்ப்ட்ட இனக்கொலை, இனச்சுத்தீகரிப்பு போன்றவற்றை இரசியா பல நூற்றாண்டுகளாக உக்ரேனியர்களுக்கு சொந்தமாக இருந்த டொன்பாஸ் பிரதேசத்தில் செய்யவில்லை என்பதை மறுக்க முடியுமா?
உக்ரேனின் ஒரு பகுதி டொன்பாஸ்
சோவியத் ஒன்றியத்தில் ஒரு குடியரசாக இருந்த போது டொன்பாஸ் பகுதி உக்ரேனின் பகுதியாகவே இருந்தது. சோவியத் ஒன்றியத்தின் அரசியலமைப்பிற்கு ஏற்ப உக்ரேன் ஒன்றியத்தில் இருந்து பிரிந்து சென்றது. ஒரு நாடாக ஐக்கிய நாடுகள் சபையால் உக்ரேன் ஒரு நாடாக ஏற்றுக் கொள்ளப்பட்ட போது அதன் ஒரு பகுதியாக டொன்பாஸ் இருந்தது. உக்ரேன் சோவியத் ஒன்றியதில் இருந்து பிரியும் போதோ அல்லது தனிநாடாகப் பிரகடனப் படுத்தப் பட்ட போதோ டொன்பாஸ் பகுதியில் வாழும் இரசியர் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. பெரும்பாலான உக்ரேனியர்களின் கருத்து தம்முடைய கடந்த காலத்தை இரசியா அபகரித்தது. என்பதாகும். அதே இரசியா தமது எதிர்காலத்தை அபகரிக்க அனுமதிக்க மாட்டோம் என்பதும் பெரும்பாலான உக்ரேனியர்களின் நிலைப்பாடும் ஆகும். அதனால அவர்கள் இரசியாவின் இரசியாவின் கூட்டு பாதுகாப்பு ஒப்பந்த நாடுகள் என்னும் படைத்துறைக் கூட்டமைப்பில் இணைவதிலும் பார்க்க வட அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட நேட்டோ கூட்டமைப்பில் இணைய விரும்பினார்கள் இதற்கான நகர்வுகளை 2014இல் உக்ரேனியர்கள் செய்த போது இரசியா உக்ரேனை ஆக்கிரமித்தது. 2019இல் உக்ரேனின் அரசியலைப்பு நேட்டோவில் உக்ரேன் இணைவதை உறுதி செய்யும் வகையில் உக்ரேன் அதிபர் செயற்பட வேண்டும் என திருத்தப்பட்டது. இரண்டாம சோவியத் ஒன்றியத்தை (USSR-2.0) கட்டி எழுப்பும் வெறியுடன் இருக்கும் விளடிமீர்புட்டீனுக்கு அது கடும் சினத்தை மூட்டியதனால் 2021இல் உக்ரேனை சுற்றி இரசியப் படைகளை நிறுத்தி உக்ரேனை ஆக்கிரமிப்பேன் என மிரட்டிய போது உக்ரேனியர்கள் மசியவில்லை. சீற்றமடைந்த புட்டீன் 2022 பெப்ரவரி 24-ம் திகதி உக்ரேனை ஆக்கிரமிக்க அங்கு தன் படைகளை அனுப்பினார்.
புட்டீனின் நில அபகரிப்பு வெறி
2014இல் உக்ரேனின் கிழக்குப் பகுதிக்கு இரகசியமாக இரசியப் படையினரை அனுப்பி அங்கிருந்த உக்ரேனியப் படையினர் விரட்டப்பட்டனர். அதனால் டொன்பாஸ் பகுதியின் மீதான கட்டுப்பாட்டை உக்ரேனியர்கள் இழந்தனர். டொன்பாஸ் பகுதியின் Donetsk மற்றும் Luhansk மாகாணங்கள் தம்மை தனிநாடாகப் பிரகடனப் படுத்திக் கொண்டன. அதேவேளை கிறிமியாவை கைப்பற்றிய இரசியப்படைகள் அங்கு கருத்துக் கணிப்பு நாடகம் ஒன்றை அரங்கேற்றி அதை இரசியாவின் ஒரு பகுதியாக இணைத்துக் கொண்டனர். உக்ரேனை முழுமையாக அபகரிக்காமல் பகுதி பகுதி பகுதியா அபகரிக்கும் திட்டத்தின் முதற்பகுதியை புட்டீன் 2014 சிறப்பாக நிறைவேற்றியமைக்கு காரணம் உக்ரேனியர்கள் இரசிய ஆக்கிரமிப்பிற்கு தயார் நிலையில் இல்லாமல் இருந்தமையே காரணம். 2008-ம் ஆண்டு ஜோர்ஜீயா மீது இரசியா ஆக்கிரமிப்பு போர் தொடுத்த போது உக்ரேனியர்கள் உணர்ந்திருக்க வேண்டும். இரசிய எல்லையில் உள்ள போல்ரிக் நாடுகளான எஸ்துவேனியா, லித்துவேனியா, எஸ்த்தோனியா ஆகிய நாடுகள் நேட்டோ படைத்துறைக் கூட்டமைப்பில் இணைந்து கொண்டன. ஆனால் அந்த நாடுகளால் இரசியாவிற்கு எந்த விதமான அச்சுறுத்தலும் ஏற்பட்டதில்லை. 2014 உக்ரேனின் நிலங்களை இரசியா அபகரித்த பின்னர் இரசியாவின் பல அயல் நாடுகள் தமது நாடுகளில் நேட்டோ படைகள் நிலை கொள்ள வேண்டும் என வலியுறுத்தின. போலாந்து அமெரிக்கப்படையினர் தமது நாட்டில் நிலை கொள்வதற்கான செலவை ஆண்டு தோறும் அமெரிக்காவிற்கு வழங்குவோம் எனச் சொல்லி அமெஇர்க்கப் படையினரை தம் நாட்டில் நிலை கொள்ள வைத்தனர். கரும்பு தின்னக் கைக்கூலி கிடைத்த நிலை அமெரிக்க ஆதிக்கவாதத்திற்கு!
2022 பெப்ரவரி 24-ம் திகதி உக்ரேனுக்கு படை அனுப்ப முன்னர் உரையாற்றிய புட்டீன் உக்ரேன் ஒரு நாடாக இருப்பதற்கு தகுதியற்றது. அதன் எல்லை போலியானது என்றார். ஆனால் உக்ரேனின் டொம்பாஸ் பிரதேச மாகாணங்களான Donetsk மற்றும் Luhansk ஐ தனி நாடுகளாக அங்கீகரித்தார். நியாயமற்ற அந்தக் கூற்று உக்ரேனியர்களைச் சினமடையச் செய்தமையால் உக்ரேனியர்கள் இரசிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக உறுதியாக நின்று போராடுகின்றார்கள். உக்ரேனும் இரசியாவும் இலங்கையின் இனக்கொலைக்கு உதவிய நாடுகள். உக்ரேன் தனது விமான ங்களை விமானிகளுடன் இலங்கைக்கு குத்தகை அடிப்படையில் வழங்கியது. அவர்கள் இலங்கையில் குண்டு போட்டார்கள் என்பதால் தமிழர்கள் உக்ரேனியர்கள் மீது வஞ்சத்தை வைத்திருக்கலாம் அதற்காக இரசியப் படையினர் உக்ரேனில் செய்யும் அட்டூழியங்களை நியாயப்படுத்தக் கூடாது.
இரண்டாம்
உலகப் போரின் பின்னர் 1949-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நேட்டோ என்னும் படைத்துறைக் கூட்டமைப்பின்
ஆரம்ப நோக்கங்களில் முக்கியமானவற்றில் மூன்று: 1. ஐரோப்பாவில் ஜேர்மனியை அடக்கி வைப்பது.
2. இரசியாவின் ஆதிக்கம் வளராமல் தடுப்பது. 3. அமெரிக்காவை ஐரோப்பாவிற்குள் வரவேற்பது.
பெல்ஜியம், கனடா, டென்மார்க், பிரான்ஸ், ஐஸ்லாந்து, இத்தாலி, லக்சம்பேர்க், நெதர்லாந்து,
நோர்வே, போர்த்துக்கல், ஐக்கிய இராச்சியம் ஆகியவை ஆரம்பத்தில் இதில்
இணைந்து கொண்ட நாடுகளாகும். பின்னர், கிரேக்கம், துருக்கி, ஜேர்மனி, ஸ்பெயின் ஆகிய
நாடுகள் இணைந்து கொண்டன. 1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர்
செக் குடியரசு, ஹங்கேரி, போலாந்து, பல்கேரியா, எஸ்தோனியா, லத்வியா, லித்துவேனியா, ருமேனியா,
ஸ்லோவேக்கியா, ஸ்லோவேனியா, அல்பேனியா, குரோசியா ஆகிய முன்னாள் "பொதுவுடமை"
நாடுகள் இணைந்து கொண்டன.
உலக அயோக்கிய கும்பல்கள்
இரசியாவின்
ஆதிக்கத்தில் இரண்டு நாடுகளின் அமைப்புக்கள் இருந்தன. ஒன்று சோவியத் ஒன்றியம். மற்றது
வார்சோ ஒப்பந்த நாடுகள் சோவியத் ஒன்றியத்தில் இருந்து உருப்படாமல் இருந்த நாடுகள் நேட்டோ
என்ற அயோக்கியக் கும்பலில் 1991இல் ஒன்றியம் உடைந்த பின்னர் இணைந்து கொண்டன. அவை ஆக்கிரமித்து
இணைக்கப்படவில்லை என்பது உண்மை என்றாலும் அவை இரசியாவிற்கு அஞ்சியே நேட்டோவை நாடின.
தானும் உருப்படாமல் தன்னை சார்ந்தவர்களையும் உருப்படாமல் அரைநூற்றாண்டு இருந்த இரசியா
தற்போது ஒரு உதவாக்கரைத் தலைமையின் கீழ் இயங்குகின்றது. இருக்கும் எரிபொருள் வளத்தை
வைத்துக் கொண்டு தன் பொருளாதாரத்தை கட்டி எழுப்பி தன்னை ஒரு ஈடு இணையற்ற நாடாக முன்னேற்றாமல்
உக்ரேன் என்ற ஆப்பை இழுத்து விட்டுள்ளது இரசியாவின் உதவாக்கரை தலைவனான விளடிமீர் புட்டீன்.
உலகப் பொருளாதாரத்திற்கும் குறிப்பாக வளர் முக நாடுகளுக்கும் பேரிடியாக அமைந்துள்ளது.
நேட்டோ என்னும் உதவாக்கரை நாடுகள் வித்தித்த பொருளாதாரத்தடை. நேட்டோவில் இணைந்த நாட்டு
மக்கள் நேட்டோவில் இருந்து விலக வேண்டும் என தமது எதிர்ப்பைக் காட்டாமல் இருப்பதற்கு
காரணம் சோவியத் என்ற வல்லாதிக்க அரசு பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்ற போர்வையில்
அதன் உறுப்பு நாடுகளை மீது இழைத்த கொடுமைகளே! வார்சோ கும்பலுக்கும் நேட்டோ கும்பலுக்கும்
இடையிலான போட்டி நாற்பது ஆண்டுகளுக்கு மேல் உலகைச் சீரழித்தது. சிறந்த உதாரணம் மூன்று
ரில்லியன் டொலர் பெறுமதியான கனிம வளத்தைக் கொண்ட ஆப்கானிஸ்த்தான்.
இரசியாவையும்
ஒரு துருவம் ஆக்க புட்டீனால் முடியாது.
ஒரு துருவ
ஆதிக்கம் கூடவே கூடாது என்பதை ஈராக், சிரியா, லிபியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட பேரழிவு
எமக்கு நன்கு போதித்தது. சிரியாவில் யாரும் எதிர்பாராதவிதமாக தலையிட்டு அமெரிக்காவின்
ஒரு துருவ ஆதிக்கத்தை ஆட்டிபார்த்த புட்டீன் இரசியாவை உலக ஆதிக்கத்தில் ஒரு துருவமாக்காமல்
கத்தி வைத்துக் கொண்டு மிரட்டும் தெருச் சண்டியன் போல் அணுக்குண்டைப் பாவிப்பேன் என்ற
மிரட்டலுடன் போதிய உளவுத் தகவல் இன்றி, போதிய படைக்கலன்கள் இன்றி, போதிய தயாரிப்பு
இன்று உக்ரேனுக்குள் போதிய பயிற்ச்சியின்றிய படைப்பிரிவுகளை அனுப்பினார். அமெரிக்காவின்
ஐம்பது மாநிலங்களில் ஒன்றான ரெக்சஸ் மாநிலத்தின் பொருளாதாரத்திலும் பார்க்க சிறிய பொருளாதாரத்தைக்
கொண்ட இரசியாவிற்கு தேவையற்ற ஒன்று இருக்குமானால் அது போர்தான். உக்ரேன் மீது போரைத்
தொடங்கிய புட்டீனின் படைகள் அங்கு உள்ள மக்கள் குடியிருப்புக்களை தரைமட்டமாக்கி அப்பாவிகள்
தஞ்சமடைந்திருந்த அரங்குகளிலும் தப்பி ஓட தொடருந்து நிலையத்தில் காத்திருந்தவர்கள்
மீது குண்டுகளை வீசியும் தங்களை உலக அரங்கில் கேவலமான குற்றவாளிகளாக்கிக் கொண்டிருக்கின்றனர்.
இரசியாவும் வலிமை மிக்க நாடாக மாறி அமெரிக்காவின் ஒரு துருவ ஆதிக்கத்திற்கு சவால் விடும்
வகையில் உருவாக வேண்டிய நிலையில் தனது காட்டு மிராண்டித்தனமான உக்ரேன் மீதான போரால்
இரசியர்கள் மீது உலக மக்களின் வெறுப்பை மேற்கு ஊடகங்கள் வெற்றிகரமாக வளர்த்துக் கொண்டிருக்கின்றன.
உக்ரேனுக்கு இரசியப்படையினரை அனுப்பி சாதித்தவை:
1.இரசியாவில்
பணவீக்கத்தை 20% ஆக உயர்த்து,
2. இரசியப்
பொருளாதாரம் 2022இல் பத்து விழுக்காடு தேயச்செய்யும் நிலையை உருவாக்கிமை,
3. இரசியப்
பங்குச் சந்தையைச் செயலிழக்கச் செய்தமை,
4. இலண்டன்
பங்குச் சந்தையில் இரசியப்பங்குகளின் பெறுமதியை 90% வீழ்ச்சியடையச் செய்தமை.
5. இரசியாவின் தாங்கிகளை துருக்கிய ஆளிலிபோர் விமானத்தில் இருந்து வீசும் ஏவுகணைகளால் தகர்க்க முடியும் என அம்பலப்படுத்தியமை
6. இரசியப் படைத்துறை திட்டமிடல், ஒருங்கிணைப்பு போன்றவற்றில் வலிமையற்று இருக்கின்றது என்பதை அம்பலப்படுத்தியமை.
7. அமெரிக்கா இருபது ஆண்டுகளில் ஆப்கானிஸ்த்தானில் இழந்த படையினரிலும் பார்க்க அதிக இரசியப்படையினர் உக்ரேனில் பத்து வாரங்களுக்குள் கொல்லப்பட்டனர் என அமெரிக்க ஊடகஙகள் கேலி செய்ய வைத்தமை.
8. நடுநிலையாக இருந்த சுவீடனையும் பின்லாந்தையும் நேட்டோவிச் சேர்வது பற்றி சிந்திப்பதை தீவிரமாக்கியமை
9. இன்னும் ஐந்து ஆண்டுகளில் இரசியாவின் எரிபொருளில் ஐரோப்பிய நாடுகள் தங்கியிருப்பதை இல்லாமல் ஆக்கவிருப்பமை.
10. ஒதுங்கியிருந்த ஜெர்மனியை படைவலிமையை அதிகரிக்க செய்தமை
மொத்தத்தில்
இரசியாவை உலக அரங்கில் ஒரு பெருமை மிக்க நாடாக உருவாக்குவதற்கு புட்டீன் சரிப்பட்டு
வரமாட்டார். இரசியர்களுக்கு வேறு தலைமை தேவை.
புட்டீனும்
அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் இரசியாவில் கொள்ளையடித்தையெல்லாம் இப்போது பொருளாதாரத்தடை
என்னும் பெயரில் மேற்கு நாடுகள் கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றன.
இந்த
உலக ஒழுங்கு மேற்கு நாடுகளுக்கு சாதகமாக இருக்கின்றபோது அதை தனக்கு சாதகமாக மாற்ற சீனா
முயல்கின்றது. புட்டீன் சாதித்தது. எல்லாவற்றையும் குழப்பி விட்டதுதான். அத்துடன் நேட்டோக்
கும்பலை புட்டீன் மேலும் ஒன்று படுத்திவிட்டார். உலகத்தை நல்வழிப்படுத்தும் திறமையோ
தூய்மையோ மேற்கு நாடுகள் எனச் சொல்லப்படும் கொள்ளைக் கூட்டத்திடம் இருந்து உலகைக் காப்பற்றும்
திறனோ புட்டீனிடம் இல்லை.
உக்ரேன்
மீது போர் தொடுத்ததன் மூலம் ஒன்று பட்ட நேட்டொ என்ற ஓர் அணி, இரசியாவும் அதன் ஒட்டு
நாடுகள் என இன்னும் ஓர் அணி, இரண்டிலும் சேராமல் நேட்டோ நாடுகளுடன் மோதலைத் தவிர்க்கும்
சீனா, இந்தியா போன்றநாடுகளைக் கொண்ட மேலும் ஓர் அணி என உலகத்தை மூன்றாக பிரித்து விட்டார்
புட்டீன்.
இரசியாவின்
எரிபொருள் வளத்தையும் கனிம வளத்தையும் இரண்டு கண்டஙகள் பரந்த அதன் பெருநிலப்பரப்பையும்
வைத்து உலகை நல்வழிப்படுத்தும் நாடாக இரசியாவைக் கட்டியமைக்க ஒரு நல்ல தலைமை இரசியாவிற்கு
அவசியம் தேவைப்படுகின்றது.
உலகிலேயே முன்னணி விமானங்களையும் நன்கு பயிற்ச்சி பெற்ர விமானிகளையும் கொண்டதாகக் கருதப்படும் இரசியாவின் உயர் தொழில்நுட்ப 4++ தலைமுறைப் போர் விமானமான SU-35 உக்ரேனில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது என உக்ரேன் அறிவித்துள்ளது. அதன் விமானி அதிலிருந்து வெளித்தள்ளப்பட்டு வான்குடை (parachute) மூலம் தரையிறங்கிய போது அவரைக் கைது செய்ததாவும் உக்ரேன் அறிவித்துள்ளது. ஐம்பது மில்லியன் டொலர் பெறுமதியான SU-35 Flanker-E சண்டை விமானம் உக்ரேனின் கிழக்குப் பகுதியில் Kharkivஇல் இருந்து 120கிமீ தொலைவில் உள்ள izium நகரில் விழுந்துள்ளது.இரசியாவின் உயர் தொழில்நுட்ப 4++ தலைமுறைப் போர் விமானமான SU-35 உக்ரேனில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது என உக்ரேன் அறிவித்துள்ளது. அதன் விமானி அதிலிருந்து வெளித்தள்ளப்பட்டு வான்குடை (parachute) மூலம் தரையிறங்கிய போது அவரைக் கைது செய்ததாவும் உக்ரேன் அறிவித்துள்ளது. ஐம்பது மில்லியன் டொலர் பெறுமதியான SU-35 Flanker-E சண்டை விமானம் உக்ரேனின் கிழக்குப் பகுதியில் Kharkivஇல் இருந்து 120கிமீ தொலைவில் உள்ள izium நகரில் விழுந்துள்ளது. இரசியாவின் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமான Su-57 இன்னும் உக்ரேனில் களமிறங்கவில்லை என்றும் அது களமிறங்க இன்னும் தயாராகவில்லை எனவும் கருதப்படுகின்றது.
தாழ்த்தப்பட்ட உயர் தொழில்நுட்பம்
இரசியாவின் SU-35 போர்விமானம் எதிரியின் ரடார்களுக்கு புலப்படமாட்டாது என இரசியர்கள் பறைசாற்றியிருந்தனர். அதனால் அதை உக்ரேனுக்குள் பறக்க விட்டு அங்குள்ள ரடார்கள் உட்பட பல வான் பாதுகாப்பு முறைமைகளை அழிப்பது என்ற நோக்கத்துடன் உக்ரேனுக்குள் சென்ற போதே அது சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. உக்ரேனுக்குள் சென்ற இரசியப்படையினர் பல தாங்கிகளையும், உலங்கு வானூர்திகளையும் ஆளணியையும் இழந்து பல படைத்துறை நிபுணர்களின் கடுமையான எதிர்மறை விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கின்ற வேளையில் இரசியா தனது மிக உயர் தொழில்நுட்ப விமானத்தை இழந்திருப்பது அவர்களுக்கும் மேலும் அவமானகரமாக அமையும். இரசியாவின் வலிமை மிக்க Mi-28 உலங்கு வானூர்தி ஒன்று பிரித்தானியாவின் தோளில்காவும் ஏவுகணைச் செலுத்தியில் இருந்து உக்ரேனியர்கள் ஏவிய ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்ட ஒரு சில நாட்களில் SU-35 போர்விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.
சீனா தனக்கு பாடம் என்கின்றது
இரசியாவின் Su-35 சுட்டு வீழ்த்தப்பட்சதை செய்தியாக வெளியிட்ட சீனாவின் South China Morning Post ஊடகம் அது சீனாவிற்கு ஒரு பாடம் என்கின்றது. Su-35 விமானம் ஆபத்தான வகையில் தாழப் பறந்தமையே சுடப்பட்டமைக்கான காரணமாக அது தெரிவிக்கின்றது. SEAD என்னும் Suppression of Enemy Air Defence நடவடிக்கையில் ஈடுபட்ட போதே Su-35 சுட்டு விழ்த்தப்பட்டதாக பல்கேரிய ஊடகம் சொல்கின்றது. SEAD நடவடிக்கையின் போது விமானங்கள் எதிரியின் வான் பாதுகாப்பு முறைமை, தொடர்பாடல் முறைமை, கண்காணிப்பு முறைமை போன்றவை அழிக்கப்படும்.
உன் கைப்பிள்ளை உன்னையே சரித்தது
The Drive என்ற இணையத்தளம் இரசியா தனது புதிய 9K37BUK வான் பாதுகாப்பு முறைமையை உக்ரேனில் பாவிப்பதாக செய்தி வெளியிட்டது. உக்ரேனின் தென்பகுதியில் உள்ள Kherson நகரைக் கைப்பற்றுவதற்கு இரசியாவிற்கு வான் ஆதிக்கம் தேவைப்பட்ட போது 9K37BUK உக்ரேன் போர் முனையில் பயன்படுத்தப்பட்டது என்றது The Drive. Kyiv Independent என்னும் உக்ரேனிய ஊடகம் 2022 ஏப்ரல் 3-ம் திகதி உக்ரேனில் செயற்பட்டுக் கொண்டிருந்த இரசியாவின் 9K37BUK என்னும் வான் பாதுகாப்பு முறைமை ஒன்றை கைப்பற்றியதாக செய்தி வெளியிட்டது. உக்ரேனியர்கள் தமது சிறப்புப் படையணி ஒன்றை 9K37BUK ஐக் கைப்பற்ற அனுப்பினார்கள் என்றும் அது வெற்றிகரமாக தங்கள் பணியை முடித்தனர் என்றும் உக்ரேனியர்கள் தெரிவிக்கின்றனர். அதைக் கைப்பற்றிய பின்னர் அதி அழிக்க வந்த அழிக்க வந்த இரசியாவின் Su-35 ஐ உக்ரேனியர்கள் முந்திக் கொண்டு அழித்து விட்டார்கள் எனச் சொல்லப்படுகின்றது.
ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களின் முக்கிய அம்சங்கள்:
1. எல்லா வகையிலும் எதிரிக்கு புலப்படாமை
2. எதிரியால் இடைமறிக்கப்பட முடியாமை
3. உயர் செயற்பாடுடைய விமானக் கட்டமைப்பு (high-performance airframes)
4. மேம்படுத்தப்பட்ட இலத்திரனியல் பறப்பு அம்சங்கள் (advanced avionics features)
5. சிறந்த வலையமைப்புத் தொடர்பாடல் கொண்ட ஒன்றிணைக்கப்பட்ட கணனித் தொகுதி (highly integrated computer systems capable of networking with other elements within the battlespace for situation awareness).
இரசியாவின் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானப் பிரச்சனை.
ஒற்றை விமானி மூலம் இயக்கப்படும் Su-35 மணிக்கு 1500மைல்கள்(2400கிமீ) வேகத்தில் 2200மைல்கள் (3600கிமீ) தூரம் வரை தொடர்ச்சியாகப் பறக்கக் கூடியது. 2014-ம் ஆண்டில் இருந்து சேவையில் இருக்கும் Su-35 வானில் இருந்து வானிற்கும் வானில் இருந்து தரைக்கும் ஏவக் கூடிய ஏவுகணைகளைத் தாங்கிச் செல்லும். ஐந்தாம் தலைமுறைப் போர் வானூர்திகளின் முக்கிய திறன் அவற்றை எதிரிகளின் ரடார்களால் கண்டறிய முடியாமையே. அதனால் அவற்றை Stealth (புலப்படா) என அழைப்பர். இரசியாவான் இன்னும் முழுமையான புலப்படாப் போர்வானுர்திகளை இரசியாவால் உருவாக்க முடியவில்லை. இரசியா தனியாக ஒரு ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமான Sukhoi T 50ஐ உருவாக்குவதாகவும் இந்தியாவுடன் இணைந்து வேறு ஒரு வகை ஐந்தாம் தலைமுறைப் போர்விமானத்தை உருவாக்குவதாககும் இரசியா முடிவு செய்தது. இருந்தும் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானத்திற்கான இயந்திரத்தை உருவாக்குவதில் பின்னர் தாமதம் ஏற்பட்டது. மேற்கு நாடுகளில் இருந்து இயந்திரம் வாங்குவது பற்றியும் கலந்துரையாடப்பட்டது. ஆனால் எந்த ஒரு மேற்கு நாடும் தமது ஐந்தாம் தலைமுறைப் போர் விமான இயந்திரம் இரசியாவின் கைகளுக்குப் போவதை விரும்பவில்லை. இதனால் இரசிய இந்தியக் கூட்டு ஐந்தாம் தலைமுறைப் போர்வானூர்தி உருவாக்கும் திட்டத்தில் இருந்து இந்தியா வெளியேறியது. Su-35 முதற் பறப்பைச் செய்த போது அதை 4++தலைமுறைப் போர் விமானம் என்றே புட்டீன் அறிவித்தார். பின்பு இரசியா முழுமையான ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமான Su-57ஐ உருவாக்கியது. அது இன்னும் போதிய எண்ணிக்கையில் உருவாக்கப்படவைல்லை. முன்மாதிரி விமானங்கள் தான் உருவாக்கப்பட்டன.
உக்ரேனியர்கள் பிரித்தானியாவின் தோளில் வைத்துச் செலுத்தப்படும் Starstreak missiles ஐப் பாவித்து இரசியாவின் Mi-28 உலங்கு வானூர்தி ஒன்றையும் 2022 ஏப்ரல் மாதத்தில் சுட்டு வீழ்த்தியமையும் இரசியாவிற்கு அவமானமாக அமைந்தது. இரசியாவின் போர் விமானங்கள் எப்போதும் excellent manoeuvrability and thrust vectoring engines கொண்டவை என்பதை உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது. அதனால் வானில் வைத்து எதிரி விமானங்கள் மோதிக் கொள்ளும் நாய்ச் சண்டையில் (Dog fight) எப்போதும் இரசிய விமானிகளும் விமானங்களும் சிறப்பாக செயற்படும். உக்ரேனில் இரசியாவின் படைக்கலன்களுக்கு ஏற்படும் பின்னடைவு இரசியாவின் படைக்கல விற்பனையை பெருமளவில் பாதிக்கும் அச்சம் இப்போது ஏற்பட்டுள்ளது.
உக்ரேனுக்கு பிரித்தானியா 2022 மார்ச் மாதம் இனாமாக வழங்கிய உக்ரேனியப் படையினர் இரசியாவின் MI-24 உலங்கு வானூர்தியை சுட்டு விழுத்தியதில் இருந்து Starstreak ஏவுகணை படைத்துறை நிபுணர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. உக்ரேனியர்களுக்கு அவர்களின் அயல் நாடு ஒன்றில் வைத்து பிரித்தானியப் படைத்துறை நிபுணர்கள் Starstreak ஏவுகணைகளை இயக்குவதற்கு பயிற்ச்சி வழங்கியிருந்தனர். Starstreak ஏவுகணைகளைப் பெட்டியில் எடுத்துச் சென்று ஒரு சில நொடிகளில் பொருத்த முடியும். உக்ரேனியர்களால் சுடப்பட்ட இரசியாவின் உலங்கு வானூர்தி Starstreak ஏவுகணையால் இரண்டு துண்டங்களாக தரையில் விழுந்தது. இது முதன் முதலாக உக்ரேனியர்கள் ஏவிய Starstreak ஏவுகணையால் வீழ்த்தப்பட்டுள்ளது.
MANPAD – MAN PORTABLE AIR DEFENCE SYSTEM
குறுகிய தூர ஏவுகணை, இலகுவாக எடுத்துச் செல்லக்கூடிய MANPAD ஏவுகணைகள் வகையைச் சார்ந்தது. இதைத் தோளிலும் வானூர்திகளை இலக்கு வைத்து செலுத்தலாம். ஒரு முக்காலியிலும் வைத்து செலுத்தலாம். தாங்கிகள் கவச வண்டிகள் சிற்றூர்திகள் போன்றவற்றில் வைத்தும் இவற்றை செலுத்தலாம் என்பது மட்டுமல்ல உலங்கு வானூர்தி மற்றும் கடற்கலன்களிலும் இருந்து இவற்றை ஏவு எதிரியின் உலங்கு வானூர்தி மற்றும் தாழப்பறக்கும் விமானங்களைச் சுட்டு வீழ்த்தலாம். இரசியர்களிடம் வழிகாட்டல் ஏவுகணைகள் போன்ற Smart bombsஇற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள படியால் அவர்களின் உலங்கு வானூர்திகளும் விமான ங்களும் தாழப்பறந்தே குண்டுகளை வீசுகின்றன.
நகர்சார் போரில் சிறப்பாக செயற்படும்
பிரித்தானியாவின் Starstreak ஏவுகணைகள் நகர்சார் போரில் சிறப்பாகச் செயற்படக் கூடியவை. அவற்றை மாடிக்கட்டிடங்கள், மொட்டை மாடிகள் போன்றவற்றில் மறைந்திருந்து செலுத்தி எதிரியின் வானுர்திகளை அழிக்கலாம். Starstreak ஏவுகணைகள் லேசர் கதிகளால் வழிகாட்டப்படுபவை என்பதால் அவை இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கக் கூடியவை. இந்த ஏவுகணை வீசமுன்னர் வீசப்படும் லேசர் ஒளிக்கதிர்கள் வலிமைகுறைந்தவையாக இருப்பதால் அவற்றை எதியின் வானூர்திகளால் உணர முடியாமல் இருக்கும். இவற்றால் தாக்கப்படும் போது உடன் சேதம் (Collateral Damage) குறைந்த அளவிலேயே இருக்கும். சிறிய ஆளிலிவிமானங்களையும் இவற்றால் அழிக்கலாம்.
MACH-3 ஒலியிலும் பார்க்க மூன்று மடங்கு வேகம்
ஒலியிலும் பார்க்க மூன்று மடங்கு வேகத்தில் பாயக் கூடியது. அதாவது மணித்தியாலத்திற்கு 3700கி.மீ வேகம். தற்போது உலகெங்கும் உள்ள குறுந்தூர ஏவுகணைகளுக்குள் இது மிக வேகமான ஏவுகணை. எழுகிலோ மீட்டர் தூரம் வரை பாய்ந்து இலக்குகளை அழிக்கவல்லது. இரசிய விமானிகள் தங்களது விமானத்தின் பறப்பு பாதையை சடுதியாக திசை திருப்புவதில் வல்லவர்கள். அவர்களின் விமான இயந்திரங்களும் அதற்கு ஏற்ப வடிவைக்கப்பட்டுள்ளவை. அதை vector thrust engine என்பார்கள். ஒலியிலும் பார்க்க மூன்று மடங்கு வேகத்தில் பறக்கும் Starstreak ஏவுகணைகள் அவர்கள் விமானத்தை திசை திருப்ப முன் அதை அழித்துவிடும். அமெரிக்காவின் Stinger Missiles ஒலியிலும் பார்க்க 2.54 மடங்கு வேகம். மணித்தியாலத்திற்கு 3136கிமீ வேகம்
Starstreak இரண்டு நிலைகளைக் கொண்ட ஏவூர்தி ஓடிகளைக் கொண்டது (Two stage solid propellant rocket motor) ஒன்று பிரிக்கும் முறைமை மற்றது மூன்று உயர் அடர்த்தியான குண்டுகளைக் கொண்டது. அவை மூன்று துளைகளை இட்ட பின்னர் குண்டு வெடிக்கும்.
பழைய விமானங்களைக் கொண்டது உக்ரேன் விமானப்படை. இரசிய வானூர்திகள் உக்ரேனில் வானாதிக்கம் செலுத்தாமல் இருக்க வலிமை மிக்க வான் பாதுகாப்பு உக்ரெனுக்கு அவசியம். ஆனால் நேட்டோ நாடுகள் தொலை தூர விமான எதிர்ப்பு ஏவுகணைகளை உக்ரேனுக்கு வழங்காமல் இருக்கின்றன. அதிகமான Stinger Missilesஉம் Starstreak missilesஉம் உக்ரேனியர்களுக்கு கிடைக்கும் போது இரசிய உழங்கு வானூர்திகள் அங்கு செயற்பட முடியாமல் போகலாம். இரசியாவின் முன்னணி விமானங்கள் உயரத்தில் இருந்தே செயற்பட வேண்டியிருக்கும்.
இரசியாவின் உயர் தொழில்நுட்ப 4++ தலைமுறைப் போர் விமானமான SU-35 உக்ரேனில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது என உக்ரேன் அறிவித்துள்ளது. அதன் விமானி அதிலிருந்து வெளித்தள்ளப்பட்டு வான்குடை (parachute) மூலம் தரையிறங்கிய போது அவரைக் கைது செய்ததாவும் உக்ரேன் அறிவித்துள்ளது. ஐம்பது மில்லியன் டொலர் பெறுமதியான SU-35 Flanker-E சண்டை விமானம் உக்ரேனின் கிழக்குப் பகுதியில் Kharkivஇல் இருந்து 120கிமீ தொலைவில் உள்ள izium நகரில் விழுந்துள்ளது.
இரசியாவின் SU-35 போர்விமானம் எதிரியின் ரடார்களுக்கு புலப்படமாட்டாது என இரசியர்கள் பறைசாற்றியிருந்தனர். அதனால் அதை உக்ரேனுக்குள் பறக்க விட்டு அங்குள்ள ரடார்கள் உட்பட பல வான் பாதுகாப்பு முறைமைகளை அழிப்பது என்ற நோக்கத்துடன் உக்ரேனுக்குள் சென்ற போதே அது சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. உக்ரேனுக்குள் சென்ற இரசியப்படையினர் பல தாங்கிகளையும், உலங்கு வானூர்திகளையும் ஆளணியையும் இழந்து பல படைத்துறை நிபுணர்களின் கடுமையான எதிர்மறை விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கின்ற வேளையில் இரசியா தனது மிக உயர் தொழில்நுட்ப விமானத்தை இழந்திருப்பது அவர்களுக்கும் மேலும் அவமானகரமாக அமையும். இரசியாவின் வலிமை மிக்க Mi-28 உலங்கு வானூர்தி ஒன்று பிரித்தானியாவின் தோளில்காவும் ஏவுகணைச் செலுத்தியில் இருந்து உக்ரேனியர்கள் ஏவிய ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்ட ஒரு சில நாட்களில் SU-35 போர்விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.
சீனா தனக்கு பாடம் என்கின்றது
இரசியாவின் Su-35 சுட்டு வீழ்த்தப்பட்சதை செய்தியாக வெளியிட்ட சீனாவின் South China Morning Post ஊடகம் அது சீனாவிற்கு ஒரு பாடம் என்கின்றது. Su-35 விமானம் ஆபத்தான வகையில் தாழப் பறந்தமையே சுடப்பட்டமைக்கான காரணமாக அது தெரிவிக்கின்றது. SEAD என்னும் Suppression of Enemy Air Defence நடவடிக்கையில் ஈடுபட்ட போதே Su-35 சுட்டு விழ்த்தப்பட்டதாக பல்கேரிய ஊடகம் சொல்கின்றது. SEAD நடவடிக்கையின் போது விமானங்கள் எதிரியின் வான் பாதுகாப்பு முறைமை, தொடர்பாடல் முறைமை, கண்காணிப்பு முறைமை போன்றவை அழிக்கப்படும்.
உன் கைப்பிள்ளை உன்னையே சரித்தது
The Drive என்ற இணையத்தளம் இரசியா தனது புதிய 9K37BUK வான் பாதுகாப்பு முறைமையை உக்ரேனில் பாவிப்பதாக செய்தி வெளியிட்டது. உக்ரேனின் தென்பகுதியில் உள்ள Kherson நகரைக் கைப்பற்றுவதற்கு இரசியாவிற்கு வான் ஆதிக்கம் தேவைப்பட்ட போது 9K37BUK உக்ரேன் போர் முனையில் பயன்படுத்தப்பட்டது என்றது The Drive. Kyiv Independent என்னும் உக்ரேனிய ஊடகம் 2022 ஏப்ரல் 3-ம் திகதி உக்ரேனில் செயற்பட்டுக் கொண்டிருந்த இரசியாவின் 9K37BUK என்னும் வான் பாதுகாப்பு முறைமை ஒன்றை கைப்பற்றியதாக செய்தி வெளியிட்டது. உக்ரேனியர்கள் தமது சிறப்புப் படையணி ஒன்றை 9K37BUK ஐக் கைப்பற்ற அனுப்பினார்கள் என்றும் அது வெற்றிகரமாக தங்கள் பணியை முடித்தனர் என்றும் உக்ரேனியர்கள் தெரிவிக்கின்றனர். அதைக் கைப்பற்றிய பின்னர் அதி அழிக்க வந்த அழிக்க வந்த இரசியாவின் Su-35 ஐ உக்ரேனியர்கள் முந்திக் கொண்டு அழித்து விட்டார்கள் எனச் சொல்லப்படுகின்றது.
ஐந்தாம் தலைமுறைப் போர்விமானங்களின் முக்கிய அம்சங்கள்:
1. எல்லா வகையிலும் எதிரிக்கு புலப்படாமை
2. எதிரியால் இடைமறிக்கப்பட முடியாமை
3. உயர் செயற்பாடுடைய விமானக் கட்டமைப்பு (high-performance airframes)
4. மேம்படுத்தப்பட்ட இலத்திரனியல் பறப்பு அம்சங்கள் (advanced avionics features)
5. சிறந்த வலையமைப்புத் தொடர்பாடல் கொண்ட ஒன்றிணைக்கப்பட்ட கணனித் தொகுதி (highly integrated computer systems capable of networking with other elements within the battlespace for situation awareness).
இரசியாவின் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானப் பிரச்சனை.
ஒற்றை விமானி மூலம் இயக்கப்படும் Su-35 மணிக்கு 1500மைல்கள்(2400கிமீ) வேகத்தில் 2200மைல்கள் (3600கிமீ) தூரம் வரை தொடர்ச்சியாகப் பறக்கக் கூடியது. 2014-ம் ஆண்டில் இருந்து சேவையில் இருக்கும் Su-35 வானில் இருந்து வானிற்கும் வானில் இருந்து தரைக்கும் ஏவக் கூடிய ஏவுகணைகளைத் தாங்கிச் செல்லும். ஐந்தாம் தலைமுறைப் போர் வானூர்திகளின் முக்கிய திறன் அவற்றை எதிரிகளின் ரடார்களால் கண்டறிய முடியாமையே. அதனால் அவற்றை Stealth (புலப்படா) என அழைப்பர். இரசியாவான் இன்னும் முழுமையான புலப்படாப் போர்வானுர்திகளை இரசியாவால் உருவாக்க முடியவில்லை. இரசியா தனியாக ஒரு ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமான Sukhoi T 50ஐ உருவாக்குவதாகவும் இந்தியாவுடன் இணைந்து வேறு ஒரு வகை ஐந்தாம் தலைமுறைப் போர்விமானத்தை உருவாக்குவதாககும் இரசியா முடிவு செய்தது. இருந்தும் ஐந்தாம் தலைமுறைப் போர்விமானத்திற்கான இயந்திரத்தை உருவாக்குவதில் பின்னர் தாமதம் ஏற்பட்டது. மேற்கு நாடுகளில் இருந்து இயந்திரம் வாங்குவது பற்றியும் கலந்துரையாடப்பட்டது. ஆனால் எந்த ஒரு மேற்கு நாடும் தமது ஐந்தாம் தலைமுறைப் போர் விமான இயந்திரம் இரசியாவின் கைகளுக்குப் போவதை விரும்பவில்லை. இதனால் இரசிய இந்தியக் கூட்டு ஐந்தாம் தலைமுறைப் போர்வானூர்தி உருவாக்கும் திட்டத்தில் இருந்து இந்தியா வெளியேறியது. Su-35 முதற் பறப்பைச் செய்த போது அதை 4++தலைமுறைப் போர் விமானம் என்றே புட்டீன் அறிவித்தார். பின்பு இரசியா முழுமையான ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமான Su-57ஐ உருவாக்கியது. அது இன்னும் போதிய எண்ணிக்கையில் உருவாக்கப்படவைல்லை. முன்மாதிரி விமானங்கள் தான் உருவாக்கப்பட்டன.
உக்ரேனியர்கள் பிரித்தானியாவின் தோளில் வைத்துச் செலுத்தப்படும் Starstreak missiles ஐப் பாவித்து இரசியாவின் Mi-28 உலங்கு வானூர்தி ஒன்றையும் 2022 ஏப்ரல் மாதத்தில் சுட்டு வீழ்த்தியமையும் இரசியாவிற்கு அவமானமாக அமைந்தது. இரசியாவின் போர் விமானங்கள் எப்போதும் excellent manoeuvrability and thrust vectoring engines கொண்டவை என்பதை உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது. அதனால் வானில் வைத்து எதிரி விமானங்கள் மோதிக் கொள்ளும் நாய்ச் சண்டையில் (Dog fight) எப்போதும் இரசிய விமானிகளும் விமானங்களும் சிறப்பாக செயற்படும். உக்ரேனில் இரசியாவின் படைக்கலன்களுக்கு ஏற்படும் பின்னடைவு இரசியாவின் படைக்கல விற்பனையை பெருமளவில் பாதிக்கும் அச்சம் இப்போது ஏற்பட்டுள்ளது.
உக்ரேனில் நடக்கும் போரில் பல தாங்கிகள் அழிக்கப்பட்டும் இயங்க முடியாத நிலையில் கைவிடப்பட்டும் இருப்பது நாளாந்தம் செய்திகளாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. உக்ரேனிற்கு தனது படையில் 120 Battalion Tactical Groupsஐ இரசியா நகர்த்தியுள்ளது. ஒரு பட்டாலியன் குழுவில் 10 தாங்கிகள் மற்றும் 30 கவச வண்டிகள் இருக்கும். மொத்தம்1200 தாங்கிகளையும் 3600 கவச வண்டிகளையும் இரசியா உக்ரேனுக்கு அனுப்பியுள்ளது. உக்ரேனிடம் 2,500 தாங்கிகள் உள்ளன. ஐரோப்பாவில் 5,000இற்கும் மேற்பட்ட போர்த்தாங்கிகள் உள்ளன. உலகெங்கும் மொத்தம் 54,000 உள்ளன. பெரிய துப்பாக்கி, துருப்புக்களுக்கு பாதுகாப்பு கடினமான நிலத்தில் பயணித்தல் போன்றவை தாங்கிகளின் முக்கிய அம்சங்களாகும். எதிரியின் காலாட் படைகளை எதிர்கொள்ள சிறந்தவையாக தாங்கிகள் கருதப்படுகின்றன. அவர்களின் காப்பரண்களை தாங்கிகளால் அழிக்க முடியும். எண்பது ஆண்டுகளாக காலாட் படையினரின் முக்கிய படைக்கலன்களாக இருந்த எழுபது தொன் எடை கொண்ட தாங்கிகள் உக்ரேன் போரின் போது செல்லுபடியற்றதாகிவிட்டனவா எனற கேள்விக்கு உள்ளாகியுள்ளன. இரசியப் படையினர் உக்ரேனினுடனான முதல் மூன்று வாரப் போரில் 270 தாங்கிகளை இழந்துள்ளனர். இவை தாங்கிகளின் நம்பகத்தன்மை குறித்து ஐயத்தை உருவாக்கியுள்ளது. அடுத்த இரண்டு வாரத்தில் மேலும் 326 தாங்கிகளை இழந்தனர். இதனால் தாங்கிகளை தோளில் வைத்து ஏவும் ஏவுகணைகளும் ஆளிலிவிமானத்தில் இருந்து வீசும் ஏவுகணைகளும் தாங்கிகளின் வலிமை மீது ஐயத்தை எழுப்பியுள்ளது.
தானூர்தி அணியும் (Motorised Unit) இயந்திரமய அணியும் (Mechanised Unit)
முதலில் போர்த்தாங்கிகளைப் பாவித்த நாடு பிரித்தானியா. 1916-ம் ஆண்டு முதலாம் உலகப் போரின் போது பிரித்தானியாவால் போர்த்தாங்கிகள் பாவிக்கப்பட்டன. தாங்கிகளை தரையில் நகரும் போர்க்கப்பல்கள் என பிரித்தானியவர் அப்போது விபரித்தனர். முதலில் அவற்றின் பாவனையைக் கைவிட்ட நாடு நெதர்லாந்து 2011இல் கைவிட்டது. பின்பு அது ஜெர்மனியிடமிருந்து குத்தகைக்கு 18 தாங்கிகளைப் பெற்றுள்ளது. சுடுதிறன், தப்புதிறன், நகரும் திறன், தகர்க்கும் திறன் ஆகியவை தாங்கிகளின் சிறப்பு அம்சங்களாகும். தானூர்தி அணி (Motorised Unit) பார ஊர்திகளால் நகர்த்தப்படுபவை. இயந்திரமய அணி (Mechanised Unit) கவச வண்டிகள் மூலம் நகரும் காலாட் படையணியாகும். கவச வண்டிகளின் மிகச் சிறந்த வடிவம் தாங்கிகளாகும். 2014-ம் ஆண்டு இரசியர்கள் தமது T-72 தாங்கிகளுடன் இலகுவாக உக்ரேனை ஆக்கிரமித்தனர். பெரும்பாலான தாங்கிகள் 120மிமீ குண்டுகளை வீச வல்லன. இரண்டாம் உலகப் போரில் விமானங்களை அழிக்கவும் தாங்கிகள் பயன்படுத்தப்பட்டன.
இரண்டாம் உலகப் போரின் Battle of Kursk
உலக வரலாற்றில் அதிக தாங்கிகள் இரண்டாம் உலகப் போரின் போது சோவியத்தை ஜெர்மனி ஆக்கிரமிக்க முயன்ற போது பயன்படுத்தப்பட்டன. 1943-ம் ஆண்டு இரசியாவின் Kursk நகரில் இரண்டு நாடுகளிடையே நடந்த போரில் ஆறாயிரம் தாங்கிகள் பயன்படுத்தப்பட்டன. இரசியர்கள் ஜெர்மன் தாங்கிகளுக்கு அண்மையில் சென்று கண்ணி வெடிகள அவற்றின் சில்லுச் சங்கிலிகளின் இடையே வீசி அவற்றைச் செயலிழக்கச் செய்தனர். ஹிட்லரின் படையினர் Tiger, Panther, Ferdinand ஆகிய தாங்கிகளையும் இரசியர்கள் T-14 தாங்கிகளையும் பாவித்தனர். ஹிட்லரின் படையினரின் தாங்கிகள் வலிமை மிக்கனவாயும் பெரிய அளவிலான குண்டுகளை வீசக் கூடியவையாகவும் இருந்தன. வலிமை குறைந்தாலும் எண்ணிக்கை அளவில் இரசியர்கள் ஜெர்மனியரிலும் பார்க்க இரண்டு மடங்கு தாங்கிகளைப் பாவித்தனர். ஜெர்மனியர்களிடம் 1400 தாங்கிகளும் இரசியர்களிடம் 3600தாங்கிகளும் இருந்தன. இரசியர்கள் தங்கள் தாங்கிகளை நிலைத்தின் கீழ் மூடி வைத்து சுடு குழாயை மட்டும் வெளியில் தெரிய வைத்திருந்து ஜெர்மனியர்கள் அண்மையில் வரும்போது சுட்டுத்தள்ளினார்கள்.
தங்கிகளின் வலிமையற்ற தன்மைகள்
கரந்தடிப் படையினருக்கு எதிராக தாங்கிகள் முன்பு சிறப்பாக செயற்பட்டன. கரந்தடிப் படையினர் வலிமை மிக்க கண்ணிவடிகளால் செயலிழக்கச் செய்யப்படக் கூடியவை. ஈழ மண்ணிற்கு அமைதிப் படை என்ற பெயரில் வந்த கொலைப்படையினர் கண்ணி வெடிகளைத் தவிர்ப்பதற்காக தெருக்களால் பயணிப்பதைத் தவிர்த்து வீடுகளை இடித்து தரைமட்டமாக்கிக் கொண்டு பயணித்தன. ஒரு கட்டத்தில் அகப்படும் பொது மக்களை தாக்கி வீழ்த்தி விட்டு அவர்கள் மேல் தாங்கிகளைச் செலுத்திக் கொன்றன. ஈழப் போராளிகள் கண்ணி வெடிகளால் எதிரிகளின் தாங்கிகளைத் தகர்த்தனர். கைப்பற்றியும் உள்ளனர். ஆர்.பி.ஜீ என்னும் வீசு குண்டுகள் மூலமும் பழைய தாங்கிகளை அழிக்க முடியும். தாங்கிகளில் இருந்து வெளிவரும் உயர் வெப்பம் அவற்றை இனம்காண இலகுவானதாக இருக்கின்றது. அதனால் வெப்பத்தைத் தேடியழிக்கும் ஏவுகணைகள் (Heating seeking missiles) அவற்றை இலகுவாக அழிக்கின்றன. அமெரிக்காவின் Javelin, பிரித்தானியாவின் NLAW ஆகிய தோளில் வைத்துச் செலுத்தப்படும் ஏவுகணைகளும் துருக்கியின் TB-2 Drones என்னும் ஆளிலிவிமானங்களில் இருந்து ஏவும் சிறிய ஏவுகணைகளும் இரசிய தாங்கிகளை வேட்டைக்காரன் பன்றைகளைச் சுடுவது போல் சுட்டு அழிக்கின்றன. அது மட்டுமல்ல அது பயணிக்கும் இடங்களில் தாங்கிகள் விட்டுச் செல்லும் தடயங்கள் அவற்றை இனம் காண உதவுகின்றன. அமெரிக்காவின் ஒரு தாங்கி பத்து மில்லியன் பெறுமதியானது. இரசியாவின் தாங்கிகளான T-14 Armata நான்கு மில்லியன் பெறுமதியானது. 2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஈராக்கின் Fallujah மீட்புப் போரில் அமெரிக்கா, பிரித்தானியா, ஈராக் ஆகிய நாடுகளின் படைகள் வெற்றி பெற்றமைக்கு அமெரிக்காவின் ஏப்ராம் தாங்கிகள் முக்கிய பங்கு வகித்தன. ஆனாலும் அமெரிக்காவின் ஏப்ராம் (M1Abrams) தாங்கிகளையும் பிரட்லி (M2 Bradley) தாங்கிகளையும் நூறு டொலர் பெறுமதியான வெடிபொருட்களால் இஸ்லாமியப் போராளிகள் தகர்த்தனர். போரியல் நிபுணராகிய Michael Peck: Tanks may be the star player, but war is a team game. அமெரிக்காவின் Apache உலங்கு வானூர்திகள் தாங்கிகளை அழிப்பதற்கு என உருவாக்கப்பட்டவை. தாங்கிகள் அதிக அளவு எரிபொருளைப் பாவிப்பன. அவற்றிற்கு எரிபொருள் மீள்நிரப்ப எரிபொருள் தாங்கிகள் அவற்றைத் தொடந்து கொண்டிருக்க வேண்டும்.
பல நாடுகள் தாங்கிகளைக் கைவிடுவதிலும் பார்க்க அவற்றை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துகின்றன. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அடுத்த தலைமுறை தாங்கிகளை உருவாக்குகின்றன. 1980களில் உருவாக்கிய தாங்கிகள் பெரிஸ்கோப்களை பாவித்தன. தற்போது தாங்கிகளில் 360பாகையும் சுற்றிப் பார்க்கக் கூடிய உணரிகள் உள்ளன. எதிர் காலத்தில் போர்த்தாங்கிகளில் இருந்து பறந்து செல்லும் சிறிய ஆளிலி வானூர்திகள் தாங்கிகளின் கண்களாக மூலை முடுக்கு மேடு பள்ளம் எல்லாம் மறைந்து இருக்கும் எதிரிகளை இனம் காணும். பெரிய காத்திரமான உருவம் கொண்ட தாங்கியுடன் செல்லும் படையினருக்கு மனவலிமை கிடைக்கின்றது என்பது உண்மை. அதே போல எதிரிக்கு அச்சத்தையும் கொடுக்கக் கூடியது. போரை விரும்பும் நாடுகள் மேலும் வலிமைப்படுத்தப் பட்ட இலத்திரனியல் போர் செய்யக் கூடிய புதிய தாங்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. அவை இன்னும் பல பத்து ஆண்டுகளில் காலட்படையினரின் கவசமாக இருக்கும்.
இரசியாவின் மிகச் சிறந்த தாங்கியான T-14 Armata உக்ரேன் போரில் பயன்படுத்தப்படவில்லை. இரசியாவிடம் போதிய அளவு T-14 கையிருப்பில் இல்லை.
உக்ரேன் இரசியாவின் சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்தது. ஆன்இரசியாவின் ஒரு பகுதியாக இருந்ததில்லை. தைவான் சீனாவின் ஒரு பகுதியாக இருந்தது. இன்றும் அதன் ஒரு பகுதி என்றே சீனா சொல்கின்றது. உக்ரேனை ஒரு தனிநாடாக 180இற்கு மேற்பட்ட நாடுகள் அங்கீகரித்ததுடன். ஐக்கிய நாடுகள் சபை உட்பட பல உலக அமைப்புக்களில் ஒரு நாடாக உறுப்புரிமை பெற்றுள்ளது. தைவான் ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்புரிமை கொண்ட நாடல்ல. வத்திக்கான உட்பட 15 நாடுகள் மட்டும் தைவானை தனி நாடாக அங்கீகரித்துள்ளன. எந்த ஒரு நேட்டோ நாடும் தைவானை தனிநாடாக அங்கீகரிக்கவில்லை. இரசியா உக்ரேனை ஆக்கிரமிக்கும் என்பது பரவலாக எதிர் பார்க்கப்பட்ட ஒன்றல்ல. ஆனால் தைவானை சீனா ஆக்கிரமிக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு பல பத்தாண்டுகளாக எதிர்பார்க்கப்படுகின்றது. உக்ரேன் போரை சீனாவும் தைவானும் உன்னிப்பாக கவனிக்கின்றன. இரசியா வேறு சீனா வேறு அது போலவே உக்ரேன் வேறு தைவான் வேறு. 1992இல் சீனாவினதும் இரசியாவினதும் பொருளாதாரம் ஒரே அளவிலானதாக இருந்தன ஆனால் 2022இல் இரசியாவின் பொருளாதாரத்திலும் பார்க்க சீனாவினது பத்து மடங்கு பெரியது.
வளம் மிக்க சீனா
உக்ரேனில் ஒரு நீண்ட காலப் போர் செய்ய இரசியாவால் முடியுமா என்பது கேள்விக்குறி. ஆனால் தைவான் மீது போர் தொடுத்தால் அது எத்தனை ஆண்டுகள் எடுத்தாலும் சீனாவால் தாக்குப் பிடிக்க முடியும். இரசியாவிடம் பல தரப்பட்ட புதிய படைக்கலன்கள் இருந்தாலும் அவை போதிய எண்ணிக்கையில் இல்லை. ஆனால் சீனாவிடம் தைவானுடன் போர் செய்யக் கூடிய அளவு படைக்கலன்கள் இருக்கின்றன. போர் என்று ஆரம்பித்தால் மேலும் படைக்கலன்களை குறுகிய கால எல்லைக்குள் உற்பத்தி செய்து குவிக்கும் வளங்கள் சீனாவிடம் உள்ளன.
இரசியாவின் நகர்விலும் பார்க்க சீன நகர்வு கடினமானது
உக்ரேனுக்கு இரசியா தரைவழியாக படைகளை நகர்த்தியது. ஆனால் சீனா தைவானிற்கு 160கிலோ மீட்டர் நீளக் கடலை தாண்ட வேண்டியுள்ளது. கடல் தாண்டி படைகளை கொண்டு போய் இறக்க முன்னரே கடலில் வைத்து ஒரு போரை தைவானால் தனித்தும் செய்ய முடியும். உக்ரேன் இரசியா மீது ஏவுகணைகளை வீசவில்லை. ஆனால் தைவான் சீனாவின் ஹொங் கொங் மற்றும் ஷங்காய் உட்பட பொருளாதார கேந்திரோபாய நிலைகளை தாக்குவதற்கு என தனது ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்துள்ளது. உக்ரேன் போரை தைவானியர்கள் மிக உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இன்று உக்ரேன் நாளை தைவான் என்ற தலைப்பில் பல கலந்துரையாடல்களை தைவானியர்கள் செய்து வருகின்றார்கள். சீனா தலையிடுமா? தைவான் தயாரா? அமெரிக்கா உதவி செய்யுமா? என்பவை பற்றிய விவாதங்களே தைவானில் பரவலாக அடிபடுகின்றது. தங்கள் தற்பாதுகாப்பிற்கு தற்சார்பு நிலை அவசியம் என்பதை தைவானியர்கள் உணர்ந்துள்ளனர். அமெரிக்காவை நம்பியிருக்காமல் தாம்மைத்தாமே பாதுகாக்க வேண்டும் என பல தைவானியர்கள் நினைக்கின்றார்கள். உக்ரேனிற்கு புட்டீன் படை அனுப்பியவுடன் தைவானில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் உக்ரேனியர்கள் தனியே இல்லை தைவானியர்கள் அவர்களுடன் நிற்கின்றார்கள் என்ற பதாகையும் காணப்பட்டது.
ஆழமறியாத இரசியா போல் ஆழமறியாத சீனாவா?
உக்ரேனை இரசியாவும் தைவானை சீனாவும் ஒரே நேரத்தில் ஆக்கிரமித்தால் அது அமெரிக்காவின் கவனத்தை சிதறச் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இது தொடர்பாக பல கட்டுரைகள் மேற்கு நாட்டு ஊடகங்களில் வெளிவந்தன. ஆனால் அப்படி நடக்கவில்லை. 2014-ம் ஆண்டு உக்ரேனை இரசியா பகுதியாக ஆக்கிரமித்த பின்னர் உக்ரேனியர்களிடையே இரசிய குரோதத்தை அமெரிக்கா வளர்த்து வைத்துள்ளது என்பது இரசியப் படையினர் உக்ரேனுக்குள் சென்ற பின்னர்தான் இரசிய அதிபர் புட்டீன அறிந்து கொண்டார். இரசியப் படைகளை உக்ரேனியர்கள் வரவேற்பார்கள் என்று புட்டீன எதிர்பார்ந்திருந்ததாக மேற்கு நாட்டு ஊடகங்கள் சொல்கின்றன. இந்த ஏமாற்றத்தால் இரசிய உளவுத்துறையின் இயக்குனரையும் அவரது உதவியாளரையும் புட்டீன் வீட்டுக் காவலில் வைத்தார் என்று கூடச் சொல்லப்படுகின்றது. தைவானியர்களின் நிலைப்பாடு தொடர்பாக சீனா எந்த அளவு அறிந்து வைத்திருக்கின்றது?
உன்னிப்பாக அவதானிக்கும் சீனா
உக்ரேன் எல்லையில் இரசியப் படைகள் 2021-22இல் குவிக்கப்பட்ட போது சீனாவின் முன்னணி ஊடகங்களான Xinhua, CGTV, People’s Daily ஆகியவை மௌனமாகவே இருந்தன. ஆனால் உக்ரேன் போர் நிலவரங்களை சீனா உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கின்றது. இரசியப் படைகள் உக்ரேனில் இருந்து தோல்வியடைந்து வெளியேறினால் அது இரசியப் பாதுகாப்பு மற்றும் கேந்திரோபாய நலன்களைப் பொறுத்தவரை பாதிக்கிணறு தாண்டியது போலாகும். இரசியா இலகுவில் உக்ரேனில் இருந்து வெளியேற மாட்டாது. அல்லது ஏதாவது ஒரு போலி வெற்றியைச் சொல்லிக் கொண்டு இரசியா அங்கிருந்து வெளியேறலாம். அது இன்னும் சில வாரங்களில் இரசியா செய்ய வேண்டும். இரண்டும் தைவான் ஆக்கிரமிப்பிற்கு முன்னர் சீனாவை ஒரு தடவைக்கு இரு தடவை சிந்திக்க வைக்கும். வலிமை மிக்க காத்திரமான தயாரிப்பை செய்த பின்னரே சீனா தைவானை ஆக்கிரமிக்கும். அதற்கு இன்னும் சில ஆண்டுகள் எடுக்கலாம்.
உக்ரேனுக்கு படையனுப்ப மறுத்த மேற்கு
அமெரிக்கா உட்பட எல்லா மேற்கு நாடுகள் உக்ரேனுக்கு படையனுப்ப மறுத்துள்ளன. தைவானை சீனா ஆக்கிரமித்தால் அதே நிலைப்பாடு இருக்குமா? தென் சீனக் கடல் உட்பட ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் சுதந்திரமான கடற்போக்கு வரத்தை வலியுறுத்தி அங்கு பிரித்தானியா, ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லந்து ஆகிய நாடுகள் தம் கடற்படையை அனுப்பியதுடன் அமெரிக்காவுடன் இணைந்து போர்ப்பயிற்ச்சியை நடத்தின. அமெரிக்காவின் நேட்டோ பங்காளிகளின் உக்ரேன் தொடர்பான நிலைப்பாட்டிலும் பார்க்க கடுமையான நிலைப்பாட்டில் தைவான் தொடர்பாக ஜப்பானும் ஒஸ்ரேலியாவும் எடுத்துள்ளன. இருபத்தியாறு துறைமுகங்களைக் கொண்ட தைவான் தீவை சீனா கைப்பற்றுவது பசுபிக் பிராந்தியத்தில் வலிமை மிக்க ஒரு கடற்படையை சீனா உருவாக்கி அதில் ஆதிக்கம் செலுத்தும் நிலையை ஏற்படுத்தும் என்பதால் ஜப்பான் தைவானை சீனா கைப்பற்ற முயன்றால் அதன் மீது தாக்குதல் செய்வதற்கு தயாராக தைவானிற்கு அண்மையாக உள்ள தீவுகளில் தனது ஏவுகணைகளை நிறுத்தியுள்ளது. தனது கடற்படையையும் வலிமைப் படுத்தியதுடன் தனது துறைமுகங்களை ஒஸ்ரேலியா பாவிப்பதற்கு அனுமதியும் வழங்கியுள்ளது. இரசியர்களுக்கு இருக்கும் போர் முனை அனுபவம் சீனர்களுக்கு இல்லை என்பதையும் சீனா நன்கறியும். இரசியாவை சுற்றி வர உள்ள அமெரிக்கப் படைத்தளங்களிலும் பார்க்க வலிமை மிக்க படைத்தளங்கள் சீனாவை சுற்றி வர அமெரிக்கா வைத்திருக்கின்றது. நீண்ட காலப் போரில் ஈடுபடும் தைவானால் உலகப் பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும். அதில் சீனாவிற்கு தான் பெருமளவு பாதிப்பு இருக்கும். உக்ரேன் மீது இரசியா படையெடுத்தவுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அமெரிக்காவின் முன்னள் படைத்துறை அதிகாரிகளையும் வெளியுறவுத்துறை அதிகாரிகளையும் தைவானுக்கு அனுப்பி அவர்களுக்கு நம்பிக்கையூட்ட முயன்றார். இரசியாவிற்கு எதிரான அமெரிக்காவின் போர் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஏற்படுத்தும் அழிவைப் போல் சீனாவிற்கு எதிரான போர் உருவக்க மாட்டாது.
வ்உக்ரேனில் இரசியாவுடன் நேரடி மோதலை அமெரிக்கா தவிர்த்துக் கொண்டிருப்பது. தைவானைக் கைப்பற்ற முயற்ச்சிக்கும் சீனாவுடன் நேரடி மோதலை செய்வதற்காகவா என்பதை சீனா சிந்திக்கும். சீனா தைவானை ஆக்கிரமிக்கும் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை உக்ரேனின் அனுபவத்தை வைத்து மீள் பரிசீலனை செய்து பல மாற்றங்களைச் செய்ய வேண்டிய நிலையை உக்ரேனியர்களின் உறுதிப்பாடும் இரசியாவின் திட்டமிடல் தவறுகளும் ஏற்படுத்தியுள்ளன. பல பாடங்களை போர் அனுபவமில்லாத சீனா கற்றுக் கொள்ல வேண்டியிருக்கும். சீனா தைவானை தனது நாட்டின் ஒரு பகுதியா இணைக்கும் நோக்கத்தை நிறைவேற்றும் நாளை தள்ளிப்போடும். அந்தக் கால இடைவெளியில் தைவானியர்களும் உக்ரேனிடமிருந்து பலவற்றைக் கற்றுக் கொள்வார்கள்.
உக்ரேனில் நடப்பது அயோக்கிய வல்லரசுகளின் ஆதிக்கப் போட்டி என்பதை மனதில் கொண்டு அங்கு நடப்பதைப் பார்ப்போமாக. London School Economics என்னும் பல்கலைக்கழகத்தின் வலைத்தளத்தில் வெளிவந்த கட்டுரை ஒன்றில் உக்ரேனை புட்டீனை மாட்ட வைக்கும் பொறியாக அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் சில நேட்டோ நாடுகள் பாவிக்கின்றன என ஒரு கட்டுரையை உலக அரசியல் பொருளாதார நிபுணரான Robert H Wade எழுதியுள்ளார். அவரின் கருத்துப் படி உக்ரேனை புட்டீன் ஆக்கிரமிக்கத் தூண்டும் சூழல் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. அவரை அங்கு சிக்க வைத்து இரசியப் பொருளாதாரத்தை சிதைத்து அவருக்கு எதிராக மக்களைக் கிளர்ந்து எழச் செய்வது புட்டீனின் எதிரிகளின் நோக்கம் என்கின்றார் Robert H Wade.
வல்லரசுகளுக்கு கவசம் அவசியம்.
ஒரு வல்லரசு நாட்டைச் சுற்றிவர ஒரு கவசப் பிரதேசம் இருத்தல் அவசியம். அப்பிரதேசத்தில் இருக்கும் அரசுகள் நட்பாக அல்லது நடுநிலையாக இருக்க வேண்டும். வலிமை மிக்க இரண்டு போட்டி நாடுகளிடையே இருக்கின்ற நாடுகள் எந்த நாட்டுக்கு கவச நாடாக இருப்பது என்ற போட்டி இடையில் இருக்கும் நாட்டிற்கு மிகவும் பாதகமாக அமையும். இந்தியாவிற்கு சீனாவிற்கும் இடையில் இருக்கும் நேப்பாளம் உருப்பட முடியாமல் இரண்டு நாடுகளும் சதி செய்கின்றன. நேப்பாளத்தின் நிலை இரண்டு யானைகள் சண்டை பிடித்தாலும் காதல் செய்தாலும் காலடியில் இருக்கின்ற புற்களுக்குத்தான் அழிவு என்பது போன்றது. சோவியத் ஒன்றியத்தின் இரும்பு வேலி நாடுகளாக போலாந்து, கிழக்கு ஜேர்மனி, செக்கோஸ்லோவாக்கியா, ஹங்கேரி, ருமேனியா, பல்கேரியா, அல்பேனியா ஆகிய நாடுகள் இருந்தன. இவை சோவியத் ஒன்றியத்தின் பகுதிகளல்ல ஆனால் இரசியா தலைமையிலான வார்சோ ஒப்பந்த நாடுகள் என ஒரு படைத்துறைக் கூட்டமைப்பாக வட அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் படைத்துறைக் கூட்டமைப்பான நேட்டோவிற்கு சவால் விடும் நாடுகளாக இருந்தன. அந்த இரும்பு வேலி 1991இல் வார்சோ கூட்டமைப்பு கலைக்கப்பட்ட பின்னர் தகர்ந்து போனது. “கூட்டு பாதுகாப்பு ஒப்பந்த நாடுகள்” என்னும் படைத்துறைக் கூட்டமைப்பை 1994-ம் ஆண்டு இரசியா ஜோர்ஜியா, அஜர்பைஜான், உஸ்பெக்கிஸ்த்தான், ஆர்மீனியா, பெலரஸ், கஜக்கஸ்த்தான், கிரிகிஸ்த்தான், தஜிகிஸ்த்தான் ஆகிய நாடுகளை இணைத்து உருவாக்கியது. ஆனால் அதில் இருந்து ஜோர்ஜியா, அஜர்பைஜான், உஸ்பெக்கிஸ்த்தான் பின்னர் விலகி விட்டன. அந்த பாதுகாப்பு கூட்டமைப்பில் ஜோர்ஜியாவும் உக்ரேனும் இருத்தல் அவசியம். உக்ரேனியர்களை நேட்டோ கூட்டமப்பு தனது பரப்புரைகள் மூலம் தம் பக்கம் கவர்ந்து விட்டது. நேட்டோவில் இணையக் கூடிய தகமை உக்ரேனுக்கோ அல்லது ஜோர்ஜியாவிற்கோ இல்லை. இருந்தும் அவை இரண்டையும் தாம் வரவேற்பதாக நேட்டோ நாடுகள் அறிவித்தன. பிரான்ஸ் மற்றும் ஜெர்மனை போன்ற இரசியாவுடன் முறுகலை விரும்பாத நாடுகள் ஜோர்ஜியாவும் உக்ரேனும் நேட்டோவில் இணைவதில் அக்கறை காட்டவில்லை.
நட்பற்றவர்களால் சூழப்பட்ட இரசியா
உலகிலேயே மிகப்பெரிய நிலப்பரப்பைக் கொண்ட இரசியாவைச் சூழ பதினைந்திற்கு மேற்பட்ட நாடுகள் இருக்கின்றன. வட துருவத்தில் அமெரிக்காவின் அலாஸ்க்கா மாகாணம் எல்லையாக இருக்கின்றது கிழக்கில் நேட்டோ நாடுகளான லத்வியா, லித்துவேனியா, எஸ்தோனியா, நோர்வே, போலாந்து ஆகிய நேட்டோ நாடுகள் உள்ளன. தூர கிழக்கில் அமெரிக்காவின் நெருங்கிய நாடாகிய ஜப்பான் இரசியாவுடன் கடல் எல்லையைக் கொண்டுள்ளது. தற்போது இரசியாவுடன் பல ஒத்துழைப்பைச் செய்யும் வல்லரசான சீனா இரசியாவுடன் எல்லையைக் கொண்டுள்ளது. அணுகுண்டு வைத்திருக்கும் வட கொரியாவும் இரசியாவுடன் எல்லையைக் கொண்டுள்ளது. உக்ரேனும் ஜோர்ஜியாவும் இரசியாவுடன் எல்லையைக் கொண்ட நாடுகள். 2008-ம் ஆண்டு ஜோர்ஜியாவை ஆக்கிரமித்து அதன் நிலப்பரப்பில் இரு பகுதிகளை தனி நாடாக்கியது இரசியா. 2014இல் உக்ரேனின் கிறிமியாவை இரசியா ஆக்கிரமித்து தன்னுடன் இணைத்துக் கொண்டது. அதே ஆண்டில் உக்ரேனின் கிழக்குப்பகுதியில் உள்ள இரண்டு மாகாணங்களையும் பிரித்து இரசியா தனி நாடாக்கியது. கஜகஸ்த்தானும் மொங்கோலியாவும் பிரச்சனை இல்லாத இரசியாவின் அயல் நாடுகள் எனக் கருதலாம். இரசியாவின் ஒரே நட்பு நாடு பெலாருஸ் மட்டுமே. இந்த சூழலில் இரசிய வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறைக்கான கொள்கை வகுப்பாளர்கள் பெரும் சவால்களை எதிர் கொள்கின்றார்கள்.
புட்டீனின் சோவியத்-2.0 கனவு
தற்போதைய இரசிய அதிபர் விளடிமீர் புட்டீன் 1991-ம் ஆண்டில் இரசியா தலைமையிலான சோவியத் ஒன்றியம் உடைந்ததை 20-ம் நூற்றாண்டில் நடந்த மோசமான புவிசார்-அரசியல் விபத்து எனக் கருதுகின்றார். மீண்டும் இரசியா தலைமையில் சோவியத் ஒன்றியம்-2ஐக் கட்டி எழுப்ப வேண்டும் என்ற கனவுடன் 1999-ல் ஆட்சிக்கு வந்த புட்டீன் 2020-ம் ஆண்டு இரசியா உலகின் முதற்தர வல்லரசாக வேண்டும் என்ற திட்டத்துடன் செயற்பட்டவர். சோவியத் ஒன்றியம் போல் பொருளாதாரம் மீது அதிக கவனம் செலுத்தாமல் படைத்துறையை மட்டும் கட்டி எழுப்பினால் போதாது என்பதை நன்கு உணர்ந்தவர். படைத்துறையை சிக்கனத்துடன் கட்டி எழுப்ப வேண்டும் என நினைப்பவர். இரசியாவை முன்பு ஆண்ட பொதுவுடமைக் கட்சியினர் படைக்கல உற்பத்தியில் சிக்கனத்தையோ பொருளாதாரத் திறனையோ கடைப்பிடிக்கவில்லை. மீண்டும் ஒரு சோவியத் ஒன்றியத்தை கட்டி எழுப்ப இரசியாவிற்கு மிகவும் அவசியமான நாடுகள் ஜோர்ஜியாவும் உக்ரேனும் ஆகும். இரண்டு நாடுகளையும் நேட்டோ கூட்டமைப்பில் இணைப்பது போல அமெரிக்கா நடிக்கின்றது. இரண்டு நாடுகளும் நேட்டோ என்னும் படைத்துறைக் கூட்டமைப்பிலும் ஐரோப்பிய ஒன்றியம் என்னும் பொருளாதாரக் கூட்டமைப்பிலும் இணைய விரும்புகின்றன. அப்படி இணைய முற்பட்டால் இரசியா அதைக் கடுமையாக எதிர்க்கும் என நேட்டோ நாடுகள் அறியும். இன்னொரு நாட்டுடன் போர் புரியக் கூடிய நிலையில் இருக்கும் ஒரு நாட்டை நேட்டோவில் இணைக்க முடியாது. உறுதியான அரசு, அமைதி, மனித உரிமைகளைப் பேணுதல், காத்திரமான பொருளாதாரம் போன்றவை உள்ள நாடுகள் மட்டுமே நேட்டோவில் இணையலாம். ச் ஜோர்ஜியாவும் நேட்டோவில் இணைய முயன்றமை விளடிமீர் புட்டீனைக் கடும் சினத்திற்கு உள்ளாக்கியுள்ளது. 2022 பெப்ரவரி மாதம் 24-ம் திகதி இரசியாவை சுற்றி ஒரு இரும்பு வேலி போடும் நோக்கத்துடன் இரசியப் படைகளை புட்டீன் உக்ரேனுக்கு அனுப்பினார்.
பொருளாதாரத்தால் இரசியாவை விழுத்தினார்களாம்
பொருளாதாரப் பிரச்சனையால் 1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் வீழ்ச்சி அடைந்தமைக்கு அது ஆப்கானிஸ்த்தானில் படையெடுத்தமை முக்கிய காரணமாகும். சோவியத்-2.0ஐக் கட்டி எழுப்பும் முயற்ச்சியை முளையிலேயே கிள்ளி எறிய அமெரிக்கா திட்டம் போட்டிருக்கலாம். அமெரிக்கா உக்ரேனுடன் ஒரு தொடர்ச்சியான போரை நடத்துவதற்கு அமெரிக்காவும் அதன் கூட்டாளி நாடுகளும் காத்திருந்த வேளையில் 2014-ம் ஆண்டு புட்டீன் ஒரு சில நாட்கள் செய்த படை நடவடிக்கையின் மூலம் இரசியாவிற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த கிறிமியாவைக் கைப்பற்றினார். அப்போரில் இரசியாவிற்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்படாமல் புட்டீன் பார்த்துக் கொண்டார். அதை சாட்டாக வைத்து உக்ரேனியர்களை நேட்டோவில் இணையத் தூண்டும் முயற்ச்சி மேற்கொள்ளப்பட்டது. உக்ரேனியர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட படைக்கலன்களும் போதிய பயிற்ச்சியும் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளால் வழங்கப்பட்டது. 2019 பெப்ரவரி மாதம் உக்ரேன் நாடாளுமன்றம் நேட்டோவில் உக்ரேன் இணையவேண்டும் என அதன் அரசியலமைப்பு யாப்பை திருத்தியது. இது புட்டீனுக்கு போடப்பட்ட தூண்டிலாக இருக்கலாம். 2020இல் சோவியத்-2.0 கட்டி எழுப்பும் திட்டத்துடன் இருந்த புட்டீனுக்கு இது பெரும் சினத்தை மூட்டியது. அப்போது பரவிய கொவிட்-19 பெருந்தொற்று அவருக்கு தடையாக இருந்தது. அமெரிக்காவின் ஆறாம் தலைமுறைப் போர்விமானங்களும். லேசர் படைக்கலன்களும் தொலைதூர தாக்குதல் விமானமான B-21 போன்றவை போர்க்களத்தில் முழுமையான பாவனைக்கு தயாராக முன்னர் 2022 பெப்ரவரியில் உக்ரேனுக்கு தன் படைகளை அனுப்பினார்.
உண்மையை உளறிக் கொட்டினாரா ஜோ பைடன்?
அமெரிக்க அதிபர் 2022 மார்ச் 26-ம் திகதி போலந்து தலைநகர் வார்சோவில் தயாரிக்காத உரை ஒன்றை ஆற்றும் போது “கடவுளிற்காக அந்தாள் (புட்டீன்) அதிகாரத்தில் இருக்கக் கூடாது” என்றார். இது அவர் புட்டீனை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் சொல்லவில்லை என்பதை உலகை நம்ப வைக்க அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் உட்பட பலர் சிரமப் பட்டார்கள். அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் அண்டனி பிலிங்கன் தங்களிடம் இரசியாவில் ஆட்சி மாற்றம் செய்யும் உபாயம் இல்லை என்றார். ஆனால் புட்டீன் உக்ரேனுக்கு படையனுப்பிய 2022 பெப்ரவரி 24-ம் திகதி தனது வெள்ளை மாளிகையில் உரையாற்றைய ஜோ பைடன் இரசியாமீது விதிக்கப்படும் பொருளாதாரத் தடைகள் ஆக்கிரமிப்பைத் தடுக்கும் நோக்கம் கொண்டவையல்ல மாறாக இரசியாவைத் தண்டிக்கச் செய்யப்பட்டவை. அதனால் இரசியர்களுக்கு புட்டீன் எதைக் கொண்டு வந்தார் என்பதை உணரவைக்க முடியும் என்றார். அதன் பின்னர் மூன்று நாள்கள் கழித்து பிரித்தானியப் படைத்துறை அமைச்சர் எழுதிய கட்டுரை ஒன்றில் புட்டீனின் தோல்வி முழுமையானதாக இருக்க வேண்டும். உக்ரேனிய இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும். இரசியர்கள் புட்டீன் தங்களைப்பற்றி என்ன எண்ணுகின்றார் என்பது உணர்த்தப் படவேண்டும். அதன் மூலம் புட்டீனின் நாட்கள் எண்ணப் படவேண்டும். புட்டீனுக்குப் பின்னர் இரசியாவை யார் ஆள்வது என்பதை முடிவு செய்ய முடியாத அளவிற்கு அவர் அதிகாரத்தை இழக்க வேண்டும் என்றார். 2022 மார்ச் முதலாம் திகதி பிரித்தானிய தலைமை அமைச்சரின் பேச்சாளர் இரசியா மீது கொண்டு வரப்பட்டுள்ள தடை புட்டீனின் ஆட்சியை முடிவிற்கு கொண்டு வரும் என்றார். இந்த அறிக்கைகள் உக்ரேனை நடுவணாக வைத்து மாஸ்க்கோவில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தும் அமெரிக்க உபாயத்தைப் பிரதிபலிக்கின்றன என்றார் உலக அரசியல் பொருளாதார நிபுணரான Robert H Wade. இரசியப் படையினர் உக்ரேனுக்குள் நுழைந்த பின்னர் அவர்களுக்கு உக்ரேனை புதைகுழியாக்கக் கூடிய வகையில் நேட்டோ நாடுகள் உக்ரேனியரகளுக்கு படைக்கலன்களை வழங்கிக் கொண்டிருக்கின்றனர். மறுபுறத்தில் இரசியப் பொருளாதாரத்தை பாதிக்கக் கூடிய வகையில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு பொருளாதாரத் தடைகளை இரசியாமிது விதிக்கின்றன நேட்டோ நாடுகள். அதே வேளை மேற்கு நாடுகளின் ஊடகங்கள் புட்டீனை ஒரு கொடூரமானவராகவும் மன நிலை சரியில்லாதவராகவும் சித்தரித்துக் கொண்டிருக்கின்றன.
Consortium News என்னும் இணையத் தளத்தில் Joe Lauria எழுதிய கட்டுரை ஒன்றில் மேற்கு நாடுகளின் இறுதி நோக்கம் புட்டீனை ஆட்சியில் இருந்து அகற்றி தமக்கு இணக்கமாக நடக்கக் கூடிய ஒருவரை இரசியாவின் ஆட்சி பீடத்தில் என்றார். ஆனால் இரசிய மக்கள் விழிப்புணர்வுள்ளவர்கள்.
இருபதாம்
நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து ஒவ்வோர் ஆண்டிலும் எங்காவது ஒரு போர் நடந்து கொண்டே
இருக்கின்றது. உலகின் ஒரு பகுதியில் நடந்த போர் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்துவது
அரிது. கொரியப் போர், வியட்னாம் போர், ஈராக் போர் போன்றவை உலகின் மறுபகுதிகளில் செய்திகளாக
மட்டுமே அடிபட்டன. ஆனால் உக்ரேன் மீது இரசியா தொடுத்த போருக்கு எதிராக நேட்டோ நாடுகள்
தொடர்ச்சியாக எடுத்து வரும் பொருளாதார தடைகள் உலகெங்கும் பெரும் பொருளாதாரப் பாதிப்பை
ஏற்படுத்தி கொண்டிருக்கின்றது. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் கொவிட்-19 பெரும் தொற்றால்
உலகப் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் வேளையில் உக்ரேன் போரும் இரசியாவிற்கு
எதிரான பொருளாதாரத் தடையும் உலகை ஆட்டிப்படைக்கின்றது. எரிபொருள் இறக்குமதி செய்யும்
நாடுகள் தவிக்கின்றன. சிதறிப்போயிருந்த உலக சரக்கு விநியோகச் சங்கிலி மேலும் சிதைவடைகின்றது.
எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகள் அமெரிக்க டொலரில் வைத்திருந்த வைப்பீடுகளின் பெறுமதி
தேயுமா என கரிசனை கொண்டுள்ளன.
மானம்
இழக்கும் இரசியா
போரில்
வெற்றி பெறுவதற்கு வான்படையின் வலிமை அவசியம் என்று புவிசார் அரசியல் கோட்டாளர்களின்
ஒருவரான அலெக்சாண்டர் பி டி செவேர்ஸ்கி வான் வலிமையே போரை வெல்லும் என்றார். உக்ரேனிலும்
பார்க்க பதினைந்து மடங்கு பெரிய இரசிய வான்படையால் உக்ரேன் மீது வான் ஆதிக்கம் செலுத்த
முடியவில்லை. ஆப்கானிஸ்த்தானில் இருபது ஆண்டுகளில் அமெரிக்கா இழந்த படையினரிலும் பார்க்க,
ஒன்பது ஆண்டுகளில் ஈராக்கில் அமெரிக்கா இழந்த படையினரிலும் பார்க்க இருமடங்கு எண்ணிக்கையான
படையினரை ஒரு மாதத்தில் இரசியா உக்ரேனில் இழந்து விட்டது. சிறந்த ஒருங்கிணைப்பின்மை,
வழங்கல் குறைபாடு, படையினரிடம் மன உறுதியின்மை, உகந்த உளவுத் தகவல் பெறமுடியாமை. எதிரியின்
வலுவை மதிப்பிடத் தவறியமை என பல குற்றச் சாட்டுகள் இரசியப்படையினர் மீது சுமத்தப்படுகின்றது.
உக்ரேன் போரில் இரசியா உலக அரங்கில் மானம் கெட்டு நிற்கின்றது. தன் எதிரிகளிடையே ஓர்
உறுதியான ஒற்றுமையையும் அது உருவாக்கியுள்ளது.
கையாலாகாத
நேட்டோவும் செல்லாக் காசான ஐநாவும்
உக்ரேனில்
நடக்கும் போரின் நடுப்புள்ளி நேட்டோவாகும். உக்ரேன் நேட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்த
போது அது சுவீடன் போல் ஒரு நடுநிலை நாடாக இருப்பதே உகந்தது அல்லாவிடில் பேரழிவு ஏற்படும்
என உக்ரேனுக்கு உண்மை நிலையை உணர வைக்காமல் உக்ரேன் நேட்டோவில் இணைவதற்கான கதவு திறந்திருக்கின்றது
என அதை ஊக்குவித்தது நேட்டோ. இப்போது உக்ரேனில் பெரும் சொத்தழிவும் உயிரிழப்புக்களும்
நடக்கும் போது அதைத் தடுக்க முடியாமல் நிற்கின்றது நேட்டோ. ஐநா பாதுகாப்புச் சபையில்
புட்டீனின் ஆக்கிரமிப்பைக் கண்டிக்க முடியவில்லை. பொதுச்சபையில் உக்ரேன் தொடர்பாக எடுக்கப்பட்ட
தீர்மானம் வெறும் காகிதம் மட்டுமே.
தூங்கிய
ஜெர்மனியை இடறி எழுப்பிய புட்டீன்
தனது
பொருளாதார வலிமையையும் புவிசார் சூழலையும் கருத்தில் கொள்ளாமல் குறைந்த அளவு நிதியை
பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கிக் கொண்டு இரசியாவில் இருந்து எரிபொருளை இறக்குமதி செய்து
இரசியாவிற்கு பெருமளவு ஏற்றுமதி செய்து கொண்டு சிவனே என இருந்த ஜெர்மனி உக்ரேன் போரால்
தனது பாதுகாப்பு செலவை அதிகரித்ததுடன் அமெரிக்காவிடமிருந்து ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமான
F-35A வாங்கவுள்ளது. மேலும் தன்னிடமுள்ள Eurofighter போர்விமானங்களை இலத்திரனியல் போர்
புரியக் கூடிய வகையில் மேம்படுத்தவுள்ளது. இரசிய ஆக்கிரமிப்பிற்கு ஒரே பதில் நேட்டோ
ஒற்றுமையும் படைவலிமையும் என்றது ஜெர்மனியின் பாதுகாப்புத்துறை. இரசியாவிற்கு அண்மையாக
ஒரு வலிமை மிக்க அரசாக ஜெர்மனி உருவாகின்றது.
பாடம்
கற்ற பிரான்ஸ்
ஐரோப்பிய
ஒன்றியம் தனக்கென ஒரு தனித்துவத்தைப் பேண வேண்டும் இரசியாவுடன் நல்லுறவை வளர்க்க வேண்டும்
எனப் போதித்து வந்தது. புட்டீனை 2022 பெப்ரவரி முதல் வாரத்தில் சந்தித்த பின்னர் பிரெஞ்சு
அதிபர் இம்மானுவேல் மக்ரோன் உக்ரேன் நெருக்கடியை தான் மோசமாக்க மாட்டேன் என புட்டீன்
தனக்கு உறுதிமொழி வழங்கியதென்றார். புட்டீன் ஒரு புரியாத புதிர் என அவர் பாடம் கற்றிருப்பார்
என நம்பலாம். பிரான்ஸிடம் உக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கி படைக்கலன்கள் உதவி முக்கியமாக
போர்த்தாங்கிள் வழங்கும் படி கேட்ட போது பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் மறுத்துவிட்டார்.
அவர் இரசியாவிற்கு அஞ்சுகின்றார் என ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியதுடன் பிரித்தானிய தலைமை
அமைச்சர் பொறிஸ் ஜோன்ஸனின் துணிச்சலைப் பாராட்டினார்.
ஒற்றைக்
கம்பியில் நடக்கும் இந்தியா
காலத்தால்
மாற்றமடையாத எச்சூழலிலும் நட்பும் உதவியும் செய்த இரசியா இந்தியாவின் சிறந்த நட்பு
நாடு. படைக்கலன் கொள்வனவு, படைத்துறைத் தொழில்நுட்ப வழங்கல், எரிபொருள் வழங்கல், தேவையான
போதெல்லாம் நிபந்தனையின்றி ஐநா பாதுகாப்புச் சபையில் இந்தியாவிற்கு சார்பாக தன் இரத்து
(வீட்டோ) அதிகாரத்தைப் பாவிப்பது போன்றவற்றை இரசியா செய்து வந்தது. அந்த இரசியாவைப்
பகைக்க கூடாது. பகைத்தால் இரசியா, பாக்கிஸ்த்தான், சீனா ஆகியவற்றின் கூட்டு இந்தியாவிற்கு
மோசமான ஆப்பு என்பதையும் இந்தியா அறியும். சீனாவை சமாளிக்கவும் வர்த்தகத்தை மேம்படுத்தவும்,
உலக அரங்கில் முன்னேற்றமான நிலையை அடையவும், புதிய தொழில்நுட்பங்களைப் பெறவும் அமெரிக்காவுடன்
இந்தியா ஒத்துழைக்க வேண்டும். இந்த இரண்டையும் சமநிலைப்படுத்த இந்தியா முயன்று கொண்டிருக்கின்றது.
அமெரிக்க அரசு இந்தியாவின் நிலையைப் புரிந்து கொண்டாலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள்
அதிருப்த்தி தெரிவித்துள்ளனர். இரசியா இந்தியாவின் நிலைப்பாட்டை வரவேற்றுள்ளது..
அணுக்குண்டைக்
கொண்டுவா என்ற ஜப்பான்
அணுக்குண்டால்
தாக்கப்பட்ட ஒரே ஒரு நாடாகிய ஜப்பான் உக்ரேனை புட்டீன் ஆக்கிரமித்தவுடன் தனது நாட்டில்
அமெரிக்காவின் அணுக்குண்டுகளைக் கொண்டு வந்து வைக்க வேண்டும் என்றார் ஜப்பானின் முன்னாள்
தலைமை அமைச்சர் சின்சோ அபே. இது சீனாவை கடும் சினத்திற்கு உள்ளாக்கியது. ஜப்பானும்
பிரித்தானியாவைப் போல் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை நிழல் போல் தொடர்கின்ற ஒரு நாடு.
இரசியாவை போரில் தோற்கடித்த ஒரே ஒரு ஆசிய நாடாகிய ஜப்பான் இரசியாவுடன் எல்லை முரண்பாட்டைக்
கொண்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாட்டால் ஜப்பான் தனது தெருவிளக்குகள், விளப்பரங்கள்
ஆகியவற்றின் ஒளி அளவைக் குறைத்துள்ளது.
சீனாவின்
காட்டில் மழை
இதுவரை
காலமும் இரசியா தன்னை Batmanஆகவும் சீனாவை Robinஆகவும் பார்த்து வந்தது. உக்ரேனுக்குள்
அனுப்பிய தனது படையினருக்கு போதிய உணவை வழங்க முடியாமல் சிரமப்படும் இரசியா சீனாவிடம்
தயாரித்த உணவுகளை கொடுக்கும் படியும் ஆளிலிவிமானங்களையும் வழிகாட்டல் ஏவுகணைகளையும்
அவசரமாக அனுப்பும்படியும் கேட்டுக் கொண்டது. இரசியாவில் இருந்து குறைந்த விலையில் எரிபொருளை
சீனா வாங்கப் போகின்றது. இரசிய நாணயம் வீழ்ச்சியடைவதை மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிக்கும்
சீனா இனி இரசியாவில் தவித்த முயல் அடிப்பது போல் பல சொத்துக்களை வாங்கக் காத்திருக்கின்றது.
அமெரிக்க எதிர்பாளர்களின் வண்டியில் ஓட்டுனர் இருக்கையில் இப்போது சீனா.
கல்லாக்
கட்டும் அமெரிக்கா
எங்கு
நாடுகளிடையே போர் மற்றும் முறுகல்கள் நடக்கும் அங்கு தனது படைக்கலன்களை விற்கவும் படைத்தளங்களை
அலைகின்ற அமெரிக்காவிற்கு உக்ரேன் போர் சிறந்த வாய்ப்பாகும். தன்னிடமுள்ள காலம் கடந்த
படைக்கலன்களை உக்ரேனுக்கு உதவியாக பாதி பாதி என வழங்கிக் கொண்டிருக்கின்றது. மற்ற நேட்டோ
நாடுகள் இரசியாவிற்கு அஞ்சி அமெரிக்காவிடம் படைக்கலன்களை வாங்குகின்றன. இரசியத் தாங்கிகளுக்கு
எதிராக அமெரிக்காவின் ஏவுகணைகள் சிறப்பாக செயற்படுவது அமெரிக்காவிற்கு சிறந்த விளம்பரம்.
செல்வாக்கிழந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
அமெரிக்காவில் எரிபொருள் விலையேற்றமும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட விலைவாசி அதிகரிப்பும் அமெரிக்கர் மத்தியில் அதிபர் ஜோ பைடனின் செல்வாக்கைக் குறைத்துள்ளது. 2022இன் இறுதியில் நடக்கவிருக்கும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் எல்லா மக்களவை தொகுதிகளிலும் மூன்றில் ஒரு மூதவை தொகுதிகளிலும் அவரது மக்களாட்சிக் கட்சி பின்னடைவைச் சந்திக்கலாம். அதனால் குடியரசுக் கட்சியினர் இரு அவைகளிலும் பெரும்பான்மை வலிமை பெற்றால் நினைத்தபடி ஆட்சி நடத்த முடியாத ஜோ பைடன் LAME DUCK President ஆவார்.
இலங்கையின்
நிலையை பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போல் எனச் சொல்வதிலும் பார்க்க மாடேறி
மிதித் தவன் மேல் பனை மரம் விழுந்தது போல் என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும்.
எரிபொருள் தட்டுப்பாட்டால் இலங்கை மீண்டும் எரியலாம்.